டி20 உலக கோப்பை வரலாற்றில் இணைந்த கைகளாக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த 6 சாதனை ஜோடிகள்

Quinton De Kock Rilee Rossow
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் அதில் வெற்றி பெறுவதற்கு பேட்டிங் துறையில் பெரிய ரன்களை குவிப்பது அவசியமாகும். மேலும் கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு என்ற நிலையில் பேட்டிங் துறையில் எதிர்ப்புறம் பேட்ஸ்மேன் இல்லாமல் விளையாடவே முடியாது. அதாவது எப்போதும் 2 பேட்ஸ்மேன்கள் சேர்ந்து ரன்களை குவிக்கும் வகையிலான அடிப்படை விதிமுறையை கொண்ட கிரிக்கெட்டில் வெற்றிக்கான பெரிய ரன்களை குவிப்பதற்கு களமிறங்கும் அத்தனை பேட்ஸ்மன்களும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைப்பது இன்றியமையாததாகும்.

குறிப்பாக ஓப்பனிங் முதல் 10வது விக்கெட் வரை ஜோடி சேர்ந்து விளையாடும் வீரர்கள் அமைக்கும் ஒவ்வொரு பார்ட்னர்ஷிப்பும் ஆட்டத்தின் போக்கையே மாற்றி வெற்றியை பெற்றுக் கொடுக்கும் வல்லமை கொண்டது. அந்த வகையில் டி20 உலக கோப்பை வரலாற்றில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்களை அமைத்த டாப் 5 ஜோடிகளைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

6. திலகரத்னே தில்சான் – மகிளா ஜெயவர்த்தனே 145: கடந்த 2014 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கைக்கு 2வது விக்கெட்டுக்கு இணைந்த இவர்கள் 145 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 20 ஓவர்களில் 189/4 ரன்கள் குவிக்க உதவினர். அதில் ஜெயவர்தனே 89 (51) ரன்களும் தில்சான் 55 (47) ரன்கள் எடுத்த போதிலும் இறுதியில் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியான சதத்தால் (116*) இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

5. கிறிஸ் கெயில் – டேவோன் ஸ்மித் 145: தென் ஆப்பிரிக்காவில் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பையின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் அடித்து நொறுக்கிய கிறிஸ் கெயில் 117 (57) ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 205/6 ரன்கள் எடுக்க உதவினார்.

- Advertisement -

அவருடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக பெயருக்காக நின்ற டேவோன் ஸ்மித் 35 (34) எடுத்தாலும் இறுதியில் கிப்ஸ் 90* (54) ரன்களும் ஜஸ்டின் கெம்ப் 46* (22) ரன்களும் எடுத்து தென்னாப்பிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

4. அலெக்ஸ் ஹேல்ஸ் – இயன் மோர்கன் 152: 2014 டி20 உலக கோப்பையில் நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 190 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 152 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இவர்கள் 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதில் அலெக்ஸ் ஹேல்ஸ் 116* (64) ரன்களும் மோர்கன் 57 (38) ரன்களும் எடுத்து வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

3. முகமத் ரிஸ்வான் – பாபர் அசாம் 152*: கடந்த 2021இல் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சாகின் அப்ரடியிடம் தடுமாறி 20 ஓவர்களில் 151/7 ரன்கள் சேர்த்தது.

அதை துரத்திய பாகிஸ்தானுக்கு கடைசி வரை அவுட்டாகாமல் 152* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் ரிஸ்வான் 79* (55) ரன்களும் பாபர் அசாம் 68* (52) ரன்களும் விளாசி வரலாற்றில் முதல் முறையாக உலகக் கோப்பையில் இந்தியாவை தோற்கடித்து சரித்திரம் படைத்தனர்.

- Advertisement -

2. மகிளா ஜெயவர்தனே – குமார் சங்கக்காரா 162: கடந்த 2010இல் நடைபெற்ற உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட லீக் போட்டியில் 2வது விக்கெட்டுக்கு இணைந்த இவர்கள் 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இலங்கையை 20 ஓவர்களில் 195/3 ரன்கள் குவிக்க உதவினர். அதில் ஜெயவர்தனே 98* (56) ரன்களும் சங்கக்காரா 68 (49) ரன்களும் குவித்து இறுதியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

1. குயின்டன் டீ காக் – ரிலீ ரோசவ் 168: இந்த உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்காவுக்கு 2வது விக்கெட்டுக்கு இணைந்த இவர்கள் 168 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 20 ஓவர்களில் 205/5 ரன்கள் குவிக்க உதவினர்.

அதில் ரிலீ ரோசவ் சதமடித்து 109 (56) ரன்கள் எடுக்க குயின்டன் டீ காக் 63 (38) ரன்கள் குவித்து டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த ஜோடியாக 12 வருடங்கள் கழித்து புதிய உலக சாதனை படைத்தனர். அவர்களது அதிரடியால் இறுதியில் தென்னாப்பிரிக்கா 104 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது.

Advertisement