15 ரன்ஸ்.. காட்டுத்தனமாக அடித்த ரசித் கான்.. மும்பையிடம் கைமீறிய வெற்றியை கடைசியில் டிஎஸ்கே பறித்தது எப்படி?

TSK vs MI
- Advertisement -

அமெரிக்காவில் ஐபிஎல் போல மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த தொடரின் 2024 சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஜூலை 15ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு டாலாஸ் நகரில் 12வது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

அப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ நியூயார்க் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய டெக்சாஸ் அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் மற்றும் டேவோன் கான்வே ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். அந்த வகையில் 85 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த இந்த ஜோடியில் கேப்டன் டு பிளேஸிஸ் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 61 (38) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

டிஎஸ்கே வெற்றி:
அதே போல மறுபுறம் அதிரடியாக விளையாடிய டேவோன் கான்வே 40 (28) ரன்களில் அவுட்டானார். ஆனால் அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஆரோன் ஹார்டி 22 (17) மார்கஸ் ஸ்டோனிஸ் 24* (8), செவேஜ் 10 (6) ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதனால் 20 ஓவரில் டெக்சாஸ் 176/7 ரன்கள் எடுத்த நிலையில் எம்ஐ நியூயார்க் சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதைத்தொடர்ந்து 177 ரன்களை துரத்திய எம்ஐ அணிக்கு ரூபன் க்ளின்டன் 7, ஸ்டீவ் டெய்லர் 18 ஆகிய துவக்க வீரர்களை மார்கஸ் ஸ்டோனிஸ் சொற்ப ரன்களில் காலி செய்தார். அப்போது வந்த நிக்கோலஸ் பூரான் 1, கேப்டன் பொல்லார்ட் 5 ஆகிய முரட்டுத்தனமாக அடிக்கும் பேட்ஸ்மேன்களை ஜியா-உல்-ஹக் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாக்கினார். போதாகுறைக்கு டிம் டேவிட் 6 ரன்னில் அவுட்டானதால் எம்ஐ அணி 52/5 என ஆரம்பத்திலேயே திணறியது.

- Advertisement -

அதன் காரணமாக டிஎஸ்கே எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் 4வது இடத்தில் களமிறங்கியிருந்த மோனக் பட்டேல் நிதானமாக விளையாடினார். ஆனால் அவருடன் அடுத்ததாக சேர்ந்த ரசித் கான் தம்முடைய ஸ்டைலில் காட்டுத்தனமாக அடித்து நொறுக்கி வெற்றிக்கு போராடினார். அந்த வகையில் கடைசி நேரத்தில் டெக்ஸாஸ் பவுலர்களை அடித்து நொறுக்கிய இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்குக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து எம்ஐ அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது.

ஆனால் அப்போது 19வது ஓவரில் வெற்றியின் குறுக்கே வந்த ட்வயன் ப்ராவோ துல்லியமாக பந்து வீசி வெறும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதை வீணடிக்காமல் 4 பவுண்டரி 6 சிக்ஸருடன் 50 (23) ரன்கள் விளாசி அச்சுறுத்தலை கொடுத்த ரசித் கானை கடைசி ஓவரின் முதல் பந்தில் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் அவுட்டாக்கினார். அதே வேகத்தில் 5வது பந்தில் மோனக் பட்டேலையும் 61 (45) ரன்களில் ஸ்டோனிஸ் அவுட்டாக்கினார்.

இதையும் படிங்க: ரோஹித், கோலி, தோனி ஆகியோரது எலைட் சாதனை பட்டியலில் இடம்பிடித்து சஞ்சு சாம்சன் அசத்தல் – விவரம் இதோ

அதனால் 20 ஓவரில் எம்ஐ நியூயார்க் அணியை 161/7 ரன்களுக்கு கட்டுப்படுத்திய டெக்ஸாஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது. அந்த அணிக்கு மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 4, ஜியா-உல்-ஹக் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அப்படி ஐபிஎல் தொடரில் தங்களுடைய பரம எதிரியான மும்பையை இங்கேயும் தோற்கடித்தது சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

Advertisement