முதல் மேட்ச்ல 280 அடிச்ச ஹைதராபாத்.. இப்படி தொடர்ச்சியா தோற்க இதான் காரணம்.. கம்பேக் பற்றி கமின்ஸ் கவலை

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி ஹைதராபாத் நகரில் 41வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஹைதராபாத்தை அதனுடைய சொந்த மண்ணில் மும்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஹைதராபாத் 144 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஹென்றிச் கிளாசின் 71, அபினவ் மனோகர் 43 ரன்கள் எடுத்த நிலையில் மும்பைக்கு அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

அடுத்து விளையாடிய மும்பைக்கு ரோஹித் சர்மா 70 சூரியகுமார் யாதவ் 41* ரன்கள் எடுத்தனர். அதனால் 15.4 ஓவரிலேயே இலக்கைத் தொட்ட மும்பை தங்களுடைய ஐந்தாவது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் 6வது தோல்வியை சந்தித்த ஹைதராபாத் தொடர்ந்து ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

ஹைதெராபாத் தோல்வி:

இந்நிலையில் இந்த வருடம் முதல் போட்டியிலேயே 286 ரன்கள் அடித்து மிரட்டல் வெற்றி பெற்ற ஹைதராபாத் அதன் பின் சொந்த மண்ணில் தோற்க பிட்ச்சை சரியாகப் படித்து விளையாடாதது முக்கிய காரணம் என்று கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார். அது போன்ற பிட்ச்சில் தங்களுடைய பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் நிதானமாக விளையாடாததும் தோல்விக்கு மற்றொரு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

இங்கிருந்து பிளே ஆஃப் செல்ல அடுத்தப் போட்டிகளில் வேகமாக பிட்ச் பற்றி உணர்ந்து வெற்றிகளை பெற வேண்டும் என்றும் கமின்ஸ் கவலை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அபினவ் – க்ளாஸென் ஆகியோர் எங்களுக்கு நல்ல ஸ்கோரை எடுத்தனர். ஆனால் எங்களால் அந்த இன்னிங்ஸை முழுமையாக நன்றாக விளையாட முடியவில்லை”

- Advertisement -

கமின்ஸ் கவலை:

“கப்பலை நங்கூரப் படுத்தக்கூடிய ஒருவர் எங்களுக்கு தேவை. இந்த பிட்ச்சில் நீங்கள் உங்களுடைய ஆட்டத்தைக் கட்டமைக்க வேண்டும். அதற்கு ஆரம்பத்தில் சில பந்துகளை நிதானமாக எதிர்கொண்டால் பின்னர் அதிரடியாக விளையாடலாம். முதல் போட்டியில் இங்கே நாங்கள் 280+ ரன்கள் அடித்து வென்றோம். பின்னர் அதே பிட்ச் மேலே நாங்கள் உருட்டினோம்”

இதையும் படிங்க: திட்டம் போடாமயே.. ஹைதராபாத்தை சாய்த்து 4வது தொடர் வெற்றி பெற இதான் காரணம்.. கேப்டன் பாண்டியா மகிழ்ச்சி

“டி20 கிரிக்கெட்டில் வெற்றி இடைவெளை மிகவும் சிறியதாக இருக்கும். எனவே நீங்கள் கொடுக்கப்பட்ட நாளில் சிறப்பாக விளையாட வேண்டும். எங்களுக்கு இன்னும் சில போட்டிகள் இருக்கிறது. அதில் முடிந்தளவுக்கு வேகமாக ஒவ்வொரு பிட்ச்சையும் படிப்பது அவசியம். சில நாட்களில் எங்களுடைய பேட்டிங் ஆல் அவுட்டாகக்கூடிய அட்டாக் போல இருக்கும். சில நாட்களில் அது எங்களுடைய ஆப்ஷன்களை எடை போடுவது பற்றியதாகும்” என்று கூறினார்.

Advertisement