ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மூத்த வயதில் சதமடித்த டாப் 6 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

sachin6
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற ஆர்வத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி தேசிய அணிக்காக விளையாட தேர்வாகும் வீரர்கள் ஆரம்பத்திலேயே சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் ஏதோ ஒரு கட்டத்தில் தங்களுக்கென்று நிலையான இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டால் தான் மேற்கொண்டு நீண்ட நாட்கள் விளையாட முடியும். அந்த வகையில் ஏதோ ஒரு கட்டத்தில் பெரிய அளவில் ரன்களைக் குவித்து நிலையான இடத்தைப் பிடிக்கும் பேட்ஸ்மேன்கள் நாளடைவில் அந்த அணியின் தூண்களாக மாறி ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுக்கும் உலகத்தரம் வாய்ந்தவர்களாக உருவெடுப்பார்கள்.

அதுபோன்ற பேட்ஸ்மேன்கள் தங்களது இளம் வயதில் விளையாட துவங்கினாலும் 35 என்ற மூத்த வயதை தாண்டி விளையாடுவது மிகவும் கடினமான ஒன்றாகும். ஏனெனில் இயற்கையாகவே வயது அதிகரிக்கும்போது உடலில் ஏற்படும் சோர்வு சிறப்பாக செயல்படுவதை தடுக்கும் என்பதுடன் அவ்வளவு காலங்கள் காயத்தையும் சுமாரான பார்ம் போன்ற அம்சங்களில் சிக்காமல் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும்.

- Advertisement -

அதனால் 70% உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் கூட இந்த 3 அம்சங்களில் ஏதோ ஒன்றில் தோல்வியடைந்து விடுவார்கள். இருப்பினும் மட்டுமே அனுபவமே ஆசான் என்ற வகையில் அத்தனை வருடங்கள் விளையாடிய அனுபவத்தையும் தரத்தையும் பயன்படுத்தி சிலர் மட்டுமே கடைசி வரை வெற்றி நாயகர்களாக விளையாடி ஓய்வு பெறுவார்கள். அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் மூத்த வயதில் சதமடித்த டாப் 6 பேட்ஸ்மேன்களைப் பற்றி பார்ப்போம்:

6. சச்சின் டெண்டுல்கர்: வரலாறு கண்ட மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் முதன்மையானவராக கருதப்படும் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் எதிர்கொண்டு 30000க்கும் மேற்பட்ட ரன்களையும் 99 சதங்களையும் விளாசி யாராலும் எட்ட முடியாத 100-வது சதம் என்ற இமாலய வெற்றி கனியை தொடுவதற்கு காத்திருந்தார்.

- Advertisement -

2011 உலக கோப்பையில் அடுத்தடுத்த சதங்களை அடித்திருந்த அவர் அதன்பின் சில மாதங்களாக அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் தவித்த நிலையில் கடந்த 2012இல் மிர்பூரில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒரு வழியாக தன்னுடைய 100-வது சதத்தை அடித்து மாபெரும் உலக சாதனை படைத்தார். அப்போட்டியில் இந்தியா தோற்றாலும் 114 (147) ரன்களை 38 வருடம் 327 நாட்கள் வயதில் அடித்திருந்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மூத்த வயதில் சதமடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையுடன் இந்த சாதனை பட்டியலில் 6-வது இடம் பிடிக்கிறார்.

5. ஜெப்ரி பாய்க்காட்: இங்கிலாந்தின் மகத்தான ஜாம்பவான் பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படும் இவர் கடந்த 1979இல் சிட்னி நகரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தனது அணிக்கு சதமடித்து 105 (124) ரன்கள் குவித்தார். அதனால் 264 ரன்கள் எடுத்த இங்கிலாந்து பின்னர் 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

அன்றைய நாளில் 39 வருடம் 51 நாட்கள் வயதில் சதமடித்த அவர் இங்கிலாந்தின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று மீண்டும் நிரூபித்து இந்த பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

4. எட் ஜாய்ஸ்: அயர்லாந்தின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் இவர் கடந்த 2018இல் துபாயில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் அமீரகத்துக்கு எதிரான முதல் போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 221 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது 13 பவுண்டரி 1 சிக்சருடன் 116* (149) ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார்.

- Advertisement -

அன்றைய நாளில் 39 வருடம் 111 நாட்கள் வயதில் சதமடித்திருந்த அவர் அயர்லாந்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

3. கிறிஸ் கெயில்: ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜாம்பவானான இவர் கடந்த 2019இல் சொந்த மண்ணில் கடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 4-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து சரமாரியாக அடித்து 418/6 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்ததை சேசிங் செய்ய களமிறங்கினார்.

அந்த இமாலய இலக்கை துரத்தும்போது எஞ்சிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க முடியாமல் ஆட்டமிழந்த நிலையில் தனி ஒருவனாக சிங்கத்தைப் போல 11 பவுண்டரி 14 மெகா சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் சதமடித்து 162 ரன்கள் விளாசி ரசிகர்களை மகிழ்வித்து போராடி ஆட்டமிழந்தார். அவரின் போராட்டத்தால் இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் வெறும் 29 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றது. அன்றைய நாளில் 39 வருடம் 159 நாட்கள் வயதில் சதத்தை விளாசிய அவர் அதிரடி காட்டுவதற்கும் வயதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நிரூபித்து இப்பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார்.

2. சனாத் ஜெயசூரியா: 90களில் அறிமுகமாகி எதிரணிகளை வெளுத்து வாங்கிய இவர் கடந்த 2009இல் சொந்த மண்ணில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கைக்கு வழக்கம் போல அதிரடியாக சதமடித்து 107 (114) ரன்கள் விளாசினார்.

இருப்பினும் இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் இலங்கை நினைத்த 247 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆனாலும் அன்றைய நாளில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் 39 வருடம் 212 நாட்களில் சதமடித்த அவர் பல இளம் வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுப்பவராக இப்பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறார்.

1. குர்ராம் கான்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக துபாயில் கடந்த 2014இல் சொந்த மண்ணில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 281 ரன்கள் இலக்கை துரத்திய ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மிடில் ஆர்டரில் நங்கூரமாக பேட்டிங் செய்த அதன் கேப்டன் குர்ராம் கான் 17 பவுண்டரி 1 சிக்சருடன் 132* (138) ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார்.

அன்றைய நாளில் உலகிலேயே அதிகபட்சமாக 43 வருடம் 162 நாட்களில் சதமடித்த அவர் அவ்வளவு மூத்த வயதில் சாதிக்க வயது தடையல்ல என்பதை நிரூபித்து இந்த பட்டியலில் முதலிடம் பிடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

Advertisement