ஐபிஎல் 2023 ஏலத்தின் சிறந்த தேர்வுகள் : மிகவும் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட தரமான 8 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Sikandar Raza
- Advertisement -

ஐபிஎல் 2023ஆம் ஆண்டு தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் கோலாகலமாக நடைபெற்றது. பொதுவாக தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கும் வீரர்கள் பெரிய தொகைக்கு விலை போவார்கள் என்பதன் அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அசத்திய சாம் கரன் 18.50 கோடிக்கு பஞ்சாப் அணிக்க்கு வாங்கப்பட்டார். மேலும் 2019, 2022 ஆகிய வருடங்களில் இங்கிலாந்து வென்ற உலக கோப்பைகளின் நாயகனாக கேப்டன்ஷிப் அனுபவமும் நிறைந்த பென் ஸ்டோக்ஸ் 16.25 கோடி என்ற தகுதியான பெரிய தொகைக்கு சென்னை அணியில் வாங்கப்பட்டார்.

IPL

- Advertisement -

இருப்பினும் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டும் 16 கோடி என்ற பெரிய தொகைக்கு வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரன் லக்னோ அணியில் வாங்கப்பட்டது இந்த வருட ஏலத்தின் சொதப்பல் முடிவாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஏலத்தில் சில கிரிக்கெட் வீரர்கள் பெரிய தொகைக்கு விலை போவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டும் அதிர்ஷ்டத்தை போல குறைந்த விலைக்கு சில அணிகளால் வாங்கப்பட்டுள்ளார்கள். அவர்களைப் பற்றி பார்ப்போம்:

8. கேன் வில்லியம்சன்: நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரமான இவர் கடந்த வருடங்களில் ஹைதராபாத் அணியில் 10+ கோடிகளில் கேப்டனாக விளையாடிய நிலையில் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்டார். மேலும் சமீப காலங்களில் சர்வதேச கிரிக்கெட்டிலும் சுமாராகவே செயல்படும் காரணத்தால் பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டாத நிலையில் குஜராத் அணி வெறும் 2 கோடி என்ற அடிப்படை விலைக்கு வாங்கியது.

Williamson

க்ளாஸ் பேட்ஸ்மேன்களுக்கு பார்ம் என்பது தற்காலிகமானது என்று வல்லுனர்கள் சொல்வது போல் தற்போது சுமாரான பார்மில் இருந்தாலும் அவரிடமுள்ள அனுபவத்திற்கு ஐபிஎல் தொடரின் போது அபாரமாக செயல்படும் நிலைமையும் ஏற்படலாம். அந்த வகையில் அவரை குறைந்த விலைக்கு வாங்கியது குஜராத்தின் சிறந்த முடிவாகும்.

- Advertisement -

7. ரீஸ் டாப்லி: மதிப்புமிக்க இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இவர் கடந்த ஜூன் மாதம் நடந்த ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்களை திணறடித்து இங்கிலாந்தை வெற்றி பெற வைத்ததை மறக்க முடியாது.

Reece-Topley

அந்த வகையில் தற்சமயத்தில் நல்ல பார்மில் இருப்பதால் பெரிய தொகைக்கு விலை போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவரை வெறும் 1.90 கோடிக்கு பெங்களூரு அணி நிர்வாகம் குறைந்த விலைக்கு வளைத்து போட்டுள்ளது.

- Advertisement -

6. ஆடம் ஜாம்பா: கடந்த சீசன்களில் பெரிய கோடிகளுக்கு விளையாடிய இவரும் எதிர்பார்த்த செயல்பாடுகளை வெளிப்படுத்தாத காரணத்தால் பெங்களூரு அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்.

zampa

ஆனால் ஆஸ்திரேலியாவின் முதன்மை ஸ்பின்னராக இளம் வீரராக இருக்கும் அவர் பெரிய தொகைக்கு விலை போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1.5 கோடிக்கு ராஜஸ்தான் நிர்வாகம் வாங்கி அசத்தியது.

- Advertisement -

5. அடில் ரசித்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இங்கிலாந்து 2வது கோப்பையை வெல்வதில் கருப்பு குதிரையாக செயல்பட்ட இவர் தற்சமயத்தில் டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் ஸ்பின்னர்களில் ஒருவராவார்.

England Nets Session

அதனால் குறைந்தது 5 கோடிக்கும் மேல் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவரை வெறும் 2 கோடி அடிப்படை விலையில் ஹைதராபாத் அணி வாங்கி அசத்தியுள்ளது.

4. லிட்டன் தாஸ்: தற்சமயத்தில் வங்கதேச அணியில் அட்டகாசமான பார்மில் இருக்கும் இவர் 2022 டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடியதை யாராலும் மறக்க முடியாது.

Liton Das

அதனாலேயே பெரிய கோடிகளில் விலை போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அடித்து நொறுக்கும் பேட்டிங் திறமை கொண்ட இவரை வெறும் 50 லட்சம் என்ற மிகக் குறைந்த விலைக்கு கொல்கத்தா வாங்கியது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது.

3. கெய்ல் ஜமிஷன்: நியூசிலாந்தின் உயரமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான இவரும் கடந்த சீசனில் 10+ கோடிகளில் விளையாடிய நிலையில் எதிர்பார்க்கப்பட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்த தவறியதால் பெங்களூரு நிர்வாகம் கழற்றி விட்டது. ஆனாலும் நல்ல திறமை கொண்டுள்ள அவரை வெறும் 1 கோடி என்று அடிப்படை விலைக்கு சென்னை வாங்கி அசத்தியுள்ளது.

Jagadeesan

2. நாராயன் ஜெகதீசன்: சென்னை அணியில் வாய்ப்புக்காக பெஞ்சில் அமர்ந்திருந்து கழற்றி விடப்பட்ட இவர் உள்ளூர் தொடரின் அதிரடியாக செயல்பட்டு உலக சாதனை படைத்து தற்சமயத்தில் உச்சகட்ட பார்மில் ஜொலிக்கிறார். அதனால் நிச்சயம் கோடிகளில் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவரை வெறும் 90 லட்சத்துக்கு கொல்கத்தா வாங்கியது அந்த அணியின் அதிர்ஷ்டமாகும்.

1. சிகந்தர் ராசா: தற்சமயத்தில் ஜிம்பாப்வே அணியில் உச்சகட்ட பார்மில் இருக்கும் நம்பிக்கை நட்சத்திரமான இவர் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடிக்க முக்கிய பங்காற்றியது உட்பட சமீப காலங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு வருகிறார்.

Shikandar Raza Ban vs ZIM

இதையும் படிங்கஐபிஎல் 2023 ஏலத்துக்கு பின் மும்பை அணியின் சிறப்பான உத்தேச ப்ளேயிங் லெவன் இதோ

அதனால் கோடிகளில் விலை போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் ஒருவேளை ஜிம்பாப்வேவை சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ தெரியவில்லை பெரும்பாலான அணிகள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. அதை பயன்படுத்தி மிகச் சிறந்த சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான இவரை பஞ்சாப் நிர்வாகம் வெறும் 50 லட்சத்துக்கு வளைத்து போட்டுள்ளது.

Advertisement