ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை 300க்கும் மேற்ப்பட்ட ரன்களை விளாசிய டாப் 5 அணிகளின் பட்டியல்

indian-team
- Advertisement -

நூற்றாண்டுக்கு முன்பு துவங்கப்பட்ட கிரிக்கெட் 5 நாட்களைக் கொண்ட டெஸ்ட் போட்டிகளுக்கு உருவாக்கப்பட்டு 19-ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான வருடங்களில் நடைபெற்றது. இருப்பினும் 5 நாட்கள் முடிந்தும் முடிவுகளை கொடுக்காமல் டிராவில் முடிவடைந்த காரணத்தால் ரசிகர்களை கவர்வதற்காக ஒருநாளில் முடிவை காணும் வகையில் 60 ஓவர் போட்டிகள் துவங்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் நாளடைவில் 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதனால் 90களில் ரசிகர்களின் அபிமான கிரிக்கெட்டாக உருவெடுத்த ஒருநாள் போட்டிகள் தற்போது விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ள டி20 கிரிக்கெட்டின் வருகையால் அழிந்து வருவதாக சிலர் கருதுகின்றனர்.

worldcup

ஆனால் அதிரடியான டி20 மற்றும் பொறுமையான டெஸ்ட் ஆகிய 2 வகையான கிரிக்கெட்டுக்கும் மத்தியில் நிற்கும் இந்த ஒருநாள் போட்டிகள் ஆரம்பத்தில் நிதானத்தை காட்டி கடைசியில் அதிரடியை வெளிப்படுத்தினால் வெற்றி காணலாம் என்ற 2 வகையான கிரிக்கெட்டையும் சேர்ந்த கலவையாக இருப்பதால் இன்னும் அதனுடைய தரம் குறைந்து போகவில்லை என்பதே உண்மையாகும். அதுபோக என்னதான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் டி20 உலகக்கோப்பை வந்தாலும் கிரிக்கெட்டின் சாம்பியனை இந்த 50 ஓவர் போட்டிகளை மையப்படுத்திய உலக கோப்பையிலிருந்து தான் நாம் தேர்வு செய்கிறோம். எனவே தனக்கென மதிப்பும் மவுசும் சுவாரசியமும் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் வெற்றி பெறுவதற்கு 300 ரன்கள் அடிக்க வேண்டும் என்பது அவசியமாகிறது.

- Advertisement -

அதிக 300:
ஆரம்ப காலத்தில் 60 ஓவர்களில் 200 ரன்களை தொடுவதே கடினமாக இருந்த நிலையில் 90களில் சனாத் ஜெயசூரியா, ஆடம் கில்கிறிஸ்ட், வீரேந்திர சேவாக் போன்ற அதிரடி நாயகர்கள் தங்களது அதிரடியால் 200 – 300 போன்ற ரன்களை எளிதாக எடுக்க முடியும் என்று நிரூபித்தார்கள். அதன்பின் டி20 போட்டிகளின் வருகையால் இப்போதெல்லாம் இங்கிலாந்து போன்ற அணிகள் நிறைய போட்டிகளில் 400 ரன்களை அசால்டாக அடிப்பதை பார்க்க முடிகிறது. இருப்பினும் அனைத்து அணிகளும் 400 ரன்களை அடிக்க முடியாது என்ற நிலைமையில் 300 என்பது அனைத்து அணிகளும் அடிக்கக்கூடியது என்பதுடன் வெற்றிக்கு போராடும் தைரியத்தை கொடுக்கும் நல்ல ரன்களாகும்.

Ganguly-1

ஆனால் இப்போதும் கூட ஒருநாள் கிரிக்கெட்டில் 300 ரன்கள் அடிப்பது திறமையான பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில் சவாலான ஒன்றாகவே இருக்கிறது. ஏனெனில் அதற்கு குறைந்தது ஒருவர் சதமும், 2 – 3 பேட்ஸ்மேன்கள் அரை சதமும் அடிக்க வேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில் 3 – 4 பேட்ஸ்மேன் சேர்ந்து 40, 70 போன்ற ரன்களை அடிக்க வேண்டும் என்பதால் அனைத்து போட்டிகளிலும் அதை செய்வது சாத்தியம் கிடையாது. அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் 300 அல்லது மேற்பட்ட ரன்களைக் குவித்த டாப் 5 அணிகளை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. இங்கிலாந்து 84: 2015க்குப்பின் அசால்டாக 400 ரன்களை அடிக்கும் அணியாக உருவெடுத்துள்ள இங்கிலாந்து சமீபத்தில் நெதர்லாந்தை வதம் செய்து 498 ரன்களைக் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.

Eng

ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களில் வருகையால் இப்போதெல்லாம் அசால்ட்டாக 300 ரன்களை தொடும் அந்த அணி வரலாற்றில் 84 போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளது. அதில் 59 வெற்றிகளை பதிவு செய்துள்ள அந்த அணி 23 தோல்விகளை பதிவு செய்து இந்த பட்டியலில் 5வது இடம் பிடிக்கிறது.

- Advertisement -

4. பாகிஸ்தான் 86: இன்சமாம்-உல்-ஹக், சாகித் அப்ரிடி, யூனிஸ் கான் போன்ற தரமான வீரர்களால் வரலாற்றில் நிறைய போட்டிகளில் 300 ரன்களைக் குவித்த பாகிஸ்தான் சமீப காலங்களில் பாபர் அசாம் போன்ற இளம் வீரர்களின் வருகையால் அதை தொடர்ச்சியாக செய்து வருகிறது.

pakistan-vs-zimbabwe

அந்த வகையில் வரலாற்றில் இதுவரை 86 போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ள அந்த அணி அதில் 69 வெற்றிகளையும் 17 தோல்விகளையும் பதிவு செய்து இந்த பட்டியலில் 4வது இடம் பிடிக்கிறது.

- Advertisement -

3. தென் ஆப்பிரிக்கா 87: ஜாக் காலிஸ், கிராம் ஸ்மித், ஏபி டிவிலியர்ஸ், ஹாஷிம் அம்லா என வரலாற்றில் தரமான வீரர்களை உருவாக்க தவறாத தென் ஆப்பிரிக்கா உலகிலேயே ஆஸ்திரேலியா நிர்ணயித்த 438 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்து உலக சாதனை படைத்த பெருமைக்குரிய அணியாகும்.

அந்த வகையில் வரலாற்றில் 87 போட்டிகளில் 300+ ரன்களை அடித்துள்ள அந்த அணி அதில் வெறும் 8 போட்டியில் மட்டுமே தோற்றுள்ளது. 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற வகையில் 78 போட்டிகளில் வென்று அசத்தியுள்ளது.

2. ஆஸ்திரேலியா 113: ஒருநாள் கிரிக்கெட்டின் கிங் என்று பாராட்டு வகையில் 5 உலக கோப்பைகளை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள ஆஸ்திரேலியாவுக்கு வரலாற்றில் ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹைடன், ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற எண்ணற்ற வீரர்கள் அசால்ட்டாக 300 ரன்களை குவிக்க உதவியுள்ளனர்.

australia

அதனால் வரலாற்றில் 113 போட்டிகளில் 300 ரன்களை குவித்துள்ள ஆஸ்திரேலியா அதில் 17 போட்டிகளில் மட்டுமே தோற்றுள்ளது. 95 போட்டிகளில் வென்று இப்பட்டியலில் 2வது இடம் பிடிக்கிறது.

1. இந்தியா 122: வரலாற்றில் பவுலர்களை விட தரமான பேட்ஸ்மேன்களை உருவாக்கும் நாடாக பெருமை கொண்டுள்ள இந்தியாவுக்கு சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் துவங்கி இப்போது விராட் கோலி, ரோகித் சர்மா என ஏராளமான உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் வந்து கொண்டே இருப்பதால் எப்போதுமே 300 ரன்களை எளிதாக எடுக்கும் அணியாக இருந்து வருகிறது.

india-cricket-team

அந்த வகையில் வரலாற்றில் 122 போட்டிகளில் 300 ரன்களைக் குவித்துள்ள இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் 300 ரன்களைக் குவித்த அணியாக உலக சாதனை படைத்துள்ளது. அதில் 26 தோல்விகளை பதிவு செய்த இந்தியா 93 போட்டிகளில் வெற்றி வாகை சூடி இப்பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது.

Advertisement