ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 28ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் எட்டாவது லீக் போட்டி நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.
மேலும் கடந்தப் போட்டியில் விளையாடாத பதிரனா இந்தப் போட்டியில் நாதன் எலிஸ்க்கு பதிலாக விளையாடுவதாகவும் அவர் அறிவித்தார். இந்தப் போட்டியில் பனி வருமா என்று தெரியவில்லை என்று சொன்ன ருதுராஜ் கடந்தப் போட்டியை விட இம்முறை முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
சென்னை பவுலிங்:
“நாங்கள் முதலில் பௌலிங் செய்கிறோம். பிட்ச் கடந்தப் போட்டியை விட கொஞ்சம் நன்றாக விளையாடும் என்று நினைக்கிறேன். இதுவரை பனி எதுவும் இல்லை. அது பின்னர் வருமா என்பது உங்களுக்குத் தெரியாது. அது எங்களுடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. நாங்கள் முன்னேற வேண்டிய இடங்கள் இருக்கிறது. களத்தில் கொஞ்சம் முன்னேற்றத்தைச் சந்தித்து ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும். பேட்டிங் துறையிலும் இன்னும் தெளிவாக விளையாட வேண்டும்”
“இதுவரை நாங்கள் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளோம். இன்று எலிஸ்க்கு பதிலாக பதிரான மீண்டும் வந்துள்ளார்” என்று கூறினார். மறுபுறம் நாங்களும் முதலில் பௌலிங் செய்வதற்கே விரும்பியதாக ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்தார். எனவே இதற்கெல்லாம் கவலைப்படாமல் சென்னை அணியை சிறப்பாக பவுலிங் செய்து தோற்கடிப்போம் என்று அவர் டாஸ் வீசிய போதே மறைமுக சவால் விட்டார்.
டாஸ் கவலையில்ல:
மேலும் தங்களது அணியில் புவனேஸ்வர் குமார் விளையாடுவதாக தெரிவித்த அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்களும் முதலில் பவுலிங் செய்யவே முடிவு செய்திருந்தோம். எனவே இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. பிட்ச் கடினமாக தெரிவதால் நாங்கள் சென்னை அணியை அழுத்தத்தில் வைத்திருக்க முயற்சிப்போம்”
இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராகவும், உலகளவில் 5 ஆவது வீரராகவும் விராட் கோலி நிகழ்த்த இருக்கும் – மாபெரும் சாதனை
“கடந்தப் போட்டியில் எங்களுடைய வீரர்கள் நன்றாக செயல்பட்டனர். 13 ஓவர்களுக்குப் பின் கம்பேக் கொடுத்த விதம் அபாரமாக இருந்தது. அதே போன்ற ஆட்டத்தை இன்றும் வெளிப்படுத்த முயற்சிக்க உள்ளோம். பேட்டிங் துறையிலும் நன்றாக செயல்பட்டோம். சென்னை – பெங்களூரு ஐபிஎல் தொடரில் மிகப்பெரியது. ஏனெனில் அதை வைத்து ரசிகர்கள் வேடிக்கை செய்து கொள்கிறார்கள். எங்களுக்கு ரசிக்கிற்கு பதிலாக புவனேஸ்வர் விளையாடுகிறார்” என்று கூறினார்.



