PBKS : பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பதிவியில் இருந்து வெளியேறிய கும்ப்ளே – புதிய கோச் நியமனம்

kumble
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அறிமுக அணியாக விளையாடிய ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான நடவடிக்கைகள் தற்போதே எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போதைய தயாராகி வருகின்றன.

MI vs PBKS

மேலும் ஒரு சில அணிகள் தங்களது பயிற்சியாளர்களை மாற்றியும் தற்போது தங்கள் அணியை வலுப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே மும்பை தங்களது பயிற்சியாளரை மாற்றியிருந்த வேளையில் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அனில் கும்பளே பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து வெளியேறியுள்ளார்.

- Advertisement -

கடந்த மூன்று ஆண்டுகளாக பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அவரது தலைமையின் கீழ் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதுமட்டும் இன்றி இதுவரை ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் அணி ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வெல்லாததால் எப்படியாவது கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்பை காட்டி வருகிறது.

Bayliss

அந்த வகையில் அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வெளியேறியதை அடுத்து ஐபிஎல் தொடரில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராக பதவி வகித்த ஒரு நட்சத்திர பயிற்சியாளரை அந்த அணி தற்போது தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

- Advertisement -

அதன்படி ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரரான டிரிவோர் பெய்லிஸ் என்பவரை தலைமை பயிற்சியாளராக பஞ்சாப் அணி நியமித்துள்ளது. இவரது தலைமையின் கீழ் கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அதோடு 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றும்போதும் அவரே இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஆரம்பத்திலேயே அவங்க 2 பேரையும் அவுட் ஆக்கிட்டா இந்தியா 70 ரன்னுக்கு சுருண்டுரும் – அஸ்கர் ஆப்கான்

அதுமட்டுமின்றி பிக்பேஷ் தொடரிலும் முக்கிய பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அவர் பல்வேறு வெற்றிகரமான அணிகளுடன் செயல்பட்டுள்ளதால் அவரை பஞ்சாப் அணி புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement