- Advertisement -
உலக கிரிக்கெட்

4க்கு 4.. 99இல் கோட்டை விட்ட இங்கிலாந்தை நொறுக்கும் ஹெட்.. அடிலெய்டில் மாஸ் சாதனை.. ஆஸி மிரட்டல்

ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே பெற்றுள்ளது. 3வது போட்டி டிசம்பர் 16ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 371 ரன்களை குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி சதத்தை அடித்து 106, உஸ்மான் கவாஜா 82, மிட்சேல் ஸ்டார்க் 54 ரன்களை குவித்தனர். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து முடிந்தளவு போராடியும் 286 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

- Advertisement -

99இல் கோட்டை விட்ட இங்கிலாந்து:

இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 9, ஓலி போப் 3, ஜோ ரூட் 3, ஜேமி ஸ்மித் 22, னேன் டக்கெட் 29 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 83, ஹாரி ப்ரூக் 45, ஜோப்ரா ஆர்ச்சர் 51 ரன்களை எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 3, ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகள் எடுத்து 85 ரன்களை முன்னிலையாக பெற உதவினர்.

அடுத்ததாக 2வது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஜேக் வெதர்லேண்ட் 1, மார்னஸ் லபுஸ்ஷேன் 13 ரன்னில் அவுட்டானார்கள். இருப்பினும் மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய டிராவிஸ் ஹெட்டுடன் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த உஸ்மான் கவாஜா 40 ரன்களை குவித்த போது வில் ஜேக்ஸ் வேகத்தில் அவுட்டானார். அடுத்து வந்த கேமரூன் கிரீன் 7 ரன்னில் அவுட்டானாலும் ஹெட் சிறப்பாக விளையாடி அரை சதமடித்தார்.

- Advertisement -

நொறுக்கும் ஹெட்:

அடுத்து வந்த அலெக்ஸ் கேரி நிதானமாக விளையாடி கை கொடுத்தார். அதைப் பயன்படுத்தி எதிர்புறம் அசத்திய ஹெட் சதத்தை நெருங்கிய போது 99 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சர் வேகத்தில் கேட்ச் கொடுத்தார். ஆனால் அதை ஹாரி ப்ரூக் சரியாகப் பிடித்தும் பிடிக்காமல் கேட்ச்சை கோட்டை விட்டார். அதனால் தப்பிய அவர் ஜோ ரூட் ரூட் வீசிய அடுத்த ஓவரில் இறங்கி வந்து சிக்சரை பறக்க விட்டு சதத்தை அடித்து இங்கிலாந்துக்கு தண்டனையை கொடுத்தார்.

இதையும் படிங்க: 2026 டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு.. எந்தெந்த வீரர்களுக்கு இடம்? – ஓர் அலசல் இதோ

இதையும் சேர்த்து அடிலெய்ட் மைதானத்தில் 2022 முதல் கடைசியாக விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகளில் ஹெட் தொடர்ச்சியாக 4வது (175, 119, 140, 142*) சதத்தை அடித்துள்ளார். இதன் வாயிலாக மைக்கேல் கிளார்க்கிற்கு பின் அடிலெய்ட் மைதானத்தில் 4 தொடர்ச்சியான சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஹெட் படைத்துள்ளார். இறுதியில் நிறைவுக்கு வந்த 3வது நாள் முடிவில் ஹெட் 142* ரன்களும் அலெக்ஸ் கேரி 52* ரன்களும் எடுத்துள்ளார்கள். அதனால் 271/4 ரன்களை குவித்துள்ள ஆஸ்திரேலியா மொத்தமாக 356 ரன்களை பெற்று வெற்றியைப் பிரகாசப்படுத்தியுள்ளது.

- Advertisement -