பெங்களூரு அணியில் ஏ.பி.டி-யின் இடத்தை நிரப்ப தகுதியான 5 மாற்று வீரர்கள் – லிஸ்ட் இதோ

ABD-1

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஏ.பி.டி வில்லியர்ஸ் கடந்த 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அதனை தொடர்ந்து உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்த அவர் ஆர்.சி.பி அணிக்காக கடந்த 10 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன் என்று அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினார்.

ஏனெனில் ஏ.பி.டி-யின் கிரிக்கெட் கரியர் இன்னும் சில ஆண்டுகள் இருந்திருக்க வேண்டுமென்றும் ரசிகர்களை அவர் மகிழ்விக்க வேண்டும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியளித்தார். ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை 2008-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 184 போட்டிகளில் விளையாடி 5162 ரன்களை குவித்துள்ளார். ஆர்சிபி அணிக்காக கடந்த 10 ஆண்டுகளாக விளையாடி வரும் ஏபிடி மறக்க முடியாத பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்.

- Advertisement -

அவரது இடம் எப்போதுமே ஆர்சிபி அணிக்கு முக்கியமான ஒன்று என்ற நிலையில் அடுத்த மெகா ஏலத்திற்கு முன்னர் அவர் இந்த ஓய்வை அறிவித்துள்ளார். ஏனெனில் தற்போது 37 வயதாகும் அவர் ஏலத்தில் தேர்வாகும் பட்சத்தில் அடுத்த சில ஆண்டுகள் விளையாடியாக வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் தற்போதைய பேட்டிங் திறன் அந்த அளவிற்கு இல்லை என்பதை ஒப்புக்கொண்ட டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் அவரது இந்த விலகலுக்கு பிறகு ஏபிடி-யின் இடத்தை பெங்களூரு அணியில் நிரப்பப் போகும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பே அதிகளவில் உள்ளது. அந்த வகையில் இடத்தை சரியாக நிரப்பக்கூடிய 5 வீரர்களை நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். இவர்களை தவிர வேறு யாரேனும் அந்த இடத்திற்கு தகுதியானவர் என்றால் அதை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள். அதன்படி அவரது இடத்தை நிரப்ப சரியான வீரர்களாக பார்க்கப்படும் 5 வீரர்கள் :

- Advertisement -

இதையும் படிங்க : இவர்கிட்ட சரக்கு இருக்கு. இவரும் பும்ராவும் ஒன்னா விளையாடுனா ஒன்னும் பண்ண முடியாது – டேனியல் வெட்டோரி

1) ஜாஸ் பட்லர் – இங்கிலாந்து

2) ஜானி பேர்ஸ்டோ – இங்கிலாந்து

3) லியாம் லிவிங்ஸ்டன் – இங்கிலாந்து

4) ஏய்டன் மார்க்கம் – தென்னாப்பிரிக்கா

5) ஹெட்மையர் – வெஸ்ட் இண்டீஸ்

இந்த ஐந்து அதிரடி வீரர்கள் ஏபி டிவிலியர்ஸ்க்கு மாற்று வீரராக இருக்க தகுதி உள்ளவர்களாக இருக்கின்றார்கள். மற்றபடி யாரேனும் அவரது இடத்தில் விளையாட வேண்டும் என்று நீங்கள் விருப்பப்பட்டால் அந்த வீரரின் பெயரை கமெண்ட் பகுதியில் பதிவிடலாம் நண்பர்களே.

Advertisement