பல வருடமாக அணியில் இடம்பெற்றும் பிளேயிங் லெவனில் தோனி ஆடவைக்காத 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Dhoni
- Advertisement -

தோனி 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாட தொடங்கினார். 2007 ஆம் ஆண்டு கேப்டன் பதவியையும் கைப்பற்றினார். இந்திய அணியின் வெற்றிக்கு மிகப் பெரும் காரணமாக அமைந்தவர். தோனியின் காலத்தில் இந்திய கிரிக்கெட்டும் வளர்ச்சி பெற்றது. மேலும் அணியை சரியான கட்டமைப்பில் கொண்டு செல்ல ஒரு சில தந்திரமான முடிவுகளையும் தோனி மறைமுகமாக எடுத்துள்ளார். அதில் திறமை இருந்தும் பல வீரர்களை வேறு வழியின்றி அணிக்குள் வெளியே உட்கார வைத்து உள்ளார். அவர்களின் பட்டிகளை தற்போது காண்போம்.

kuldeep 1

- Advertisement -

குல்தீப் யாதவ் :

இவர் இந்திய அணிக்காக 2017 ஆம் ஆண்டு தான் அறிமுகமானார். ஆனால், 2014ஆம் ஆண்டிலிருந்து இந்திய கிரிக்கெட் வட்டத்தில் இருந்து வருகிறார். 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் நன்றாக விளையாடி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்தவர். இவருக்கு திறமை இருந்தாலும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருப்பதால் இவரை தோனி பெரிதாக அணியில் எடுக்கவில்லை . எப்போதும் 15 பேர் கொண்ட அணியில் வைத்துவிட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்துதான் இவரை ஆட வைத்தார் தோனி.

Ishwar

ஈஸ்வர் பாண்டே :

- Advertisement -

2013ம் ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரில் நன்றாக விளையாடியதால் 2014 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாங்கியது. இவர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடினார். இதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார் தொடர்ந்து கிட்டத்தட்ட 5 தொடர்களாக இந்திய அணியுடன் பயணம் செய்தார். ஆனால் தோனி கேப்டனாக இருந்த காரணத்தால் இந்தப் பந்து வீச்சாளரை தோனி ஒரு போட்டியில் கூட ஆட வைக்கவில்லை. ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இரண்டுவிதமான போட்டிகளுக்கும் தேர்வாகி இருந்தார் ஈஸ்வர் பாண்டே

Jagadeesan

என்.ஜெகதீசன் :

- Advertisement -

இவர் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார். கடந்த மூன்று வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடர் ஆனால் மூன்று வருடமாக தோனி கேப்டனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவரை ஒரு போட்டியில் கூட களம் இறக்க வில்லை

கரண் ஷர்மா :

- Advertisement -

2007ஆம் ஆண்டிலிருந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2012-ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரிலும் ஆடிவருகிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கான ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி அதன் காரணமாக இந்திய அணியிலும் இவருக்கு இடம் கிடைத்தது. இங்கிலாந்து தொடருக்கு செல்லும் போது வழக்கம் போல ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் ஆட வைத்தார். கடைசிவரையில் தோனியின் தலைமையில் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

aparajith

பாபா அபாரஜித் :

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வென்றது. இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் பாபா அபராஜித். அதன்பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. தோனி ஐந்து வருடமாக இவரை தன் அணியில் வைத்திருந்தார். ஐந்து வருடத்தில் ஒரு போட்டியில் கூட இவரை ஆட வைத்தது இல்லை. ஒரே ஒரு போட்டியில் மாற்று பீல்டராக இவரை களம் இறங்கிவிட்டார் தோனி. அதேபோல் புனே அணிக்காக விளையாடிய போதும் அந்த அணியில் இரண்டு வருடம் இவரை வைத்திருந்தார். ஆனால் ஒரு போட்டியிலும் இவரை களமிறக்கி விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement