டிஎன்பிஎல் 2024 : 126 ரன்ஸ் மெகா பார்ட்னர்ஷிப்.. வலுவான மதுரையை சாய்த்த திருச்சி.. புள்ளிப்பட்டியலில் அதிரடி

TNPL 7
- Advertisement -

தமிழ்நாடு பிரிமியர் லீக் 2024 டி20 தொடரில் ஜூலை 9ஆம் தேதி ஏழாவது போட்டி நடைபெற்றது. சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் மதுரை பேந்தர்ஸ் மற்றும் திருச்சி சோழாஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மதுரை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய திருச்சிக்கு அர்ஜுன் மூர்த்தி முதல் ஓவரிலேயே 1 ரன்னில் குர்ஜப்னீத் சிங் வேகத்தில் அவுட்டானார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் வாசிம் அகமது அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சியாம் சுந்தர் நிதானமாக விளையாடி 30 (28) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

திருச்சி வெற்றி:
ஆனால் அடுத்ததாக வந்த சஞ்சய் யாதவ் மதுரை பவுலர்களை அடித்து நொறுக்கினார். அதே போல மறுபுறம் தம்முடைய பங்கிற்கு வெளுத்து வாங்கிய வாசிம் அகமது அரை சதமடித்து வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். அந்த வகையில் 10வது ஓவரில் இணைந்த இந்த ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் 3வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டியது.

அதனால் 20 ஓவரில் திருச்சி 193/2 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு வாசிம் அகமது 7 பவுண்டரி 5 சிக்ஸருடன் 90* (55) ரன்களும் சஞ்சய் யாதவ் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 60* (33) ரன்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 194 ரன்களை துரத்திய மதுரைக்கு எதிராக ஆரம்பம் முதலே திருச்சி பவுலர்கள் கச்சிதமாக பந்து வீசினர். அதனால் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறிய மதுரை சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 16.4 ஓவரில் 126 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அந்த அணிக்கு லோகேஸ்வர் 7, கௌசிக் 1, அக்ரம் கான் 11, ஸ்வப்னில் சிங் 18 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். அதிகபட்சமாக கேப்டன் ஹரி நிஷாந்த் 39 (20) ரன்கள் எடுத்த நிலையில் திருச்சி சார்பில் அதிகபட்சமாக அதிசயராஜ் டேவிட்சன் 2, சஞ்சய் யாதவ் 3, ராஜ்குமார் 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வென்ற திருச்சி தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது.

இதையும் படிங்க: 84க்கு ஆல் அவுட்.. சுருட்டி வீசிய இந்தியா.. தென்னாப்பிரிக்காவை ஒரு வெற்றியை கூட பெற விடாமல் அசத்தல்

மேலும் ரன் ரேட் அடிப்படையில் சேலம், நெல்லை, திண்டுக்கல், மதுரை ஆகிய அணிகளை பின்னுக்குத் தள்ளிய திருச்சி 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் அதிரடியாக இரண்டாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியது. முதலிடத்தில் நடப்புச் சாம்பியன் கோவை 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. மறுபுறம் மோசமான தோல்வியை சந்தித்த மதுரை இருப்பதிலேயே மோசமான ரன்ரேட்டை பெற்று 6வது இடத்திற்கு சரிந்தது.

Advertisement