- Advertisement -
ஐ.பி.எல்

இதுக்காக அபிஷேக் 6 மேட்ச் வெய்ட் பண்ணாரு.. சீட்டில் எழுதியிருந்த மெசஜ், மேக்ஸ்வெல் சண்டை பற்றி ஹெட் பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற 27வது போட்டியில் பஞ்சாப்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 246 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 82, பிரியான்ஸ் ஆர்யா 36, ஸ்டோய்னிஸ் 34* ரன்கள் அடித்தார்கள்.

அடுத்ததாக விளையாடிய ஹைதராபாத் உங்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் பஞ்சாப்பை துவம்சம் செய்து 18.3 ஓவரிலேயே இலக்கை தொட்டு வெற்றி பெற்றது. அதனால் ஐபிஎல் தொடரில் இரண்டாவது அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து ஹைதராபாத் சாதனை படைத்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 141, டிராவிஸ் ஹெட் 67 ரன்கள் அடித்து வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

அபிஷேக் மெசேஜ்:

முன்னதாக அந்தப் போட்டியில் தன்னுடைய 40வது பந்தில் சதத்தை அடித்த அபிஷேக் சர்மா பாக்கெட்டில் எழுதி வைத்திருந்த காகிதத்தை எடுத்துக் காண்பித்து வித்தியாசமாக கொண்டாடினார். அந்த காகிதத்தில் “இந்த சதம் ஆரஞ்சு ஆர்மி” அதாவது “ஹைதராபாத் ரசிகர்களுக்காக” என்று எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்தக் காகிதத்தை சதமடிக்கும் போது காண்பிக்க வேண்டும் என்பதற்காக கடந்த 6 போட்டிகளாக அபிஷேக் தனது பாக்கெட்டில் வைத்திருந்ததாக டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார்.

மேலும் 9வது ஓவரில் மேக்ஸ்வெலுக்கு எதிராக ஹெட் அடுத்தடுத்து சிக்சர்களை அடித்தார். அடுத்தப் பந்தை அடிக்க முயற்சித்த ஹெட் தவற விட்டார். அப்போது மேக்ஸ்வெலிடம் ஹெட் ஏதோ சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே பஞ்சாப்புக்கு விளையாடும் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் வந்து ஹெட்டிடம் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

ஜாலியான மோதல்:

அது பற்றியும் ஹெட் பேசியது பின்வருமாறு. “அந்த நோட்டை அபிஷேக் ஷர்மா பாக்கெட்டில் 6 போட்டிகளாக இருந்தது. இன்று அது வெளியே வந்ததில் மகிழ்ச்சி. இந்த அற்புதமான வெற்றி எங்களுக்குத் தேவைப்பட்டது. ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமைக் காட்டினோம். அவர்கள் கொண்டு வரப் போகும் திட்டம் பற்றி அறிந்து விளையாடினோம். கடந்த வருடம் அபிஷேக்குடன் நான் சேர்ந்து விளையாடியது எங்களுக்கிடையே நல்ல கூட்டாண்மையாக அமைந்துள்ளது”

இதையும் படிங்க: இந்த ரெசிபியை மாத்த விரும்பல.. 245 ரன்களை சேசிங் செய்து வெற்றி பெற்றது குறித்து பேசிய – பேட் கம்மின்ஸ்

“இது எங்களுக்குள் ஒருவரை ஒருவர் ஊக்குவிப்பது மற்றும் நல்ல இலக்குகளை தேர்ந்தெடுப்பது பற்றியதாகும். 240 ரன்களை துரத்துவதற்கு அனைத்தும் சரியான வழியில் செல்வது அவசியமாக இருந்தது. (மேக்ஸ்வெல் மோதல் பற்றி) நீங்கள் ஒருவருக்கொருவர் நல்ல மற்ற மோசமான விஷயங்களை அறிந்திருக்கிறீர்கள். எனவே இது போன்ற வாக்குவாதங்கள் பெரிதாக எதுவும் இல்லை. ஒரு சிறிய ஜாலியான மோதலாகும்” என்று கூறினார்.

- Advertisement -