3 சூப்பர் ஓவர்கள்.. அரிய சாதனை போட்டியில்.. இந்தியாவை முந்தி நெதர்லாந்து உலக சாதனை வெற்றி

Netherlands
- Advertisement -

ஸ்காட்லாந்து, நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. ஸ்காட்லாந்து நாட்டில் இருக்கும் கிளாஸ்க்கோ நகரில் நடைபெறும் அந்தத் தொடரின் 2வது போட்டி ஜூன் 16ஆம் தேதி நடைபெற்றது. அந்தப் போட்டியில் நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற நேபாள் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து 20 போராடி 152/7 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக விக்ரம்ஜித் சிங் 30, தேஜா நிதமனரு 35, சகிப் ஜூல்பிகர் 25* ரன்கள் அடித்து அசத்தினார்கள். நேபாள் அணிக்கு அதிகபட்சமாக நந்தன் யாதவ் 3, சந்தீப் லமிசன்னே 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். அடுத்து விளையாடிய நேபாள் அணியும் 20 ஓவரில் போராடி 152/8 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது.

- Advertisement -

3 சூப்பர் ஓவர்கள்:

அதிகபட்சமாக குசால் புர்டேல் 34, கேப்டன் ரோஹித் பௌடேல் 48 ரன்கள் எடுத்தார்கள். கடைசி நேரத்தில் நந்தன் யாதவ் 12* (4) ரன்கள் அடித்தும் முழுமையான வெற்றியைப் பெற முடியவில்லை. நெதர்லாந்து அணிக்கு அதிகபட்சமாக டேனியல் டோரம் 3, விக்ரம்ஜித் சிங் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த நேபால் 19/1 ரன்கள் குவிதத்து.

அதிகபட்சமாக குஷால் புர்டேல் அடித்து நொறுக்கி 18* (5) ரன்கள் குவித்தார். ரோஹித் பௌடேல் 1* ரன் எடுத்த நிலையில் சூப்பர் ஓவரை வீசிய நெதர்லாந்தின் டேனியல் டோராம் 1 விக்கெட் எடுத்தார். அடுத்ததாக பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி நேபாள் பவுலர் கரண் வீசிய சூப்பர் ஓவரில் மிகச்சரியாக 19/0 ரன்கள் எடுத்ததால் போட்டி மீண்டும் சமனில் முடிந்தது. நெதர்லாந்துக்கு மைக்கேல் லேவிட் 6* (3) மேக்ஸ் ஓ’தாவுத் 12* (3) ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

அரிதான போட்டி:

அதைத்தொடர்ந்து நேபாளின் லலித் ராஜ்பன்சி வீசிய 2வது சூப்பர் ஓவரில் ஸ்காட் எட்வர்ட்ஸ் 9 (4), மேக்ஸ் ஓ’தாவுத் 7* (2) ரன்கள் எடுத்த உதவியுடன் நெதர்லாந்து 17/1 ரன்கள் எடுத்தது. ஆனால் அடுத்து விளையாடிய நேபாள் அணியும் ரோஹித் பௌடேல் 7* (2), திபேந்திர சிங் 10* (4) ரன்களை எடுத்த உதவியுடன் 17/0 ரன்கள் எடுத்ததால் போட்டி மீண்டும் சமனில் முடிந்தது.

இறுதியில் நடத்தப்பட்ட 3வது சூப்பர் ஓவரில் நெதர்லாந்து பவுலர் ஜாச் லயன்-காச்சேட் 1 ரன் கூட கொடுக்காமல் ரோஹித் பௌடேல், ரூபேஷ் சிங்கை டக் அவுட்டாக்கி 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் நேபாள் 0/2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக விளையாடிய நெதர்லாந்துக்கு சந்தீப் லமிசன்னே வீசிய 3வது சூப்பர் ஓவரில் மைக்கேல் லேவிட் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்தார்.

இதையும் படிங்க: சாய் சுதர்சன், அர்ஷ்தீப் சிங்கிற்கு இடமில்லை.. முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்த – தீப்தாஸ் குப்தா

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3 சூப்பர் ஓவர்கள் நடைபெற்ற முதல் போட்டியாக இப்போட்டி உலக சாதனை படைத்தது. அத்துடன் ஒரு டி20 சர்வதேச போட்டியில் அதிக சூப்பர் ஓவர்களில் விளையாடி வென்ற அணி என்ற உலக சாதனையை நெதர்லாந்து படைத்துள்ளது. இதற்கு முன் 2023 ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா 2 சூப்பர் ஓவரில் விளையாடி வென்றதே முந்தைய சாதனை.

Advertisement