ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகளை பதிவு செய்துள்ள டாப் 5 அணிகளின் பட்டியல் இதோ

INDvsSL
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் உலக கோப்பையை போல் ஆசிய கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை வரும் அகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இம்முறை 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த தொடரில் ஆசியாவின் டாப் 6 அணிகள் கோப்பைக்காக மோத உள்ளன. கடந்த 1984இல் முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் ஒவ்வொரு 2 வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் இந்த தொடர் வரலாற்றில் இதுவரை 14 முறை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

அரசியல், எல்லைப் பிரச்சனைகள் போன்ற காரணங்களால் சில வருடங்களில் ரத்து செய்யப்பட்ட இந்த ஆசிய கோப்பை கடந்த 2016 முதல் அடுத்து வரும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 50 ஓவர் அல்லது 20 ஓவர் தொடராக தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 14 தொடர்களில் 7 கோப்பைகளை அதாவது 50% கோப்பைகளை வென்றுள்ள இந்தியா வெற்றிகரமான ஆசிய அணியாக சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

வெற்றிகரமான அணிகள்:
கடைசியாக கடந்த 2018இல் இதே துபாயில் நடைபெற்ற 50 ஓவர் ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் அசத்திய இந்தியா இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து கோப்பையை வென்றதால் இம்முறை நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக 5 கோப்பைகளை வென்றுள்ள இலங்கை 2வது வெற்றிகரமான அணியாகவும் 2 கோப்பைகளை வென்ற பாகிஸ்தான் 3வது வெற்றிகரமான அணியாகவும் திகழ்கின்றது.

வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், ஓமன் போன்ற அணிகள் வரலாற்றில் ஒருமுறைகூட கோப்பையை வென்றதில்லை. அப்படி கோப்பைகளின் அடிப்படையில் இந்தியா வெற்றிகரமான ஆசிய அணியாக முதலிடத்தில் ஜொலிக்கும் நிலையில் போட்டிகளின் அடிப்படையில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகளைப் பற்றிய விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம்:

- Advertisement -

5. ஆப்கானிஸ்தான் 5: இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் கடந்த 2001இல் முதல் முறையாக ஐசிசி உறுப்பினராகி 2009 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. அந்த வகையில் கடந்த 2014இல் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெற்ற அந்த அணி 4 போட்டிகளில் பங்கேற்று 1 வெற்றியை பிடித்து 4வது இடத்தை மட்டுமே பிடித்தது.

அதன்பின் 2016, 2018 ஆகிய ஆசிய கோப்பை தொடர்களிலும் பங்கேற்ற அந்த அணி மொத்தம் இதுவரை 12 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் 45.83% என்ற சராசரியில் பதிவு செய்து இந்த பட்டியலில் 5வது இடம் பிடிக்கிறது. 1 போட்டி டையில் முடிந்தது.

- Advertisement -

4. வங்கதேசம் 10: 1984இல் நடைபெற்ற முதல் ஆசிய கோப்பையை தவிர்த்து எஞ்சிய அனைத்து தொடர்களிலும் பங்கேற்று வரும் வங்கதேசம் சில வருடங்களில் தங்களது சொந்த மண்ணில் விளையாடிய போதிலும் கோப்பையை வென்றதில்லை. 1986 முதல் இதுவரை 48 போட்டிகளில் பங்கேற்றுள்ள அந்த அணி வெறும் 10 வெற்றிகளையும் 38 தோல்விகளையும் 20.83% என்ற மோசமான சராசரியில் பதிவு செய்து இந்த பட்டியலில் 4வது இடம் பிடிக்கிறது.

உச்சபட்ச செயல்பாடுகளாக கடந்த 2012, 2016, 2018 ஆகிய வருடங்களில் இறுதிப் போட்டி வரை தகுதி பெற்ற அந்த அணி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது.

- Advertisement -

3. பாகிஸ்தான் 28: ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆசிய கோப்பையிலிருந்து பங்கேற்று வரும் பாகிஸ்தான் 90களில் இந்தியாவைக் காட்டிலும் வலுவான அணியாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்துள்ள போதிலும் இந்த ஆசிய கோப்பையில் சுமாராகவே செயல்பட்டு வெறும் 2 கோப்பைகளை மட்டுமே வென்றுள்ளது.

2000, 2012 ஆகிய வருடங்களில் மொயின் கான் மற்றும் மிஸ்பா-உல்-ஹக் ஆகியோரது தலைமையில் சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணி 1986, 2014 ஆகிய வருடங்களில் இறுதிப் போட்டி வரை வந்து தோல்வியடைந்தது. மொத்தமாக இதுவரை 49 போட்டிகளில் பங்கேற்றுள்ள அந்த அணி 28 வெற்றிகளையும் 20 தோல்விகளையும் 58.33% என்ற நல்ல சராசரியில் பதிவு செய்து இந்த பட்டியலில் 3வது இடம் பிடிக்கிறது. 1 போட்டி டையில் முடிந்தது.

2. இலங்கை 35: 1986, 1997, 2004, 2008, 2014 ஆகிய வருடங்களில் முறையே துலிப் மென்டிஸ், அர்ஜுனா ரணதுங்கா, மர்வான் அட்டப்பட்டு, மகிலா ஜெயவர்த்தனே, ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோரது தலைமையில் 5 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான அணியாக இலங்கை திகழ்கிறது. ஆனாலும் வெற்றிகளை விட தோல்விகளை தான் அந்த அணி அதிகம் சந்தித்துள்ளது என்றே கூற வேண்டும்.

ஏனெனில் 1986, 1988, 1990, 1995, 2000, 2010 ஆகிய 6 வருடங்களில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று 5 முறை இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது. மொத்தமாக இதுவரை 54 போட்டிகளில் பங்கேற்றுள்ள அந்த அணி 35 வெற்றிகளையும் 19 தோல்விகளையும் 64.81% என்ற சிறப்பான சராசரியில் பதிவு செய்து இந்த பட்டியலில் 2வது இடம் பிடிக்கிறது.

1. இந்தியா 36: சுனில் கவாஸ்கர் 1986, திலிப் வெங்சர்க்கார் 1988, முகமது அசாருதீன் 1990, 1995, எம்எஸ் தோனி 2010, 2016 மற்றும் ரோகித் சர்மா 2018 ஆகியோரது தலைமையில் 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா வெறும் 3 இறுதிப் போட்டிகளில் மட்டுமே தோற்றுள்ளது.

அந்த வகையில் இறுதிப் போட்டிகளிலும் வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா இந்த தொடரில் இலங்கை விளையாடிய அதே 54 போட்டிகளில் விளையாடினாலும் அந்த அணியை விட 36 வெற்றிகளையும் 16 தோல்விகளையும் 68.86% என்ற சூப்பரான சராசரியில் பதிவு செய்து போட்டிகளின் அடிப்படையிலும் வெற்றிகரமான அணியாக சாதனை படைத்த இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 1 போட்டி டையில் முடிந்தது.

Advertisement