டி20 உலககோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்களை எடுத்த டாப் 8 பவுலர்களின் பட்டியல்

Malinga
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரில் அதிரடி சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு ரசிகர்களை ரன் மழையில் நனைய வைத்து தங்களது அணியை வெற்றிபெற வைக்க அனைத்து பேட்ஸ்மேன்களும் தயாராகி வருகிறார்கள். இருப்பினும் 6 பந்துகளில் 6 சிக்சர்களை பறக்க விடும் வெறியுடன் களமிறங்கும் பேட்ஸ்மேன்களை தங்களது அபார பந்து வீச்சால் விக்கெட்டுகளை எடுத்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்க பவுலர்களும் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.

gayle 1

- Advertisement -

ஒரு காலத்தில் பேட்ஸ்மேன்களை விட ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்த பவுலர்கள் இந்த டி20 கிரிக்கெட்டின் வருகையால் தான் இன்று படாதபாடு படுகிறார்கள். ஏனென்றால் அதிரடியாக ரன்களை குவிக்க கீழே விழுந்தாவது சிக்ஸர் அடிக்கும் புதிய டெக்னிக்கை கண்டுபிடித்துள்ள பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக ஓவருக்கு 2 பவுன்சர்கள், நோ-பால் போட்டால் பிரீ ஹிட் உட்பட சில அடிப்படை விதிமுறைகளே எதிராக உள்ளது. அதிலும் வலதுகை பேட்ஸ்மேன் தானே என்று எதார்த்தமாக ஒரு திட்டத்தைப் போட்டு பந்து வீசினால் மேக்ஸ்வெல் போன்றவர்கள் திடீரென்று இடதுகை பேட்ஸ்மேனாக மாறி சிக்சர்கள் பறக்க விடுவது டி20 கிரிக்கெட்டில் சர்வ சாதாரணம்.

டாப் பவுலர்கள்:
எனவே முரட்டுத்தனமாக அடிக்கும் பேட்ஸ்மேன்களையும் தங்களது திறமையால் அடக்கி ஆண்டு அவுட் செய்து தங்களது அணியை வெற்றி பெற வைப்பது பவுலர்களுக்கு சவாலாக இருந்தாலும் கடமையாகும். அந்த வகையில் சவாலான டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் பவுலர்களை பற்றி பார்ப்போம்:

8. ஸ்டுவர்ட் ப்ராட் 30: யுவராஜ் சிங்கிடம் அடி வாங்கிய அந்த போட்டியுடன் 2007 – 2014 வரை 25 இன்னிங்ஸ்சில் பந்து வீசிய இவர் 30 விக்கெட்டுக்களை 7.72 என்ற சற்று அதிகப்படியான எக்கனாமியில் பந்து வீசியுள்ளார். இருப்பினும் டி20 உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இங்கிலாந்து பவுலராக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

7. டேல் ஸ்டைன் 30: ஜாம்பவான் பந்து வீச்சாளரான இவர் 2009 – 2016 வரை நடைபெற்ற உலகக் கோப்பையில் பங்கேற்ற 23 போட்டிகளில் 30 விக்கெட்களை 6.96 என்ற சிறப்பான எக்கனாமியில் பதிவு செய்து டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த தென்னாப்பிரிக்க பவுலராக இப்பட்டியலில் 7வது இடம் பிடிக்கிறார். இவரின் சிறந்த பவுலிங் : 4/17

umar gul

6. உமர் குல் 35: 2007 – 2014 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற உலகக் கோப்பைகளில் 24 போட்டிகளில் களமிறங்கிய இவர் 35 விக்கெட்டுகளை 7.30 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து பாகிஸ்தானின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இந்தப் பட்டியலில் 7வது இடம் பிடிக்கிறார். இவருடைய சிறந்த பவுலிங் 5/6.

- Advertisement -

5. அஜந்தா மெண்டிஸ் 35: ஒரு கட்டத்தில் இலங்கைக்காக சுழல் பந்து வீச்சில் மாயாஜாலம் நிகழ்த்திய இவர் 2009 – 2014 வரையிலான காலகட்டத்தில் வெறும் 21 போட்டிகளிலேயே 35 விக்கெட்டுகளை 6.70 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து அசத்தியுள்ளார். மேலும் உலக கோப்பையில் ஒரு போட்டியில் 6 விக்கெட்டுகளை எடுத்த ஒரே பந்து வீச்சாளராகவும் (6/8) இவர் சாதனை படைத்துள்ளார்.

ajmal

4. சயீத் அஜ்மல் 36: 2009 – 2014 வரையிலான காலகட்டத்தில் விளையாடிய இவரும் பாகிஸ்தானுக்காக 23 போட்டிகளில் 36 விக்கெட்டுகளை 6.79 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து இந்த பட்டியலில் 4வது இடம் பிடிக்கிறார். இவருடைய சிறந்த பவுலிங் 4/19.

- Advertisement -

3. லசித் மலிங்கா 38: வரலாற்றின் மிகச்சிறந்த யார்க்கர் கிங் என்றழைக்கப்படும் இவர் டி20 கிரிக்கெட்டில் பந்து வீச்சில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய பெருமைக்குரியவர்.

Malinga-1

குறிப்பாக 2014 உலக கோப்பையை கேப்டனாக முன்னின்று வழி நடத்தி வெற்றி கண்ட இவர் 2007 – 2014 வரையிலான காலகட்டத்தில் 31 உலகக் கோப்பை போட்டிகளில் 38 விக்கெட்டுகளை எடுத்து 7.43 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராகவும் இலங்கை வீரராகவும் சாதனை படைத்துள்ளார். இவருடைய சிறந்த பவுலிங் 5/19.

2. ஷாஹித் அப்ரிடி 39: மிகச் சிறந்த ஆல்-ரவுண்டரான இவர் 2007 – 2016 வரையிலான காலகட்டத்தில் 34 போட்டிகளில் 39 விக்கெட்டுகளை 6.71 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பாகிஸ்தான் பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ளார். இவருடைய சிறந்த பவுலிங் 4/11

Shakib-3

1. ஷாகிப் அல் ஹசன் 41: வங்கதேசத்தின் முதுகெலும்பாக கருதப்படும் இவர் 2007 முதல் இப்போது வரை விளையாடும் ஒருசில வீரர்களில் ஒருவராக பெருமை பெற்றுள்ளார். கடந்த 2007 முதல் இதுவரை 30 இன்னிங்சில் 41 விக்கெட்டுகளை 6.43 என்ற அற்புதமான எக்கனாமியில் எடுத்துள்ள இவர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ளார்.

Advertisement