என்னோட ஆசையே அதுதான்.. ஆனா அது நடப்பது ரொம்ப கஷ்டம்னு எனக்கு தெரியும் – ஆட்டநாயகன் ட்ரென்ட் போல்ட்

Trent Boult
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் ஆட்டமானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

டி20 போட்டிகளில் என்னோட ஆசை இதுதான் : ட்ரென்ட் போல்ட்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே குவித்தது. சன்ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ஹென்றிச் கிளாசன் 71 ரன்களையும், அபினவ் மனோகர் 43 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு 15.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 146 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 70 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 40 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ட்ரென்ட் போல்ட் 4 ஓவர்களை வீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இதன் காரணமாக அவருக்கு நேற்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் போல்ட் கூறியதாவது :

- Advertisement -

இந்த போட்டியின் வெற்றிக்கு என்னுடைய பங்களிப்பை வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சி. அடுத்தடுத்த போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்று வருவது மிகவும் சந்தோஷமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சன்ரைசர்ஸ் அணியை அவர்களது சொந்த மண்ணில் குறைந்த ரன்களில் சுருட்டியது மிகச் சிறப்பான ஒன்று. நான் என்னுடைய பந்துவீச்சில் பேட்ஸ்மேன்களை எளிதாக ரன் குவிக்க விடாமல், சரியான இடத்தில் பந்துவீச நினைத்தேன். பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தத்தை வைத்தால் விக்கெட்டுகள் விழும் என்று நினைத்தேன். அந்த வகையிலேயே எனக்கு இன்று விக்கெட்டுகளும் கிடைத்தன.

இதையும் படிங்க : முதல் மேட்ச்ல 280 அடிச்ச ஹைதராபாத்.. இப்படி தொடர்ச்சியா தோற்க இதான் காரணம்.. கம்பேக் பற்றி கமின்ஸ் கவலை

டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக நான்கு ஓவர்கள் பந்து வீசவேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஏனெனில் பந்து ஸ்விங் ஆகும்போது தொடர்ச்சியாக நான்கு ஓவர்களை வீசுவதில் எந்த தவறும் இல்லை ஆனால் அது நடக்காது என்பது எனக்கு தெரியும். எனவே எங்கு என்னை பந்துவீச அழைத்தாலும் அப்போது பந்துவீச தயாராக இருக்கிறேன். இந்த ஆண்டு என்னுடைய ரோலில் பெரிய மாற்றம் இருக்கிறது என ட்ரென்ட் போல்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement