அவர் எங்க டீமுக்குள்ள வந்ததுல இருந்து எங்க டீமே வேறலெவல் ஆயிடுச்சி – ட்ரென்ட் போல்ட் பேட்டி

Trent Boult
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் 5 போட்டிகளில் 1 வெற்றியை மட்டுமே பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது நான்கு தோல்விகளுடன் மிகப்பெரிய சரிவினை சந்தித்திருந்தது. இதன் காரணமாக அந்த அணி இந்த ஆண்டிற்கான பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா? என்ற கேள்வி எழுந்ததோடு அந்த அணியின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வந்தன. ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மும்பை இந்தியன்ஸ் அணி பலமான கம்பேக் கொடுத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பலமே அவர்தான் : ட்ரென்ட் போல்ட்

குறிப்பாக கடைசியாக நடைபெற்றுள்ள 6 லீக் ஆட்டங்களில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கும் முன்னேறியுள்ளது. எப்போதும் போல தொடரின் ஆரம்பத்தில் அடி வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி பிற்பாதியில் தற்போது பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் அணியானது இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வைத்தே 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரும் வெற்றியை பெற்றது. குறிப்பாக பேட்டிங்கில் மும்பை அணி 217 ரன்கள் அடித்திருந்தாலும் பந்துவீச்சின் போது அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி 16.1 ஓவரிலேயே 117 ரன்களுக்கு சுருட்டியது.

இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ட்ரென்ட் போல்ட் மற்றும் கரன் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்களது சிறப்பான செயல்பாடு குறித்து பேசியிருந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ட்ரென்ட் போல்ட் கூறுகையில் : ஒரு அணியாக நாங்கள் இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? பேட்ஸ்மேன்கள் தற்போது மீண்டும் பார்மிற்கு வந்து பெரிய அளவில் ரன்களை குவிக்கிறார்கள்.

- Advertisement -

210 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் வெற்றிக்கு போதுமான ரன்கள் என்று நினைத்தோம். அதேவேளையில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அவர்களை மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான் அணியில் துவக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் சூரியவன்சி ஆகியோர் ஹிட்டர்கள் என்பது எங்களுக்கு தெரியும். அவர்கள் எங்களுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதையும் நாங்கள் உணர்ந்தோம்.

இதையும் படிங்க : எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான்.. சிம்புவின் பாடலை காண்பித்த விராட் கோலி – டேக் செய்து நன்றி தெரிவித்த சிம்பு

ஆனாலும் பும்ரா எங்கள் அணிக்குள் வந்ததிலிருந்து பெரிய அளவில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. முதல் சில போட்டிகளை அவர் தவறவிட்டிருந்தாலும் அவர் வந்ததற்கு பின்னர் எங்களுடைய அணியின் செயல்பாடு ஒட்டுமொத்தமாக மாறியுள்ளது. இனிவரும் போட்டிகளிலும் இந்த வெற்றி அப்படியே தொடரும் என ட்ரென்ட் போல்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement