அமெரிக்க டி20: 124க்கு ஆல் அவுட்.. 57 ரன்ஸ்.. நூர் அஹ்மத் மேஜிக்கில்.. லாஸ் ஏஞ்சல்ஸை சாய்த்த டிஎஸ்கே

Mlt20 TSK
- Advertisement -

அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் 2025 சீசன் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் ஜூன் 16ஆம் தேதி கலிபோர்னியாவில் இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு 5வது போட்டி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் பௌலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய டிஎஸ்கே அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் 8 (10) ரன்னில் தடுமாறி ரசல் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய டேவோன் கான்வே 34 (22) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய சைடேஜா முக்கமல்லா தமது பங்கிற்கு அதிரடியாக 31 (22) ரன்கள் எடுத்து அசத்தினார்.

- Advertisement -

டெக்சாஸ் அசத்தல்:

மிடில் ஆடரில் டேரில் மிட்சேல் நங்கூரமாக விளையாடி 36* (33) ரன்கள் எடுத்தார். எதிர்ப்புறம் வந்த சுபம் ரஞ்சனே 24 (19) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் கடைசி நேரத்தில் வெளுத்து வாங்கிய பெராரியா 32* (16) ரன்கள் விளாசி சூப்பர் கிங் சிங் கொடுத்ததால் 20 ஓவரில் டெக்சாஸ் 181/4 ரன்கள் குவித்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் அணிக்கு அதிகபட்சமாக டி சங்கா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அடுத்து விளையாடிய லாஸ் ஏஞ்சல்ஸ் அணிக்கு ஆண்ட்ரே ப்ளக்சர் 2 (5) ரன்னில் ஆடம் மில்னே வேகத்தில் நடையைக் கட்டினார். மறுபுறம் அடித்து நொறுக்க முயற்சித்த அலெக்ஸ் ஹேல்ஸ் 25 (17) ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவரை அவுட்டாக்கிய ஸ்டீபன் விக் அடுத்ததாக வந்த ஃசைப் பாதரை கோல்டன் டக் அவுட்டாக்கினார். அதற்கடுத்ததாக வந்து முரட்டுத்தனமாக அடித்த மேத்தியூ ட்ரோம்ப் 13 (12) ரன்களில் நூர் அஹ்மத் மேஜிக் பந்தில் கிளீன் போல்டானார்.

- Advertisement -

டெக்சாஸ் 2வது வெற்றி:

அதோடு நிற்காத அவர் அடுத்ததாக வந்த காட்டடி நாயகன் ஆண்ட்ரே ரசல் 1, சுனில் நரைனை 0 ரன்களில் அவுட்டாக்கி அசத்தினார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் போராடிய உன்முக்த் சந்த் 22 (23) ரன்களில் அவுட்டானார். இறுதியில் ஷேட்லே 27 (21), அலி கான் 16* (13) ரன்கள் எடுத்த போதிலும் 17.1 ஓவரில் லாஸ் ஏஞ்சல்ஸ் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையும் படிங்க: விராட், ரோஹித் பாயிடம் கத்துக்கிட்ட இந்த 2 கேப்டன்ஷிப் விஷயங்களை.. இங்கிலாந்தில் யூஸ் பண்ணுவேன்.. கில் பேட்டி

அதனால் 57 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்ற டெக்சாஸ் அணிக்கு அதிகபட்சமாக நூர் அகமது 4 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அவருடன் ஆடம் மில்னே, ஸ்டீபன் விக் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதையும் சேர்த்து இரண்டாவது வெற்றியையும் பெற்றுள்ள டெக்ஸாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Advertisement