- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பெரிய பவர் இருக்கு.. அவரும் நானும் சேந்து திங்காம இந்தியாவை அடித்து நொறுக்குவோம்.. ஹெட் எச்சரிக்கை

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கும் இந்தியா 2025 ஆசியக் கோப்பையை வென்று ஓரளவு நல்ல ஃபார்மில் இருக்கிறது.

இருப்பினும் நம்பர் 2 இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்பது சூரியகுமார் தலைமையிலான இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவை பார்த்தாலே அடிக்கக்கூடிய டிராவிஸ் ஹெட் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இல்லை. எனவே இந்தியாவை பந்தாடி ஃபார்முக்கு திரும்ப அவர் தயாராக இருக்கிறார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

திங்க மாட்டோம்:

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக 200 – 250 போன்ற பெரிய ஸ்கோரை தங்களால் அடிக்க முடியும் என்று ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். குறிப்பாக பவர்பிளேவில் கேப்டன் மிட்சேல் மார்ஷுடன் சேர்ந்து இந்திய பவுலர்களை பந்தாடி பெரிய ரன்கள் குவித்து வெற்றிக்கான அடித்தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் எச்சரித்து.ள்ளார். இது பற்றி ஹெட் பேசியது பின்வருமாறு.

“உங்களிடம் உங்களுடைய அணியில் உங்களுக்குப் பின் பவர் இருக்கும் போது நீங்கள் நகர வேண்டும். குறிப்பாக உங்களுக்குப் பின்னே டிம் டேவிட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஸ் இங்லிஷ், கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல் ஆகியோர் இருக்கிறார்கள். அது மிகப்பெரிய பவர் என்பதால் நீங்கள் ஆரம்பத்திலேயே நிறைய பந்துகளை திங்க முடியாது”

- Advertisement -

ஹெட் எச்சரிக்கை:

“ஒருவேளை எங்களுக்கு ஆரம்பத்திலேயே போக்கு கிடைத்தால் எந்த ஸ்கோர் வேண்டுமானாலும் அடிப்போம். அதற்காக பவர் பிளே ஓவர்களில் இருக்கும் சாதகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதே மிட்சேல் மார்ஷ் மற்றும் என்னுடைய திட்டமாகும். அது சில வருடங்களாக எங்களுடைய பலமாக இருக்கிறது. டி20, ஒருநாள் போட்டிகளில் நாங்கள் பவர்பிளே ஓவர்களில் பெரிய ஸ்கோர் அடிப்பதைப் பார்க்கிறீர்கள்”

இதையும் படிங்க: சர்வதேச டி20 போட்டிகளில் ரோஹித்தை முந்தி சூர்யகுமாரின் சாதனையை சமன் செய்ய காத்திருக்கும் – திலக் வர்மா

“அதற்காக நாங்கள் பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த மாட்டோம். ஆனால் ஏதோ ஒரு சமயத்தில் நீங்கள் முடிந்தளவு அதிக ரன்கள் அடிக்க முயற்சிப்பதை விரும்புவீர்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து முதல் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி கான்பெரா நகரில் இருக்கும் மனுக்கா ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -