உள்ளே நுழைந்த நெதர்லாந்துடன் மோதல் எப்போது? அப்டேட் செய்யப்பட்ட இந்தியாவின் 2023 உ.கோ அட்டவணை இதோ

INDia
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கு முன் 1987 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் பாகிஸ்தான், இலங்கை போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து இத்தொடரை நடத்திய இந்தியா வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களது நாட்டில் நடத்த உள்ளது ஸ்பெஷலாகும். அந்த வகையில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 16 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் கோப்பையை வெல்வதற்காக மோத உள்ளன.

worldcup

- Advertisement -

அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. மேலும் இத்தொடரில் களமிறங்கும் இந்தியா உட்பட டாப் 8 அணிகள் ஏற்கனவே சூப்பர் லீக் சுற்றின் வாயிலாக நேரடியாக தகுதி பெற்ற நிலையில் கடைசி 2 அணிகளை தீர்மானிக்க ஜிம்பாப்வே நாட்டில் குவாலிபயர் தொடர் நடைபெற்று வந்தது.

முழுமையான அட்டவணை:
அதில் 1996 சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை லீக் மற்றும் சூப்பர் 6 சுற்றில் தொடர் வெற்றிகளை பெற்று ஃபைனலுக்கு முன்னேறி இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு 9வது அணியாக தகுதி பெற்று அசத்தியது. ஆனால் கடைசி இடத்திற்கு போட்டி போட்ட வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பம் முதலே தடுமாறி ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து போன்ற கத்துக்குட்டிகளிடம் தோற்று வெளியேறியது. குறிப்பாக 1975, 1979 வருடங்களில் சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணி முதல் முறையாக உலக கோப்பையில் பங்கேற்காமல் வெளியேறியது அனைவரையும் சோகத்தில் வாழ்த்தியது.

NED vs SCo

மறுபுறம் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளை தோற்கடித்த ஜிம்பாப்வே சூப்பர் 6 ஸ்காட்லாந்திடம் தோற்று பரிதாபமாக வெளியேறியது. அதை விட நேற்று நடைபெற்ற போட்டியில் 90% வெற்றி வாய்ப்பை வைத்திருந்த ஸ்காட்லாந்து நிர்ணயித்த 278 ரன்களை 44 ஓவர்களுக்குள் வெற்றிகரமாக சேசிங் செய்த நெதர்லாந்து ரன் ரேட் அடிப்படையில் நூலிழைலையில் 10வது அணியாக உலக கோப்பைக்கு தகுதி பெற்று அசத்தியது. சொல்லப்போனால் கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதி பெற்ற அந்த அணி 2015, 2019 தொடர்களில் வெளியேறிய நிலையில் தற்போது மீண்டும் இந்திய மண்ணில் விளையாட தேர்வாகியுள்ளது.

- Advertisement -

முன்னதாக கடந்த மாத இறுதியில் மும்பையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்ச்சியில் இத்தொடருக்கான முழுமையான அட்டவணையை ஐசிசி வெளியிட்டது. அக்டோபர் 5ஆம் தேதி நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியுடன் துவங்கும் அந்த தொடரில் இந்தியா அக்டோபர் 8ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சேப்பாக்கத்தில் வலுவான ஆஸ்திரேலியாவை தன்னுடைய முதல் போட்டியில் எதிர்கொள்கிறது. மேலும் அக்டோபர் 15ஆம் தேதி பரம எதிரி பாகிஸ்தானை அகமதாபாத் மைதானத்தில் இந்தியா எதிர்கொள்ள உள்ளது.

அந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையில் குவாலிபயர் அணிகள் தெரியாமல் இருந்தன. தற்போது குவாலிபயர் சுற்றில் வென்றுள்ள இலங்கை நவம்பர் 2ஆம் தேதி இந்தியாவை மும்பையிலும் நவம்பர் 11ஆம் தேதி நெதர்லாந்து பெங்களூரிலும் எதிர்கொள்கிறது. அந்த வகையில் அப்டேட் செய்யப்பட்ட இந்தியாவின் முழுமையான உலகக் கோப்பை அட்டவணை இதோ:

இதையும் படிங்க:ஹேப்பி பர்த்டே தல : உ.கோ உட்பட 5 மகத்தான வெற்றிகளை பரிசளித்த – தோனியின் மாஸ்டர் கேப்டன்ஷிப், லிஸ்ட் இதோ

1. இந்தியா – ஆஸ்திரேலியா : அக்டோபர் 7 மதியம் 2 மணி, சென்னை
2. இந்தியா – ஆப்கானிஸ்தான் : அக்டோபர் 11 மதியம் 2 மணி, டெல்லி
3. இந்தியா – பாகிஸ்தான் : அக்டோபர் 15 மதியம் 2 மணி, அகமதாபாத்
4. இந்தியா – வங்கதேசம் : அக்டோபர் 19 மதியம் 2 மணி, புனே
5. இந்தியா – நியூசிலாந்து : அக்டோபர் 22 மதியம் 2 மணி, தரம்சாலா
6. இந்தியா – இங்கிலாந்து : அக்டோபர் 29 மதியம் 2 மணி, லக்னோ
7. இந்தியா – இலங்கை : நவம்பர் 2 மதியம் 2 மணி, மும்பை
8. இந்தியா – தென்னாபிரிக்கா : நவம்பர் 5 மதியம் 2 மணி, கொல்கத்தா
9. இந்தியா – நெதர்லாந்து : நவம்பர் 11 மதியம் 2 மணி, பெங்களூரு

Advertisement