- Advertisement -
டி20

அமெரிக்க டி20: 60க்கு ஆல் அவுட்.. சீட்டல் அணியை தெறிக்க விட்ட டிஎஸ்கே.. 2வது லோ ஸ்கோர் சாதனை வெற்றி

அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2025 சீசன் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் ஜூன் 17ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு கலிபோர்னியா நகரில் 7வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சீட்டல் ஆர்க்கஸ் அணிகள் மோதின.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய டிஎஸ்கே அணிக்கு துவக்க வீரர்கள் டேவோன் கான்வே 13 (17), கேப்டன் டு பிளேஸிஸ் 7 (12) ரன்னில் அவுட்டாகி பெரிய பின்னடைவைக் கொடுத்தனர். அடுத்ததாக வந்த டேரில் மிட்சேல் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் அதிரடி காட்டிய சைதேஜா 30 (23) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் அடித்து நொறுக்கி 28 (12) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

ஓடவிட்ட டிஎஸ்கே:

அடுத்த சில ஓவரில் மறுபுறம் தடுமாற்றமாகவே பேட்டிங் செய்த டேரில் மிட்சேல் 25 (26) ரன்களில் அவுட்டானார். இறுதியில் கல்வின் செவேஜ் 9, மிலிந்த் குமார் 18* (13), சுபம் ராஜ்னே 15* (8) ரன்களை எடுத்த உதவியுடன் 20 ஓவரில் டெக்ஸாஸ் 153/6 ரன்கள் எடுத்தது. சீட்டல் அணிக்கு அதிகபட்சமாக ஹர்மிட் சிங், ஜஸ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அடுத்ததாக விளையாடிய சீட்டல் அணிக்கு துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் 9, கெய்ல் மேயர்ஸ் 0, ஸ்டீவன் டெய்லர் 4 ரன்களில் அவுட்டானார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த கேப்டன் ஹென்றிச் க்ளாஸென் கோல்டன் டக் அவுட்டானதால் சீட்டல் 17-4 என ஆரம்பத்திலேயே திண்டாடியது. அப்போது நிதானமாக விளையாட முயற்சித்த ஆரோன் ஜோன்ஸ் 17 (17) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

2வது லோ ஸ்கோர் வெற்றி:

அதே போல லோயர் மிடில் ஆர்டரில் சிக்கந்தர் ராசா 4, சுஜித் நாயக் 5 என அடுத்து வந்த பேட்ஸ்மேன்களையும் டிஎஸ்கே பவுலர்கள் வந்த வாக்கிலேயே பெவிலியன் அனுப்பினார்கள். இறுதியில் ஜஸ்தீப் சிங் 12 (26) ரன்கள் எடுத்த போதிலும் 13.5 ஓவரிலேயே சீட்டல் அணியை 60 ரன்களுக்கு சுருட்டி வீசிய டிஎஸ்கே 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: 3 சூப்பர் ஓவர்கள்.. அரிய சாதனை போட்டியில்.. இந்தியாவை முந்தி நெதர்லாந்து உலக சாதனை வெற்றி

அதிகபட்சமாக ஜியா-உல்-ஹக், நன்ரே பர்கர், நூர் அஹ்மத் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இதனால் இத்தொடரில் 3வது வெற்றியைப் பெற்ற டிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் மேஜர் லீக் டி20 தொடரில் 2வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை சீட்டல் படைத்துள்ளது. இதற்கு முன் 2024 சீசனில் வாஷிங்டன் ஃபிரீடம் அணிக்கு எதிராக எம்ஐ நியூயார்க் 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே முந்தைய சாதனை.

- Advertisement -