பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கண்டிப்பா நடக்கும். இந்தியா பங்கேற்குமா ? – ஐ.சி.சி தலைவர் பேட்டி

Greg-barclay
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் ஐசிசி அடுத்த 10 ஆண்டுகளுக்கு நடபெற இருக்கும் அனைத்து வகையான ஐசிசி தொடர்களையும் ஒரு பட்டியலாக அறிவித்திருந்தது. அதன்படி அடுத்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து 8 ஐ சி சி தொடர்கள் நடைபெற உள்ளன. அதில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் (சாம்பியன்ஸ் டிராபி) ஐ.சி.சி தொடர் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Cup

- Advertisement -

ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டில் நிலவிவரும் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக எந்த ஒரு அணியும் அங்கு சென்று விளையாடாத காரணத்தினால் இருதரப்பு தொடர்கள் நடைபெற்றாலும் ஒரு பொதுவான ஒரு மைதானத்தில் போட்டிகள் நடைபெறும். பொதுவாகவே பாகிஸ்தான் அணியுடன் இருதரப்பு தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுதான் பாகிஸ்தான் அணியுடன் விளையாடி வருகிறது.

எந்த ஒரு அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடுவது கிடையாது. ஆனால் தற்போது மெல்ல மெல்ல பாகிஸ்தான் நாட்டிற்கு சில அணிகள் செல்கின்றன. இருப்பினும் அனைத்து அணிகளும் பாகிஸ்தான் செல்லுமா ? என்பது சந்தேகம்தான். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி திட்டமிட்டபடி பாகிஸ்தான் நாட்டில் தான் நடைபெறும் என்று ஐசிசி தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

pak

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நிச்சயம் பாகிஸ்தானில் தான் நடக்கும். அங்கு பல ஆண்டுகள் கழித்து ஐ.சி.சி போட்டிகள் நடைபெறுவதால் நிச்சயம் ரசிகர்கள் உற்சாகம் அடைவார்கள். எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இந்த தொடரானது நடைபெறும் என்று நம்புகிறோம். பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் அந்த தொடரில் அனைத்து அணிகளும் பங்கேற்கும். மேலும் பாகிஸ்தானில் நாங்கள் தொடரை நடத்த முடியுமா ? என்பதைப் பற்றி யோசிக்கவில்லை, நிச்சயமாக நடத்த முடியும் என்று நம்பினோம்.

- Advertisement -

இதையும் படிங்க : தென்னாபிரிக்க தொடரில் விளையாடனுனா பாண்டியா இதை செய்தே ஆகனும் – பி.சி.சி.ஐ அனுப்பிய மெசேஜ்

நிச்சயம் பாகிஸ்தானிற்கு வந்து அனைத்து அணிகளும் விளையாடுவார்கள் என்று ஐசிசி தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ள இந்தக் கருத்தின்படி பார்க்கையில் நிச்சயம் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடியாக வேண்டும். அப்படி விளையாடாமல் அந்த தொடரில் இருந்து வெளியேறினால் நமக்குத்தான் ஐசிசி தொடரில் பங்கேற்க வாய்ப்பு இல்லாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement