ஆரம்பத்திலேயே அவங்க 2 பேரையும் அவுட் ஆக்கிட்டா இந்தியா 70 ரன்னுக்கு சுருண்டுரும் – அஸ்கர் ஆப்கான்

Asghar-Afghan
Advertisement

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரானது நெருங்கி வரும் இவ்வேளையில் அந்தத் தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அந்த தொடரில் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்ததால் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை கைப்பற்றும் முனைப்போடு தயாராகி வருகிறது.

IND

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த டி20 உலக கோப்பையில் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பார்க்கப்படுகின்றன. அதே வேளையில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து என மற்ற அணிகளும் சரிசமமான பலத்துடன் உள்ளதால் இம்முறை கோப்பையை கைப்பற்றுவதில் போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஏகப்பட்ட முன்னாள் வீரர்கள் இந்திய அணி குறித்த கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான அஸ்கர் ஆப்கான் கூறிய இந்திய அணி பற்றி பேசிய கருத்து ஒன்று தற்போது பரபரப்பாக மாறியுள்ளது.

rohith

அதன்படி அஸ்கர் ஆப்கான் இந்திய அணி குறித்து பேசுகையில் : இந்திய அணிக்கு எதிராக நாங்கள் எப்போதெல்லாம் விளையாடுகிறோமோ அப்போதெல்லாம் ரோஹித் மற்றும் கோலிக்கு எதிராகத்தான் திட்டங்கள் தீட்டுவோம். அவர்கள் இருவரே இந்திய அணியின் மிகச் சிறப்பான பேட்ஸ்மேன்கள் அவர்கள் இருவரையும் போட்டியின் ஆரம்பத்திலேயே வீழ்த்தி விட்டால் பாதி பலம் காலி ஆகிவிடும்.

- Advertisement -

நாங்கள் மட்டுமல்ல எந்த அணியுமே அப்படித்தான் அவர்கள் இருவருக்கும் எதிராக திட்டம் தீட்டுவார்கள். ஏனெனில் அவர்கள் இருவருமே தனிநபர்களாக போட்டியை வென்று விடுக்க கூடிய வல்லவர்கள். அப்படிப்பட்ட அந்த மாபெரும் இரண்டு பேட்ஸ்மேன்களை வீழ்த்தி விட்டால் அதன் பின்னர் இந்திய அணி ரன்கள் குவிப்பது கஷ்டமாகிவிடும்.

இதையும் படிங்க : கிரிக்கெட் தவிர்த்து ரிஷப் பண்ட்டுக்கு செட்டாக கூடிய 3 வேலைகள் – வித்யாச பதிவு

போட்டியின் ஆரம்பத்திலேயே ரோஹித் மற்றும் கோலி ஆகியோரை சொற்ப ரன்களில் வீழ்த்தினால் நிச்சயம் இந்திய அணியை டி20 கிரிக்கெட்டில் 60 முதல் 70 ரன்களுக்குள் சுருட்டி விடலாம் என அஸ்கர் ஆப்கான் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து சற்று விமர்சனத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் ரசிகர்கள் காரசாரமான பதில்களை அவரது இந்த கருத்திற்கு எதிராக பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement