சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் நடுவர்களாக செயல்பட்ட டாப் 7 அம்பயர்களின் பட்டியல்

Aleem-Dar
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் பெரும்பாலான போட்டிகளில் நிகழும் பரபரப்பான தருணங்களில் முழுத் திறமையை வெளிப்படுத்தி மோதிக்கொள்ளும் இரு அணிகளுக்கு தேவைப்படும் நேரத்தில் போட்டியின் முடிவை தீர்மானிக்கக் கூடிய நியாயமான முடிவுகளை வழங்குவது அப்போட்டியில் நடுவர்களாக செயல்படும் அம்பயர்களின் இன்றியமையாத கடமையாகும். குறிப்பாக பவுலர்கள் அவுட் கேட்கும் தருணத்தில் ஒருதலை பட்சமாக இல்லாமல் நடுநிலையாக நின்று துல்லியமான சரியான தீர்ப்பை வழங்குவதே நடுவரின் வேலையாகும்.

எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடும் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் அவ்வப்போது ஓய்வெடுக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் இன்னிங்ஸ் பிரேக் தவிற எஞ்சிய அனைத்து ஓவர்களிலும் கால் கடுக்க நின்று சவாலான முடிவுகளை துல்லியமாக வழங்குவது நடுவர்களுக்கு கடினமான ஒன்றாகும். ஏனெனில் என்னதான் அதற்காக ஸ்பெஷல் பயிற்சிகளையும் பாடங்களையும் கற்று வந்தாலும் பரபரப்பான களத்தில் குறிப்பாக எல்பிடபிள்யூ போன்ற தருணங்களில் ஒருசில வினாடிகளில் சரியான தீர்ப்பை கணித்து வழங்குவது மனிதர்களான நடுவர்களுக்கு உண்மையாகவே சவாலான ஒன்றாகும்.

- Advertisement -

டாப் 5 அம்பயர்கள்:
அம்பயர்களாக செயல்படுவதிலும் களத்தில் நிற்கும் அம்பயர், 3-வது அம்பயர், நடுவர் என 3 வகைகளான வேலைகள் உள்ளது. இதில் ஒவ்வொரு துறையிலும் அதற்கென்று சவால்கள் உள்ளது. நடுவர்களாக செயல்படும்போது மொத்த போட்டியையும் உன்னிப்பாக கவனித்து அதில் ஏதேனும் ஏமாற்று வேலை நடக்கிறதா, எந்த வீரராவது விதிமுறைகளை மீறிகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். 3-வது அம்பயர் டிவி ரீப்ளேயில் கிடைக்கும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும் சில வினாடிகளில் மாறக் கூடிய முடிவுகளை கச்சிதமாக எடுக்க வேண்டும்.

இவை அனைத்தையும் விட களத்தில் சரியான தீர்ப்புகளை வழங்குவது, அவ்வப்போது வீரர்கள் சிலர் சண்டை போட்டுக் கொண்டால் உள்ளே புகுந்து தடுக்க வேண்டியது என களத்தில் அம்பயர்களாக செயல்படும் வேலை அனைத்தையும்விட கடினமாகும். இப்படி அத்தனை சவால்களையும் தாண்டி சிறப்பாக செயல்பட்டு சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட வருடங்கள் அதிக போட்டிகளில் நடுவர்களாக செயல்பட்ட டாப் 7 அம்பயர்களைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

7. ஸ்டீவ் பக்னர் 337: 1989 – 2009 வரை இந்தியாவின் பல வெற்றிகளை சிதைக்கும் வகையில் செயல்பட்ட வெஸ்ட் இண்டீசை சேர்ந்த இவரால் சச்சின் டெண்டுல்கர் குறைந்தது 3 – 4 சதங்களை 90களில் அவுட்டாகி தவற விட்டிருப்பார்.

Bucknor-3

309 போட்டிகளில் களத்திலும் 28 போட்டிகளில் 3-வது நடுவராகவும் மொத்தம் 337 போட்டியில் பங்கேற்ற இவர் இப்பட்டியலில் 7-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

6. ஸ்டீபன் டேவிஸ் 340: 1992 – 2015 வரை 220 போட்டிகளில் களத்திலும் 120 போட்டிகளில் 3-வது அம்பயராகவும் செயல்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் இப்பட்டியலில் 340 போட்டிகளுடன் 6-வது இடம் பிடிக்கிறார்.

6. டார்ல் கார்ப்பர் 340: 2002 – 2011 வரை 271 போட்டிகளில் களத்திலும் 61 போட்டிகளில் 3-வது நடுவராகவும் மொத்தம் 340 போட்டிகளில் நடுவராக செயல்பட்ட இவர் இப்பட்டியலில் 6-வது இடத்தை பிடிக்கிறார்.

- Advertisement -

5. இயன் கௌல்ட் 341: இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் 2006 – 2019 வரை 251 போட்டிகளில் களத்திலும் 90 போட்டிகளில் மூன்றாவது நடுவராகவும் மொத்தம் 349 போட்டிகளில் அம்பயராக செயல்பட்டு பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

4. சைமன் டௌபல் 349: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த உலகப் புகழ்பெற்ற அம்பயர் ஆவார். ஏனென்றால் களத்தில் எப்போதும் ஒருதலை பட்சமாக அல்லாமல் நியாயத்துடன் நடுவர்களுக்கு அடையாளமாக துல்லியமான தீர்ப்புகளை வழங்கிய இவரின் 10 முடிவுகளில் 9.9 முடிவுகள் சரியானதாக இருக்கும். அதன் காரணமாகவே 2004 – 2008 வரை தொடர்ந்து 5 வருடங்கள் உலகின் மிகச்சிறந்த அம்பயருக்கான ஐசிசி விருதையும் இவர் வென்றார்.

1992 – 2014 வரை 282 போட்டிகளில் களத்திலும் 67 போட்டிகளில் டிவி அம்பயராக செயல்பட்டு மொத்தம் 349 போட்டிகளில் நடுவராக செயல்பட்ட இவர் பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார். நியாயப்படி பார்த்தால் இந்த பட்டியலில் இவர்தான் முதலில் இருக்க வேண்டும். ஆனால் தமது வயது தனது முடிவுகளை பாதிப்பதாக உணர்ந்த இவர் உடனடியாக முன்கூட்டியே நேர்மையுடன் ஓய்வு பெற்றதே அதற்கு காரணமாகும்.

3. பில்லி பௌடன் 395: சர்வதேச போட்டிகளில் 10க்கு 9 முடிவுகளை சரியாக வழங்கிய நியூசிலாந்தைச் சேர்ந்த இவர் உலகிலேயே ரசிகர்களை தனது வேடிக்கையான அசைவுகளால் மகிழ்வித்த மனம் கவர்ந்த அம்பயர் என்றால் மிகையாகாது. சிக்ஸர், பவுண்டரி, அவுட் என அனைத்து முடிவுகளுக்கும் ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான ஸ்டைல்களை கொண்டிருந்த இவர் ரசிகர்களின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தும் அளவுக்கு அம்பயரிங் செய்ததை மறக்க முடியாது.

1996 – 2012 வரை 308 போட்டிகளில் களத்திலும் 87 போட்டிகளில் டிவி அம்பயராகவும் மொத்தம் 395 சர்வதேச போட்டிகளில் நடுவராக செயல்பட்ட இந்த 90ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்கு பிடித்த அம்பயர் இப்பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார்.

2. ருடி கோர்ட்சின் 396: தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இவர் 1992 – 2010 வரை 331 போட்டிகளில் மைதானத்திலும் 65 போட்டிகளில் டிவி நடுவராகவும் மொத்தம் 396 போட்டிகளில் அம்பயராக செயல்பட்டு இப்பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறார்.

பவுலர்கள் எவ்வளவுதான் ஆக்ரோசமாக அவுட் கேட்டாலும் பதற்றமடையாமல் பொறுமையாக கையை உயர்த்துவதில் ரசிகர்களிடையே இவர் புகழ் பெற்றவர்.

1. அலீம் தார் 524: பாகிஸ்தானைச் சேர்ந்த இவர் 2000 முதல் இப்போது வரை 22 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் வெற்றிகரமான நடுவராக 524 போட்டிகளில் செயல்பட்டு உலக சாதனை படைத்துள்ளார். இதுவரை 419 போட்டிகளில் மைதானத்தில் நடுவராக செயல்பட்டுள்ள இவர் 105 போட்டிகளில் டிவி நடுவராகவும் செயல்பட்டுள்ளார்.

 

Advertisement