தலைகீழாக மாறும் ஐபிஎல் சூழல்…குழப்பத்தில் கேப்டன்கள் – காரணம் இதுதான் !

dhoni
- Advertisement -

11வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா மூன்றாவது வாரத்திற்குள் நுழைந்துள்ளது.எதிர்பார்த்ததை விட பரபரப்பாக இந்த ஐபிஎல் சீசனில் பல்வேறு விசயங்கள் நடந்துவருகின்றன.ஏப்ரல் 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையிலான முதல் லீக்போட்டி நடைபெற்றது.

Ashwin

- Advertisement -

இரண்டாண்டு தடைக்கு பின்னர் களமிறங்கிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 4விக்கெட்டுகள் இழப்பிற்கு 165ரன்களை சேர்த்தது.166 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் இரண்டாடுகளுக்கு பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ஓவரில் ஒரு பந்து மீதமிருக்கையில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்து அதிர்ச்சியை அளித்தது.

டாஸ்வென்றும் பந்துவீச்சை தேர்வு செய்து வெற்றி இலக்கை சேஸ் செய்து வெற்றிபெற்ற சென்னை அணியின் வியூகத்தை அடுத்தடுத்த போட்டிகளில் பிற அணி கேப்டன்கள் பயன்படுத்தி தங்கள் அணியையும் வெற்றிபெற வைத்தனர்.அடுத்தடுத்து நடந்த பதிமூன்று போட்டிகளிலும் டாஸ் வென்ற அணிகள் பந்துவீச்சை தேர்வு செய்து இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி சேஸிங் செய்து வெற்றிபெற்றனர்.

sharma

ஆனால் முதல்முறையாக டாஸ்வென்று பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு அணியை தாங்கள் அடித்த இலக்கை விரட்டி பிடித்து வெற்றிபெற விடாமல் தடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய பணிக்க முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 218 ரன்களை குவித்தது.

- Advertisement -

இரண்டாவதாக ஆடிய பெங்களூரு அணி வெற்றி இலக்கை எட்டிட முடியாமல் இந்ந ஐபிஎல் சீசனில் பரிதாபமாக தோற்றது.பின்னர் இதே பாணியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது.சமீபத்தில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான போட்டியில் டெல்லி டாஸ் வென்று கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய அழைத்து 20 ஓவர்களில் 200 ரன்களை வாரி வழங்கியது.

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்து 71 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய போது இரண்டாவது ஆடிய அணிகள் தான் பெரும்பாலும் வெற்றிபெற்றன.

karthik

ஆனால் கடந்த சிலநாட்களாக முதலில் சிறப்பாக பேட்டிங் செய்து பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர்.எனவே இனிவரும் போட்டிகளில் ஐபிஎல்-இல் டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யுமா அல்லது வேறு ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்று அனைவரும் ஆவலோடூ எதிய்பார்த்து காத்திருக்கின்ன.

Advertisement