கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் 3-ஆம் இடத்தில் ரஹானே களமிறங்காதது ஏன்? – கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விளக்கம்

Ruturaj-and-Rahane
- Advertisement -

சென்னை அணியின் நட்சத்திர வீரரான அஜிங்கியா ரகானே நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது மூன்றாவது வீரராக களமிறங்காதது ஏன்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகளவு இருந்து வருகிறது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் குவித்தது. பின்னர் 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 27 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது.

- Advertisement -

8 பந்துகளில் 15 ரன்கள் அடித்திருந்த ரச்சின் ரவீந்திரா வைபவ் அரோரா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதனை தொடர்ந்து ருத்ராஜ் கெய்க்வாடுடன் மூன்றாவது வீரராக ரகானே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு பதிலாக மூன்றாவது வீரராக டேரல் மிட்சல் களமிறங்கினார்.

இப்படி ரஹானே களமிறங்காமல் மூன்றாவது வீரராக டேரல் மிட்சல் களம் இறக்கப்பட்டது ஏன்? இதில் ஏதாவது திட்டம் இருக்கிறதா? என்பது போன்ற கேள்விகள் அனைவரது மத்தியிலும் எழுந்திருந்தது. இந்நிலையில் இந்த போட்டிக்கு பின்னர் வெற்றி குறித்து பேசிய ருதுராஜ் ரகானே பேட்டிங் செய்ய களமிறங்காதது ஏன்? என்பது குறித்தும் பேசியிருந்தார்.

- Advertisement -

அதன்படி ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் : ரஹானே இந்த போட்டியின் போது பீல்டிங் செய்கையில் லேசான காயத்தை சந்தித்தார். அதன் காரணமாகவே அவர் முன்னெச்சரிக்கையாக பேட்டிங் செய்ய களம் இறங்காமல் ஓய்வறையில் இருந்து விட்டார். அதோடு அவர் களமிறங்காததால் எனக்கு கூடுதல் பொறுப்பு இருந்தது.

இதையும் படிங்க : ஏக்கமாக பேசிய ஜடேஜா.. தல, சின்னத்தல வரிசையில் புதிய பெயரை சூட்டிய சிஎஸ்கே – ரசிகர்கள்

குறிப்பாக மைதானம் சற்று சவாலாக இருந்ததால் நான் கடைசிவரை ஒருபுறம் நின்று விளையாட வேண்டும் என்று நினைத்தே விளையாடியதாக ருதுராஜ் கெய்க்வாட் கூறினார். இறுதியில் சென்னை அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement