இந்த ஐ.பி.எல் தொடரில் கவனம் ஈர்க்கவுள்ள 5 இளம் அறிமுக வீரர்கள் – லிஸ்ட் இதோ

Debutants

13 வருடங்கள் தொடர்ச்சியாக மிக சிறப்பான வகையில் நடந்து முடிந்துள்ள ஐபிஎல் லீக் தொடரின் 14வது சீசன் இன்று தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் புதுமையான வீரர்கள் வந்து அனைவரது கவனத்தையும் பெற்றுக் கொண்டு செல்வார்கள். அவர்களின் ஆட்டத்தை பொறுத்து இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்று விடுவார்கள். ஐபிஎல் தொடரில் விளையாடி இந்திய அணிக்காக தற்சமயத்தில் நன்றாக விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, நடராஜன், சூர்யகுமார் யாதவ், போன்ற வீரர்கள் அதற்கு எடுத்துக்காட்டாகும். எனவே அதே போல் இந்த ஆண்டு கவனிக்கப்பட வேண்டிய 5 புதுமுக வீரர்கள் பற்றி பார்ப்போம்.

sharukh 1

ஷாருக்கான் :

தமிழகத்தை சேர்ந்த சிறந்த ஆல்ரவுண்டர் வீரரான ஷாருக்கானை பஞ்சாப் அணி 5.25 கோடிக்கு அவரை ஏலம் எடுத்தது. சையது முஷ்டாக் அலி தொடரில் மிக அருமையாக விளையாடிய ஷாருக்கான் ஒரு போட்டியில் 19 பந்துகளில் 40 ரன்கள் குவித்தது அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களித்தார். அதேபோல மற்றொரு போட்டியில் வெறும் 7 பந்துகளில் மேற்கொண்ட 18 ரன்களை அடித்து, தான் ஒரு மிகச் சிறந்த பினிஷர் என்கிற பெயரைப் பெற்றுக் கொண்டார்.

அதிரடியான பேட்டிங் திறமையை கொண்டுள்ள ஷாருக்கானை இதன் காரணமாகவே பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. சையது முஷ்டாக் அலி தொடரை போலவே பஞ்சாப் அணியிலும் ஷாருக்கான் அதிரடியாக ஆடி அனைவரது நற்பெயரையும் பெற்றுக் கொள்வார் என்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

azharudeen 2

- Advertisement -

முகமது அசாருதீன் :

கேரளா அணிக்காக சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடிய முகமது அசாருதீன் சையது முஷ்டாக் அலி தொடரின் வரலாற்றிலேயே இரண்டாவது வேகமான சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் 37 பந்துகளில் சதம் அடித்து அனைவரையும் அசத்தினார். கேரளா அணியை 15.5 ஓவர்களிலேயே 197 ரன்களை எடுக்க வைத்து வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற முகமது அசாருதீன் அந்த போட்டியில் 137 ரன்கள் அளித்துள்ளார், அதில் ஒன்பது பவுண்டரிகளும் 11 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த தொடர் முழுவதும் ஐந்து போட்டிகளிலும் விளையாடிய அசாருதீன் 214 ரன்களை அடித்துள்ளார். அந்த தொடரில் நன்கு விளையாடியதற்கு பரிசாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் 20 லட்சம் ரூபாய்க்கு வாங்க பட்டுள்ளார். எனவே முகமது அசாருதீன் சையது முஷ்டாக் அழி தொடரைப் போலவே ஐபிஎல் தொடரிலும் மிக அதிரடியாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

meriwala

லுக்மன் மெரிவாலா :

குஜராத்தைச் சேர்ந்த லுக்மன் சாதாரண ஒரு கிராமத்தில் இருந்து வந்தவர் ஆவார். வெல்டிங் வேலையைச் செய்து வந்த வீரர் சையது முஷ்டாக் அலி தொடருக்காக விளையாட ஆரம்பித்தார். 2013-14 சையது முஷ்டாக் அலி தொடரில் அணியை வெற்றி அடைய செய்ய லுக்மன் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கினார். அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரரும் அவரை ஆவார். இந்த ஆண்டு நடந்த தொடரில் பரோடா அணிக்காக விளையாடிய லுக்மன் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுச் சென்றார்.

அவரது அணி தமிழக அணியால் காலிறுதிப் போட்டியில் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும் அந்த தொடர் முழுவதும் நன்றாக அவர் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட இருக்கும் லுக்மன், ரபாடா மற்றும் நோர்ஜே உடன் ஒருங்கிணைந்து எதிரணி பேட்ஸ்மேன்களை மிகப்பெரிய அளவில் கதிகலங்க வைப்பார் என்று நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

sakariya

சேட்டன் சக்காரியா :

சேட்டன் தந்தை டெம்போ டிரைவர் ஆவார். விபத்தில் சேட்டன் உடைய தம்பி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது குடும்பத்திற்கு தான் ஒருவர் தான் மிகப்பெரிய நம்பிக்கை என்று கூறியுள்ள சேட்டன் சக்காரியா இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். 2020 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த சக்காரியா, இந்த ஆண்டு நடந்த முடிந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.

இந்த ஆண்டு நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் மத்தியில் ஆறாவது இடத்தில் சக்காரியா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பந்துவீச்சில் அவரது ஏற்கனவே வெறும் 4.90 என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். எனவே நல்ல ஆல்ரவுண்டர் வீரரான சக்காரியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

lalit

லலித் யாதவ் :

24 வயதான அள்ளித் யாதவ் இதுவரை 35 டி20 போட்டிகளில் விளையாடி 560 ரன்களை குவித்துள்ளார். டி20 போட்டிகளில் பொறுத்தவரையில் அவரது அவெரேஜ் 33.33 மற்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 150 ஆகும். இந்த ஆண்டு நடந்த முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் ஒரு போட்டியில் 25 பந்துகளில் 52 ரன்களை அடித்துள்ளார். மேலும் தொடர் முழுவதுமாக 5 போட்டிகளில் விளையாடி 152 ரன்கள் குவித்துள்ளார். அந்த தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 197.40 என்பது குறிப்பிடத்தக்கது. வலதுகை ஆஃப் பிரேக் பந்துகளை வீச கூடிய பந்துவீச்சாளரான நினைத்து அதுவும் இதுவரை 27 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இவரது பௌலிங் ஆவரேஜ் 23.7 மற்றும் எக்கானமி 6.56 ஆகும்.

டெல்லி அணிக்காக விளையாட இருக்கும் லலித் யாதவ் தனது ஆல்ரவுண்டர் திறமையை சரிவர செய்து அனைவரது கவனத்தையும் நிச்சயம் பெறுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.