அடுத்த தொடரில் மும்பை அணி கழட்டிவிட இருக்கும் 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

MI
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரின் ஐந்தாவது கோப்பையை வென்று மிகப் பெரும் சாதனையை படைத்துவிட்டது. சொல்லப்போனால் இந்த வருடம் அந்த அணியை எதிர்த்து நிற்க எந்த ஒரு அணியும் முன்வரவில்லை என்பதுதான் உண்மை. எந்த ஒரு சிரமமும் இன்றி மிக எளிமையாக இந்த வருட கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி தட்டி சென்றதுவிட்டது. இந்நிலையில் அடுத்த வருடம் மிகப் பெரிய ஏலம் நடக்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துவிட்டது. ஒவ்வொரு அணியும் பல வீரர்களை வெளியேற்ற வேண்டியிருக்கும். அப்படி மும்பை இந்தியன்ஸ் அணி கண்டிப்பாக கழட்டி விடப்போகும் 5 வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.

nathan

- Advertisement -

நதன் கூல்டர் நைல் :

இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார். ஏற்கனவே மும்பை அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் டிரென்ட் போல்ட் ஆகிய வீரர்கள் பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கின்றனர். இருவரும் சேர்ந்து எதிர் அணியை துவம்சம் செய்து வருகின்றனர். அந்த நேரத்தில் மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவையில்லை என்பதை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தோன்றும் இதன் காரணமாக இவர் அடுத்த வருட ஏலத்தில் கழட்டிவிட படுவார்.

tiwary

சவுரப் திவாரி :

- Advertisement -

இந்த வருட மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் மிகப் பிரமாதமாக இருந்தது. குவின்டன் டி காக், ரோகித் சர்மா சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா போன்ற மாபெரும் வீரர்கள் இருக்கும் அணியில் சவுரப் திவாரி போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு இடம் கிடைக்காது என்றே தெரிகிறது. மேலும் அவரது இடத்தை நிரப்ப ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகத் திறமையான வீரர்கள் இளம் வயதில் இருக்கிறார்கள்.

lynn

கிறிஸ் லின் :

- Advertisement -

கொல்கத்தா அணியில் இருந்து மும்பை அணியால் வாங்கப்பட்டதாக இந்த வருடம் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. ஏனெனில் ரோகித் சர்மா மற்றும் குவின்டன் டி காக் ஆகிய இருவரும் அந்த இடத்தை கனகச்சிதமாக நிரப்பிவிட்டனர். அடுத்த வருடம் இவருக்கு அந்த அணியில் வேலை இருக்காது என்றே நினைக்கிறேன்.

tare

ஆதித்யா டாரே :

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர். இவர் இவருக்கு தற்போது 33 வயதாகிறது. ஐபிஎல் தொடரிலும் அந்த அளவிற்கு பெரிதாக ஏதும் சாதித்ததில்லை இவர் ஒரு மாற்று விக்கெட் கீப்பராக தான் அணியில் இருக்கிறார். இவருக்குப் பதிலாக ஒரு இளம் வீரரை அடுத்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Jayant-Yadav

ஜெயந்த் யாதவ் :

இந்த வருடம் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஜெயந்த் யாதவ் விளையாடினார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சுக்கு பஞ்சமில்லை. வேகப்பந்து வீச்சாளர்களும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட்டுகளை விட்டுவைப்பதில்லை. அப்படியே தாண்டி வந்தாலும் ராகுல் சாகர் மற்றும் க்ருனால் பாண்டியா ஆகிய இருவருமே மிகச்சிறப்பாக தங்களது வேலையை செய்து வருகிறார்கள். அப்படி பார்க்கையில் இவருக்கு கண்டிப்பாக அடுத்த வருடம் இடம் கிடைக்காது என்பதே நிதர்சனம்.

Advertisement