பர்த்டே ஸ்பெஷல் : இந்தியா டூ ஐபிஎல் வரை கூலான கேப்டனாக எம்எஸ் தோனி படைத்துள்ள – சாதனைகளின் பட்டியல்

Dhoni world cup
- Advertisement -

ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள நட்சத்திர முன்னாள் வீரர் எம்எஸ் தோனி ஜூலை 7ஆம் தேதியன்று தம்முடைய 42வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கிரிக்கெட் மிகவும் பிரபலமில்லாத ராஞ்சியில் பிறந்து மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்து புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய அவர் மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று தோற்க வேண்டிய நிறைய போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்த மகத்தான ஃபினிஷராக போற்றப்படுகிறார். மேலும் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட இப்போதுள்ள வீரர்களுக்கு அப்போதே வாய்ப்பு கொடுத்து இந்தியாவின் வருங்காலத்தை வளமாக கட்டமைத்த பெருமைக்குரிய அவர் ஐபிஎல் தொடரிலும் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக அவர் சாதனை படைத்துள்ளார்.

dhoni 2013 Champions Trophy World Cup

- Advertisement -

அந்த வகையில் பன்முகத் திறமை கொண்ட தோனியிடம் அழுத்தமான சமயங்களில் பதறாமல் யாரும் நினைத்துப் பார்க்காத வித்தியாசமான முடிவுகளை தைரியமாக எடுத்து வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் கேப்டன்ஷிப் மிகவும் பிரபலமானது. குறிப்பாக உள்ளூர் போட்டிகளில் கூட அனுபவமில்லாத போதிலும் 2010 ஐபிஎல் ஃபைனலில் பொல்லார்ட் போல எதிரணி பேட்ஸ்மேன்கள் என்ன நினைப்பார்கள் என்பதை முன்கூட்டியே கணித்து அதற்கேற்றார் போல ஃபீல்டர்களை நிறுத்தி அவுட்டாக்கும் அவருடைய மாஸ்டர் மைண்ட் அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம். இந்த நிலையில் கேப்டனாக அவர் படைத்துள்ள சில மகத்தான சாதனைகளின் பட்டியலை பார்ப்போம்:

1. 3 விதமான கோப்பை: 2007 டி20 உலகக்கோப்பை 2011 உலகக் கோப்பை 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களில் இந்தியாவுக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த அவர் உலகிலேயே 3 விதமான வெள்ளைப்பந்து ஐசிசி உலகக் கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் கூட படைக்காத உலக சாதனை படைத்துள்ளார்.

Trophies Won By MS Dhoni World

மேலும் 2010இல் தரவரிசையில் இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாகவும் முன்னேற்றிய அவரை சமீபத்திய ஐசிசி தொடர்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் போதெல்லாம் இந்திய ரசிகர்கள் நினைத்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

2. அதிக போட்டிகள்: ஓரிரு வருடங்கள் நிலைத்து நின்று வழி நடத்த தடுமாறும் வீரர்களுக்கு மத்தியில் 60 டெஸ்ட், 200 ஒருநாள், 72 டி20 என 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 332 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்திய தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார். 2வது இடத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் 324 போட்டிகளுடன் உள்ளார்.

Kapil and Dhoni

3. அதிக சிக்ஸர்கள்: அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (6641) மற்றும் சிக்சர்கள் அடித்த ஆசிய கேப்டன் (204) என்ற சாதனையை படைத்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை (110) பதிவு செய்த ஆசிய கேப்டன் என்ற மகத்தான சாதனையும் படைத்துள்ளார்.

- Advertisement -

4. ஐபிஎல் கேப்டன்: மேலும் ஐபிஎல் வரலாற்றில் 226 போட்டிகளில் 133 வெற்றிகளை பதிவு செய்து 5 கோப்பைகளை வென்றுள்ள அவர் அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு அதிக வெற்றிகளை பதிவு செய்துள்ள வெற்றிகரமான கேப்டன் என்ற சாதனையும் படைத்துள்ளார். அதே 5 கோப்பைகளை வென்றுள்ள ரோகித் சர்மா 158 போட்டிகளில் 87 வெற்றிகளைப் பெற்று 2வது இடத்தில் இருக்கிறார்.

Dhoni-3 IPL

5. டி20 நாயகன்: அத்துடன் டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக தொடர்களில் கேப்டனாக செயல்பட்ட வீரர் என்ற உலக சாதனையும் தோனி படைத்துள்ளார். அவர் 2007, 2009, 2010, 2012, 2014, 2016 ஆகிய 5 உலகக் கோப்பைகளில் கேப்டனாக செயல்பட்டு இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க:உள்ளே நுழைந்த நெதர்லாந்துடன் மோதல் எப்போது? அப்டேட் செய்யப்பட்ட இந்தியாவின் 2023 உ.கோ அட்டவணை இதோ

6. ஃபைனல் நாயகன்: மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிக பல தரப்பு தொடர்களின் ஃபைனல்களில் கேப்டன்ஷிப் செய்து அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். குறிப்பாக 2011 உலகக்கோப்பை உட்பட ஒருநாள் கிரிக்கெட்டில் 6 பலதரப்பு அணிகள் பங்கேற்ற தொடரில் இந்தியாவை ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற அவர் அதில் 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

Advertisement