9 சிக்ஸ் 103 ரன்ஸ்.. டு பிளேஸிஸ் மிரட்டல் சதம்.. எம்ஐ அணியை வீழ்த்திய டிஎஸ்கே.. சிஎஸ்கே போல ஹாட்ரிக் தகுதி

Faf Du Plessis 2
- Advertisement -

அமெரிக்காவில் 2025 மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் ஜூன் 30ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு டாலஸ் நகரில் 21வது போட்டியில் நடைபெற்றது. அதில் ஐபிஎல் தொடரின் பரம எதிரிகளான சென்னை மற்றும் மும்பை அணிகளின் கிளை அணிகளான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் மோதின.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ நியூயார்க் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய டிஎஸ்கே அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். மற்றொரு துவக்க வீரர் ஸ்மித் பட்டேல் தடுமாற்றமாக விளையாடி 3 (6) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதற்கடுத்ததாக வந்த சைதேஜா முக்கமல்லா அதிரடியாக விளையாட முயற்சித்து 25 (18) ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

டு பிளேஸிஸ் மிரட்டல்:

இந்தப் பக்கம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டு பிளேஸிஸ் 21 பந்துகளில் அரை சதத்தை அடித்தார். எதிர்ப்புறம் வந்த மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் தடுமாற்றமாக விளையாடி 25 (22) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனால் அடுத்ததாக வந்த டோனாவின் ஃபெராரியா பட்டாசாக விளையாடி 3 பவுண்டரி 5 சிக்சரை பறக்க விட்டு 53* (20) ரன்னில் அவுட்டானார்.

மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அட்டகாசமாக விளையாடிய டு பிளேஸிஸ் 5 பவுண்டரி 9 சிக்சருடன் 194.34 ஸ்ட்ரைக் ரேட்டில் மிரட்டலான சதத்தை விளாசி 103* (53) ரன்களுடன் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் டிஎஸ்கே 223/4 ரன்களை அடித்து அசத்தியது. எம்ஐ நியூயார்க் அணிக்கு அதிகபட்சமாக ருசி உகர்கர், ஜார்ஜ் லிண்டே தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

சிஎஸ்கே போல ஹாட்ரிக் தகுதி:

அடுத்ததாக விளையாடிய நியூயார்க் அணிக்கு கேப்டன் நிக்கோலஸ் பூரான் 8, மோனக் பட்டேல் 6 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த குயின்டன் டீ காக்’கை 35 (25) ரன்னில் அவுட்டாக்கிய அகில் ஹொசைன் அடுத்ததாக வந்த தைஜேந்திர சிங்கை 15 (12) ரன்களில் காலி செய்தார். அதனால் 75/4 என தடுமாறிய அந்த அணிக்கு கைரன் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி போராடினார்.

ஆனால் எதிர்ப்புறம் மைக்கேல் பிரேஸ்வெல் 26, ஜார்ஜ் லிண்டே 6 ரன்னில் அவுட்டாகி கை கொடுக்கத் தவறினர். இறுதியில் பொல்லார்ட் வெறித்தனமாக போராடி 70 (39) ரன்கள் அடித்தும் 20 ஓவரில் எம்ஐ நியூயார்க்கை 184/9 ரன்களுக்கு கட்டுப்படுத்திய டிஎஸ்கே 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையும் சேர்த்து 7 போட்டிகளில் 5வது வெற்றியைப் பெற்ற டிஎஸ்கே 2023, 2024க்குப்பின் தொடர்ந்து 3வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதையும் படிங்க: டேல் ஸ்டெயினை நாங்க யூஸ் பண்ண மாதிரி.. பும்ராவை இந்தியா யூஸ் பண்ணனும் – அட்வைஸ் வழங்கிய ஏ.பி.டி

ஐபிஎல் தொடரில் 2008, 2009, 2010 ஆகிய முதல் 3 வருடங்களிலும் சிஎஸ்கே நாக் அவுட் சுற்றுக்கு சென்றதைப் போல அமெரிக்காவில் டிஎஸ்கே அணியும் தகுதி பெற்றுள்ளது. அந்த அணிக்கு அகில் ஹொசைன் 3, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2, நன்ரே பர்கர் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் பங்காற்றினர்.

Advertisement