இவர்கிட்ட சரக்கு இருக்கு. இவரும் பும்ராவும் ஒன்னா விளையாடுனா ஒன்னும் பண்ண முடியாது – டேனியல் வெட்டோரி

Vettori
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று 3 க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த தொடரில் சீனியர் வீரர்கள் ஓய்வில் இருந்ததால் இரண்டு அறிமுக வீரர்கள் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி முகமது சிராஜ்-க்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இடம் பிடித்த ஹர்ஷல் படேல் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Harshal-2

- Advertisement -

கடந்த ஐபிஎல் தொடரில் 32 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையுடன் பர்ப்பிள் தொப்பியை பெற்ற அவர் இந்திய அணிக்காக இந்த தொடரில் முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்றார். தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

இந்நிலையில் ஹர்ஷல் படேல் குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான டேனியல் வெட்டோரி கூறுகையில் : ஹர்ஷல் படேல் ஐபிஎல் தொடரில் நிறைய அணிகளுக்காக விளையாடி உள்ளார். அதுமட்டுமின்றி டெத் ஓவர்களில் அவரது பவுலிங் சிறப்பாக இருக்கிறது. நிறைய பந்துகளை அவர் வைத்திருக்கிறார். பும்ராவுடன் இணைந்து அவர் டெத் ஓவர்களை வீசும் பட்சத்தில் இந்திய அணியின் பவுலிங்கை யாராலும் அசைக்க முடியாது.

harshal

அந்த அளவிற்கு டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் திறனை ஹர்ஷல் படேல் வைத்துள்ளார். பும்ராவை பொறுத்தவரை எப்போதும் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீச கூடியவர். தற்போது அவருடன் கூடுதலாக ஹர்ஷல் படேலும் இணையும் பட்சத்தில் இன்னும் பலமாக இந்திய அணியின் பவுலிங் பலம் மாறும். முதல் 6 ஓவர்களில் நல்ல வேகமாக வீசும் பந்துவீச்சாளர்களை வீச வைத்துவிட்டு பின்னால் இவர்களை பயன்படுத்தும்போது நிச்சயம் இன்னும் பலமடையும்.

- Advertisement -

இதையும் படிங்க : பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கண்டிப்பா நடக்கும். இந்தியா பங்கேற்குமா ? – ஐ.சி.சி தலைவர் பேட்டி

ஹர்ஷல் படேல் ஸ்லோ பந்துகளை சிறப்பாக வீசுகிறார். இதனால் மிடில் ஓவர்களில் கூட விக்கெட் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்று வெட்டோரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. முகமது சிராஜிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பிடித்த ஹர்ஷல் படேல் சிறப்பாக விளையாடி உள்ளதால் அடுத்த டி20 தொடரிலும் நிச்சயம் அவர் இடம் பிடிப்பார் என்பது உறுதி.

Advertisement