ஐபிஎல் முதல் நாள் ஏலத்தில் கோடிகளை அள்ளிய 5 தமிழக வீரர்கள் – லிஸ்ட் இதோ

TN
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று பெங்களூரு மாநகரில் கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 2 நாட்கள் மெகா அளவில் நடைபெற்று வரும் இந்த ஏலத்தில் பங்கேற்ற 590 வீரர்களில் இன்றைய முதல் நாளில் 161 வீரர்கள் மட்டும் ஏலம் விடப்பட்டார்கள். இன்றைய ஏலம் துவங்கியதுமே ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஸ்வின், குயின்டன் டி காக், டேவிட் வார்னர் உள்ளிட்ட முக்கியமான நட்சத்திர வீரர்களின் பெயர்கள் முதலாவதாக ஏலத்தில் அறிவிக்கப்பட்டது. இவர்களை ஏலத்தில் வாங்க அனைத்து அணிகளும் ஆரம்பம் முதலே மிகுந்த ஆர்வத்துடன் கடுமையாக போட்டி போட்டன.

hugh

- Advertisement -

தமிழக வீரர்கள்:
இந்த ஏலத்தில் வழக்கம் போலவே தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை வாங்க பல கோடி ரூபாய்களுடன் அனைத்து அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. குறிப்பாக தமிழகத்தின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களாக கருதப்படும் தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்கள். சரி ஐபிஎல் 2022 சீசனின் முதல் நாள் ஏலத்தில் கோடிகளை அள்ளிய தமிழக கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.

1. ரவிச்சந்திரன் அஷ்வின் (5 கோடிகள்): இன்று துவங்கிய முதல் நாள் ஏலத்தில் தமிழ்நாட்டில் இருந்து நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் முதல்கட்ட பட்டியலில் இடம் பிடித்திருந்தது. தமிழகம் கண்ட மகத்தான கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவராக கருதப்படும் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த வருடம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வந்தார். இந்தியா மற்றும் ஐபிஎல் என அவர் பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருவதால் அவரை விலைக்கு வாங்க ஒரு சில அணிகள் போட்டி போட இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது.

karthik 1

2. தினேஷ் கார்த்திக் (5.50 கோடிகள்): தமிழகத்தின் நட்சத்திர அனுபவ விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக் இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார். இருப்பினும் இவரை 5.50 கோடிகளுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் போட்டி போட்டு வாங்கியது. கடந்த சீசன்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் கேப்டனாகவும் செயல்பட்ட அனுபவம் கொண்டவர். தற்போது பெங்களூர் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ள அவர் ஏற்கனவே அந்த அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

3. வாசிங்டன் சுந்தர்: தமிழகத்தைச் சேர்ந்த இளம் சுழல்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அபாரமாக பந்து வீசி இருந்தார். ஏற்கனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கடந்த சீசன்களில் விளையாடி வந்த இவர் பவர்ப்ளே ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்கும் வல்லமை படைத்துள்ளார். இவரை இந்த ஏலத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் 8.75 என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.

4. ஷாருக்கான் (9 கோடிகள்): தமிழகத்தைச் சேர்ந்த வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக விளங்கும் ஷாருக்கான் இந்த ஏலத்தில் பெரிய அளவில் விலை போவார் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் கடந்த வருடம் நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்சர் அடித்து தமிழகத்திற்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். அதன் பின் நடந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்த அவர் தமிழகத்தின் பினிசெர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அப்படிபட்ட நிலையில் இன்று நடந்த ஏலத்தில் எதிர்பார்த்தது போலவே இவரை வாங்க அனைத்து அணிகளும் கடும் போட்டி போட்ட நிலையில் இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் இவரை 9 கோடிகளுக்கு வெற்றிகரமாக வாங்கியது. இவர் ஏற்கனவே கடந்த வருடம் இதே பஞ்சாப் அணிக்காக 5.50 கோடிகளுக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் காரணமாக இந்த ஏலத்தின் முதல் நாளில் அதிக தொகைக்கு விலை போன தமிழக வீரராக ஷாருக்கான் அசத்தியுள்ளார்.

nattu 1

5.நடராஜன் : கடந்த சில சீசன்களாக சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் நடராஜன் தனது சிறப்பான பந்துவீச்சை அவர்களுக்கு வழங்கி வருவதால் அவரை 4 கோடி ரூபாய்க்கு மீண்டும் சன் ரைசர்ஸ் அணி மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement