ஒருநாள் கிரிக்கெட்டில் தோல்வியடைந்த போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த டாப் 7 பேட்ஸ்மேன்கள்

Rohith
- Advertisement -

கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு இரு அணிகளை சேர்ந்த அனைத்து வீரர்களும் இணைந்து செயல்பட்டால் வெற்றி எளிதாகிவிடும். வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் ஒரு அணி வெற்றி பெறுவதற்கு குறைந்தது 2 – 3 பேட்ஸ்மேன்களும் 2 – 3 பவுலர்களும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகும். ஆனால் சில சமயங்களில் தங்களை விட தரமான செயல்படும் எதிரணிக்கு ஈடுகொடுக்க முடியாமல் பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்பட வருவதால் தோல்வியடைய வேண்டிய நிலைமை ஏற்படும்.

குறிப்பாக பேட்டிங் துறையில் எதிரணியின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அவுட்டானாலும் நான் இருக்கும் வரை எனது அணியை தோற்கவிட மாட்டேன் என்ற வகையில் ஒரு பேட்ஸ்மேன் பயத்தை காட்டும் எதிரணிக்கு பயத்தை அளிக்கும் வகையில் நங்கூரமாக நின்று அபாரமாக பேட்டிங் செய்து வெற்றிக்காக போராடுவார். அதிலும் சேசிங் செய்யும் போது முழு மூச்சை கொடுத்து தனி ஒருவனாக போராடும் பேட்ஸ்மேனுக்கு எஞ்சிய பேட்ஸ்மேன்களில் ஏதேனும் ஒருவர் கை கொடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாமே என்று ரசிகர்கள் பரிதாபப்படும் அளவுக்கு இறுதியில் தோல்வி பரிசாக கிடைக்கும்.

- Advertisement -

போராட்ட நாயகர்கள்:
அதுவே முதலில் பேட்டிங் செய்யும் போது பெரிய அளவில் ரன்களை குவிக்கும் பேட்ஸ்மேனின் போராட்டம் வீணாகும் வகையில் சேசிங் செய்யும்போது எதிரணியில் 2 – 3 பேட்ஸ்மேன்கள் இணைந்து தேவையான ரன்களை எடுத்து தோல்வியை பரிசளிப்பார்கள். இவை அனைத்துமே இறுதியில் கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு என்பதை உணர்த்தக்கூடிய அம்சமாகும். அதற்கு எடுத்துக்காட்டாக ஒருநாள் கிரிக்கெட்டில் தோல்வியடைந்த போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த டாப் 7 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்:

7. ரோஹித் சர்மா 171*: கடந்த 2016இல் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு அட்டகாசமாக பேட்டிங் செய்த ரோகித் சர்மா முழுமையான 50 ஓவர்களும் நின்று அவுட்டாகாமல் அந்த அணி பவுலர்களை வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

13 பவுண்டரி 7 சிக்சருடன் 171* (163) ரன்கள் குவித்த அவருடன் விராட் கோலி 91 (97) ரன்கள் எடுத்ததால் 50 ஓவர்களில் இந்தியா 309/3 ரன்கள் எடுத்தது. ஆனால் அதைத் துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டீவ் ஸ்மித் 149 (135) ஜார்ஜ் பெய்லி 112 (120) என 2 பேட்ஸ்மேன்கள் சதமடித்தால் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

6. டேவிட் வார்னர் 173: கடந்த 2016இல் சொந்த மண்ணில் கேப்-டவுன் நகரில் நடந்த 5-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா ரிலீ ரோசவ் 122 (118) ரன்கள் எடுக்க 327/8 ரன்கள் எடுத்தது. அதை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு ஒருபுறம் டேவிட் வார்னர் அதிரடியாக பேட்டிங் செய்ய மறுபுறம் வந்த பேட்ஸ்மேன்கள் 35 ரன்களை கூட தாண்டாமல் பெவிலியன் திரும்பினர்.

- Advertisement -

இறுதியில் 24 பவுண்டரியுடன் 173 (136) ரன்கள் குவித்த டேவிட் வார்னர் ரன் அவுட்டான ஆஸ்திரேலியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இருப்பினும் அவரது போராட்டத்திற்கு ஆட்டநாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது.

5. சச்சின் டெண்டுல்கர் 175: கடந்த 2009இல் சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடரின் 5-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஷான் மார்ஷ் 112 ரன்கள் அதிரடியில் 350/4 ரன்கள் சேர்த்தது. அதை துரத்திய இந்தியாவுக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 19 பவுண்டரி 4 சிக்சர்களுடன் மலைபோல 175 (141) ரன்கள் குவித்து வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனால் சுரேஷ் ரெய்னா 59 (59), சேவாக் 38 (30), ஜடேஜா 23 (17) ஆகியோரைத் தவிர எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. இருப்பினும் தனி ஒருவனாக போராடிய சச்சினுக்கு ஆட்டநாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது.

4. எவின் லெவிஸ் 176*: கடந்த 2017இல் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீசுக்கு 17 பவுண்டரி 7 சிக்சரை பறக்கவிட்டு 176* (130) ரன்கள் குவித்த எவின் லெவிஸ் உடன் ஜேசன் ஹோல்டர் 77 (62) ரன்கள் எடுத்ததால் 356/5 ரன்கள் குவித்தது.

ஆனால் மழையால் 35.1 ஓவர்களாக குறைக்கப்பட்ட அப்போட்டியில் 253 ரன்களை துரத்திய இங்கிலாந்து ஜேசன் ராய் 84, பட்லர் 43*, பேர்ஸ்டோ 39 என யாருமே சதமடிக்காத போதிலும் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இருப்பினும் அன்றைய நாளில் அசத்திய லெவிஸ்க்கு ஆட்டநாயகன் விருது பரிசு அளிக்கப்பட்டது.Hayden

3. மேத்தியூ ஹெய்டன் 181*: கடந்த 2007இல் ஹமில்டன் நகரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு வழக்கம் போல 11 பவுண்டரி 10 சிக்சர்களை தெறிக்கவிட்ட மேத்யூ ஹெய்டன் கடைசி வரை அவுட்டாகாமல் 181* (166) ரன்களை விளாசினார்.

கூடவே ஷேன் வாட்சன் 68 ரன்கள் எடுத்ததால் 346/5 ரன்கள் எடுத்த அந்த அணிக்கு அடுத்ததாக பேட்டிங் செய்த நியூசிலாந்து கிரைக் மெக்மில்லன் 117, பிரண்டன் மெக்கலம் 86* ஆகியோரின் அதிரடியால் வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்று தோல்வியை பரிசளித்தது. இருப்பினும் ஹெய்டனுக்கு ஆட்டநாயகன் விருதை வழங்கப்பட்டது.

2. ஃபக்கர் ஜமான் 193: ஜோகனஸ்பர்க் நகரில் கடந்த 2021இல் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா டீ காக் 80, டுஷன் 60, மில்லர் 50* ஆகியோரின் கூட்டு அதிரடியால் 341/6 ரன்கள் சேர்த்தது.

ஆனால் அதை துரத்திய பாகிஸ்தானுக்கு தொடக்க வீரர் ஃபக்கர் ஜமான் 18 பவுண்டரி 10 சிக்சருடன் 193 (155) ரன்கள் எடுத்து தனி ஒருவனாக போராடினார். இருப்பினும் எஞ்சிய வீரர்கள் 35 ரன்களை கூட எடுக்காத காரணத்தால் 17 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தாலும் அபாரமாக செயல்பட்ட அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.

1. சார்லஸ் கவன்ட்ரி 194*: கடந்த 2009இல் சொந்த மண்ணில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான 4-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வேவுக்கு 16 பவுண்டரி 7 சிக்சருடன் 194* (156) ரன்கள் குவித்த சார்லஸ் கவண்ட்ரி அந்த சமயத்தில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து உலக சாதனை படைத்தார்.

ஆனால் அந்த அணி எடுத்த 312/8 ரன்களை தமீம் இஃபால் சதமடித்து 154 ரன்கள் எடுத்ததால் எளிதாக எட்டிப்பிடித்த வங்கதேசம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த நாளில் சதமடித்த அந்த இருவருமே ஆட்ட நாயகன் விருதை பகிர்ந்து கொண்டனர்.

Advertisement