டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த தரமான 6 ஃபீல்டர்களின் பட்டியல்

ABD
Advertisement

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாக டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு வேகமும் அதிரடியும் அவசியமான ஒன்றாகும். மேலும் எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய துறைகளை விட ஃபீல்டிங் துறையில் வெளிப்படுத்தும் சிறிய செயல்பாடு வெற்றியை தலைகீழாக மாற்றக்கூடிய சக்தியை கொண்டது. அதிலும் குறிப்பாக ஐசிசி உலக கோப்பைகளில் ரன் அவுட், கேட்ச்களை கோட்டை விட்டு கோப்பையையும் நழுவ விட்ட வரலாறுகள் இப்போதும் பேசுகிறது.

அந்த வகையில் டி20 உலக கோப்பையில் ஏற்கனவே பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கும் பேட்ஸ்மேன்கள் கொடுக்கும் கேட்ச்களை கச்சிதமாக பிடிப்பது ஃபீல்டர்களின் கடமையாகும். ஒருவேளை அதை தவறவிடும் பட்சத்தில் அதை நினைத்து வருந்தும் அளவுக்கு அதே பேட்ஸ்மேன் முரட்டு அடி கொடுத்து வெற்றியையும் பறித்து விடுவார். இருப்பினும் அதை தெரிந்தும் இந்த உலகக் கோப்பையில் கூட நிறைய வீரர்கள் முக்கிய கேட்ச்சுகளை தவற விடுவதை பார்க்க முடிகிறது. அதற்காக அவர்கள் வேண்டுமென்றே விடுவார்கள் என்று சொல்ல முடியாது. மாறாக சவாலில் சரிந்து விடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

- Advertisement -

தரமான பீல்டர்கள்:
ஏனெனில் பகல் நேர போட்டிகளில் சூரிய வெளிச்சம் கண்களுக்கும் இரவு நேர போட்டிகளில் பனியின் தாக்கம் கைகளுக்கும் கடுமையான சவால்களை கொடுத்து துல்லியமாக செயல்பட விடாமல் கேட்ச்சுகளை பிடிப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்தும். ஆனாலும் சில வீரர்கள் உலகத்தரம் வாய்ந்த ஃபீல்டர்கள் எனப் போற்றும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டு கேட்ச்களை கச்சிதமாக பிடித்து வெற்றியில் மறைமுக பங்காற்றுவார்கள். அந்த வகையில் உலக கோப்பை வரலாற்றில் அதிக கேட்ச்சுகளை பிடித்த வீரர்களை பற்றி பார்ப்போம்.

Rohith

6. ரோஹித் சர்மா 15*: 2007 முதல் இப்போது வரை நடைபெற்ற அத்தனை டி20 உலக கோப்பைகளிலும் தொடர்ச்சியாக பங்கேற்ற ஒரே வீரராக சாதனை படைத்துள்ள இவர் இம்முறை இந்தியாவை கேப்டனாக வழிநடத்தும் அளவுக்கு முன்னேறியுள்ளார். அந்த வகையில் இதுவரை 36 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 15 கேட்ச்களை 0.416 என்ற சராசரியில் பிடித்து இந்த பட்டியலில் 6வது இடத்தையும் டி20 உலக கோப்பையில் அதிக கேட்ச்களை பிடித்த இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

5. ட்வயன் ப்ராவோ 15: வெஸ்ட் இண்டீஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திர ஆல்-ரவுண்டரான இவர் அந்த அணி 2 உலகக் கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றி கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்றார்.

bravo 2

தனது கிரிக்கெட் கேரியரில் 34 போட்டிகளில் 15 கேட்ச்களை 0.441 என்ற சராசரியில் பிடித்த அவர் டி20 உலக கோப்பையில் அதிக கேட்சுகள் பிடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரராகவும் சாதனை படைத்துள்ளார். அதிலும் கேட்ச் பிடித்த பின் அவர் போடும் ஆட்டதில் மயங்காத ரசிகர்களே இருக்கு முடியாது.

- Advertisement -

4. கிளன் மேக்ஸ்வெல் 15*: ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டரான இவர் கடந்த 2012 முதல் இதுவரை 23 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி15 கேட்ச்களை 0.652 என்ற சராசரியில் பிடித்து இந்த பட்டியலில் 4ஆம் இடம் பிடித்துள்ளார்.

warner

3. டேவிட் வார்னர் 19*: ஆஸ்திரேலியாவின் மற்றொரு நட்சத்திர வீரரான இவர் தனது பேட்டிங்கை போலவே பீல்டிங் செய்வதிலும் அதிரடியாகவும் வேகமாகவும் செயல்பட்டு ரசிகர்களிடம் புகழ்பெற்றவர். 2009 முதல் டி20 உலக கோப்பைகளில் விளையாடி வரும் இவர் இதுவரை 33 போட்டிகளில் 19 கேட்ச்களை 0.575 என்ற சராசரியில் பிடித்து டி20 உலக கோப்பையில் அதிக கேட்ச்களை பிடித்த ஆஸ்திரேலிய வீரராக சாதனை படைத்து வருகிறார்.

- Advertisement -

2. மார்ட்டின் கப்டில் 21*: நியூசிலாந்தின் அதிரடி தொடக்க வீரரான இவர் இந்த உலகக்கோப்பையில் இடம் பிடித்தும் சுமாரான பார்ம் காரணமாக விளையாடவில்லை. இருப்பினும் இதுவரை 28 போட்டியில் 19 கேட்ச்சுகளை 0.678 என்ற சிறப்பான சராசரி பிடித்த அவர் டி20 உலக கோப்பையில் அதிக கேட்ச்களை பிடித்த நியூஸிலாந்து வீரராக சாதனை படைத்துள்ளார்.

Abd

1. ஏபி டீ வில்லியர்ஸ் 23: எப்படி போட்டாலும் உருண்டு புரண்டு திரும்பி படுத்தாவது மைதானத்தின் நாலா புறங்களிலும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்ட இவர் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் துறையில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார் என்றே கூறலாம். அதற்கு ஈடாக ஃபீல்டிங் துறையிலும் சூப்பர்மேன் போல அவர் தாவி பிடித்த கேட்ச்களை ரசிகர்கள் மறக்க முடியாது.

அந்த வகையில் 2007 – 2016 வரை விளையாடிய 30 போட்டிகளில் களமிறங்கிய 25 இன்னிங்ஸில் 23 கேட்ச்களை 0.920 என்ற அபாரமான சராசரியில் பிடித்த அவர் டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக கேட்ச்சுகளை பிடித்த வீரர் என்ற மகத்தான உலக சாதனை படைத்து தன்னை சிறந்த ஃபீல்டர் என்பதை நிரூபித்துள்ளார்.

Advertisement