ஹேப்பி பர்த்டே தல : உ.கோ உட்பட 5 மகத்தான வெற்றிகளை பரிசளித்த – தோனியின் மாஸ்டர் கேப்டன்ஷிப், லிஸ்ட் இதோ

2007-wc
- Advertisement -

நட்சத்திரம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி இன்று தம்முடைய 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்து மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்யும் திறமை கொண்ட வரலாற்றின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராகவும் அழுத்தமான மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் பினிஷராகவும் போற்றப்படும் அவருக்கு நிறைய முன்னாள் வீரர்களும் 77 உயர அடி கட் அவுட் வைத்து ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ராஞ்சி போன்ற மிகவும் சிறிய ஊரில் பிறந்து இந்தியாவின் அடையாளமாக திகழும் அவரிடம் பன்முகத் திறமை இருந்தாலும் கேப்டன்ஷிப் மிகவும் ஸ்பெஷலானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அழுத்தமான முக்கிய நேரத்தில் வித்தியாசமான முடிவுகளை எடுத்து அவர் பெற்றுக் கொடுத்த சில மறக்க முடியாத வரலாற்று வெற்றிகளை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. கடைசி ஓவர்: 2007 டி20 உலக கோப்பையின் மாபெரும் ஃபைனலில் பாகிஸ்தானின் மிஸ்பா கிட்டத்தட்ட இந்தியாவின் வெற்றியை பறித்த போது கடைசி ஓவரில் வெறும் 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது அனைத்து முக்கிய பவுலர்களும் 4 ஓவர்களை வீசி முடித்திருந்ததால் அனுபவமிக்க ஹர்பஜன் சிங் அதை வீசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஏற்கனவே மிஸ்பாவுக்கு எதிராக அவர் ரன்களை வாரி வழங்கியிருந்ததால் இளம் வீரர் ஜோகிந்தர் சர்மாவை நம்பி தோனி வழங்கினார்.

அதில் ஒய்ட் மற்றும் சிக்ஸர்களை வழங்கிய தம்மை திட்டாமல் அருகில் வந்து தோளில் தட்டிக் கொடுத்த தோனியின் ஆதரவு மற்றும் உத்வேகத்தால் தைரியமாக வீசிய ஜோஹிந்தரை அடுத்த பந்தில் தேவையின்றி மிஸ்பா ஸ்கூப் அடிக்க முயற்சித்து ஸ்ரீசாந்த் கையில் கேட்ச் கொடுத்தார். அதனால் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா டி20 உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

- Advertisement -

2. மாஸ்டர் முடிவு: 2013 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் வெறும் 130 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு கடைசி 18 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது 16வது ஓவரில் 11 ரன்களை வாரி வழங்கிய இசாந்த் சர்மாவிடம் நம்பி தோனி பந்து வீசும் வாய்ப்பை கொடுத்தார். அதில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்த இயன் மோர்கனுக்கு எதிராக மீண்டும் இசாந்த் சர்மா 2 ஒய்ட் பந்துகளை வீசினார்.

இருப்பினும் மனம் தளராமல் அடுத்த பந்தில் மோர்கனை அவுட்டாக்கிய அவர் அதற்கடுத்த பந்தில் ரவி போப்பாராவையும் காலி செய்தது பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. இறுதியில் அஸ்வின் கடைசி ஓவரில் கச்சிதமாக பந்து வீசியதால் இந்தியா த்ரில் வெற்றி பெற்றதை தொடர்ந்து 3 விதமான உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக தோனி சாதனை படைத்தார்.

- Advertisement -

3. செல்ஃப் ப்ரமோஷன்: 2011 உலகக்கோப்பை ஃபைனலில் 275 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சச்சின், சேவாக் போன்ற முக்கிய வீரர்கள் அவுட்டான நிலையில் கம்பீர் நங்கூரமாக விளையாடி வெற்றிக்கு போராடினார். அப்போது நல்ல ஃபார்மில் இருந்த யுவராஜ் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முரளிதரனை எதிர்கொள்வதற்காக முன்கூட்டியே களமிறங்கிய தோனி மிகச் சிறப்பாக விளையாடினார்.

குறிப்பாக அந்த உலகக் கோப்பையில் அதுவரை அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறிய அவர் முக்கியமான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பி 97 ரன்கள் அடித்த கம்பீருடன் இணைந்து சிக்ஸருடன் 91* ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்து இந்தியாவை 28 வருடங்கள் கழித்து கோப்பையை நல்ல உதவி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

4. லார்ட்ஸ் சர்மா: 2014 லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 140 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்ததால் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்போது இஷாந்த் சர்மாவை அழைத்த தோனி ஷார்ட் பந்துகளை வீசுமாறு சொல்லி அதற்கேற்ற ஃபீல்டிங்கையும் செட்டிங் செய்தார்.

அந்த வலையில் மொய்ன் அலி, பென் ஸ்டோக்ஸ் முக்கிய வீரர்கள் சிக்கி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்ததால் 95 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்தியா சுவைத்தது. குறிப்பாக இங்கிலாந்தின் ஈகோவுடன் விளையாடிய தோனி பிரயோகித்த ஆயுதமான இசாந்த் சர்மா 7 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார்.

5. தோனியின் புத்தகம்: 2010 ஐபிஎல் ஃபைனலில் கடைசி நேரத்தில் வரும் 9 பந்துகளில் 27 ரன்கள் அடித்த மும்பையின் பொல்லார்ட் 7 பந்துகளில் 27 ரன்களை எடுத்து வெற்றியைப் பறிக்க தயாரானார். அப்போது உலகில் யாருமே நினைத்துப் பார்க்காத வகையில் மேத்தியூ ஹெய்டனை நேராக நிற்க வைத்த தோனியின் வலையில் சிக்கிய பொல்லார்ட் அவுட்டானதால் சென்னை முதல் கோப்பையை வென்றது.

இதையும் படிங்க:2023 உ.கோ குவாலிபயர் : ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் 35 வருட சாதனையை உடைத்த நெதர்லாந்து வீரர் – அபார உலக சாதனை

இதே யுக்தியை 2022 ஐபிஎல் தொடரிலும் மும்பைக்கு எதிராக பயன்படுத்திய அவர் பொல்லார்ட்டை அவுட்டாக்கினார். அப்படி புத்தகத்தில் இல்லாத ஃபீல்டிங் வைத்து வெற்றி கண்ட தோனி ஓய்வுக்கு பின் எப்படி ஃபீல்டிங் செய்ய வேண்டும் என்பதை பற்றிய புத்தகத்தை எழுத வேண்டுமென முன்னாள் கேப்டன் கங்குலி பாராட்டியதை மறக்க முடியாது.

Advertisement