ஐபிஎல் 2023 ஏலத்துக்கு பின் மும்பை அணியின் சிறப்பான உத்தேச ப்ளேயிங் லெவன் இதோ

MI vs LSG
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு இந்தியாவிலேயே கோலாகலமாக நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் கொச்சியில் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் தேவையான வீரர்களை வாங்கிய 10 அணிகளுக்கு மத்தியில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் காலம் காலமாக தங்களுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு ஓய்வு பெற்ற கைரன் பொல்லார்ட்டுக்கு பதிலாக 17.50 கோடி என்ற பெரிய தொகையை வாரி இறைத்து ஆஸ்திரேலியாவின் இளம் கிரிக்கெட் வீரர் கேமரூன் கிரீனை வாங்கியுள்ளது.

Cameron-Green

- Advertisement -

அதனால் மீண்டும் முழுமையான பலத்தை பெற்றுள்ள மும்பை அணி இந்த வருடம் தொடர் தோல்விகளை சந்தித்து வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை சந்தித்த அவமானத்திலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு 2023 சீசனில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி 6வது கோப்பையை வென்று சரித்திரம் படைக்க தயாராகியுள்ளது. இந்நிலையில் 2023 ஏலத்துக்குப் பின் அந்த அணிக்காக களமிறங்கி விளையாடும் சிறந்த 11 பேர் உத்தேச வீரர்கள் பட்டியலை பார்ப்போம்:

ஓப்பனிங்: முதல் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சந்தேகமின்றி காலம் காலமாக சிறப்பாக செயல்பட்டு 5 கோப்பைகளை வென்று கொடுத்து ரசிகர்களால் ஹிட்மேன் என்று கொண்டாடப்படும் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்குவார். சமீப காலங்களில் தடுமாறினாலும் உலகத்தரம் வாய்ந்த அனுபவம் கொண்ட அவர் 2023 புத்தாண்டில் அசத்தலாக செயல்படுவார் என்று உறுதியாக நம்பலாம். அவருடன் 2வது தொடக்க வீரராகவும் விக்கெட் கீப்பராகவும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இஷான் கிஷான் களமிறங்குவார்.

Rohit Sharma Ishan Kishan

கடந்த வருடம் 15 கோடிக்கு வாங்கப்பட்டு சுமாராக செயல்பட்டாலும் அதன் பின் இந்தியாவுக்காக அசத்தலாக செயல்பட்ட அவர் சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதமடித்து ஃபார்முக்கு வந்துள்ளார்.

- Advertisement -

மிடில் ஆர்டர்: 3வது இடத்தில் குட்டி ஏபிடி என்று ரசிகர்கள் கொண்டாடும் தென்னாப்பிரிக்காவின் இளம் வீரர் தேவால்ட் பிரேவிஸ் களமிறங்குவார். அதிரடியாக விளையாடும் திறமை கொண்ட அவர் தேவைப்படும் நேரங்களில் ஸ்பின்னராகவும் கடந்த வருடம் சிறப்பாக செயல்பட்டு அனைவரும் பாராட்டுகளை பெற்றார்.

Suryakumar Yadhav MI vs KKR

4வது இடத்தில் சந்தேகமின்றி உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் சூரியகுமார் யாதவ் விளையாடுவார். 5வது இடத்தில் கடந்த வருடம் மும்பையின் கண்டுபிடிப்பை போல் கிடைத்த இளம் வீரர் திலக் வர்மா நிச்சயமாக களமிறங்குவார் என்று நம்பலாம்.

- Advertisement -

6வது இடத்தில் பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் கச்சிதமாக பொருந்துவார். அதே போல் 7வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான டிம் டேவிட் களமிறங்குவார்.

Tim David MI vs RR

இந்த இருவருமே அதிரடியாக பேட்டிங் செய்யும் திறமை கொண்டுள்ளதால் பந்து வீச்சு துறையை பார்த்துக் கொள்வதுடன் பினிஷர்களாகவும் செயல்படுவார்கள் என்று நம்பலாம். அப்படி முதல் 7 இடங்களில் 3 ஆல் ரவுண்டர்கள் இருப்பது மும்பையின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

பந்து வீச்சு: முதன்மை வேகப்பந்து வீச்சாளராக சந்தேகமின்றி ஜஸ்பிரீத் பும்ரா விளையாடுவார் என்று நம்பலாம். டி20 உலக கோப்பைக்கு முன்பாக காயமடைந்த அவர் தற்போது குணமடைந்து வருவதால் ஐபிஎல் தொடரில் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த வருடம் காயமடைந்து விட்டார் என்று தெரிந்தும் கடந்த வருடமே இலவச சம்பளம் கொடுத்து வாங்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சர் இம்முறை விளையாடுவார் என்று மும்பை நிர்வாக உரிமையாளர் ஆகாஷ் அம்பானி ஏலத்தின் முடிவில் அறிவித்துள்ளார்.

Jasprith Bumrah Jofra Archer

சொல்லப்போனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே பும்ரா – ஆர்ச்சர் கூட்டணி 2023 சீசனில் எதிரணிகளை தெறிக்க விடுவதை பார்க்கலாம்.

இதையும் படிங்கஐபிஎல் 2023 ஏலத்துக்கு பின் சிஎஸ்கே அணியின் பலமான உத்தேச ப்ளேயிங் லெவன் இதோ

சுழல் பந்து வீச்சு துறையில் கடந்த வருடம் அசத்திய குமார் கார்த்திகேயாவுடன் புதிதாக வாங்கப்பட்டுள்ள அனுபவ ஸ்பின்னர் பியூஸ் சாவ்லா விளையாடுவார் என்று நம்பலாம். 2023 ஐபிஎல் தொடரில் களமிறங்கும் உத்தேச மும்பை அணி இதோ:
ரோகித் சர்மா (கேப்டன்), இசான் கிசான் (கீப்பர்), தேவால்ட் பிரேவிஸ், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, கேமரூன் கிரீன், டிம் டேவிட், ஜோப்ரா ஆர்ச்சர், பியூஸ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ஜஸ்பிரீத் பும்ரா (* – வெளிநாட்டு வீரர்கள்)

Advertisement