ஐ.பி.எல் வரலாற்றின் மிகச்சிறந்த 5 வேகப்பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் – முதலிடம் யார் தெரியுமா ?

Bowlers
- Advertisement -

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் எந்த அளவுக்கு பேட்ஸ்மேன்கள் முக்கியமோ அந்த அளவுக்கு பவுலர்கள் முக்கியம். ஒரு அணியின் வெற்றியை தீர்மானிக்க மிகப்பெரிய அளவில் பேட்ஸ்மேன்கள் உதவுவதோடு மட்டுமல்லாமல் பவலர்களும் உதவ வேண்டும். அந்தவகையில் ஐபிஎல் தொடரில் இதுவரை மிகச்சிறப்பாக தங்களது பங்களிப்பை கொடுத்த டாப் 5 வேகப்பந்து வீச்சாளர்களை பற்றி பார்ப்போம்.

Steyn

- Advertisement -

5) டேல் ஸ்டெயின் :

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் 2008ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக முதல் முறையாக விளையாடினார். அதன்பின்னர் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய டேல் ஸ்டெய்ன் கடந்த இரு ஆண்டுகளாக மறுபடியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார்.

இதுவரை 95 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ளேன் ஸ்டெயின் 97 விக்கெட்டுகளை கைப்பற்றி. அவரது பவுலிங் ஆவரேஜ் 65.85 மற்றும் அவரது எகானமி 6.99 ஆகும். பவர் பிளே ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்கள் என இரண்டிலுமே சிறப்பாக வீசக்கூடிய வீரர் டேல் ஸ்டெய்ன் ஆவார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி ரசிகர்கள் மத்தியில் டேல் ஸ்டெய்ன் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். இருப்பினும் ஸ்டெய்ன் இன்னும் தனது ஓய்வை குறித்து அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Bhuvi

4) புவனேஸ்வர் குமார் :

2011ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்காக வாங்கப்பட்ட புவனேஸ்வர் குமார் ஆரம்பம் முதலே தனது திறமையை காட்டி வந்தார். அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்ட புவனேஸ்வர் குமார் அப்போதிருந்து இன்றுவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

இதுவரை 121 போட்டிகளில் விளையாடி உள்ள புவனேஸ்வர் குமார் 136 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் அவரது பவுலிங் அவரேஜ் 23.91 மற்றும் அவரது எக்கானமி 7.23 ஆகும். மேலும் 2016ஆம் ஆண்டு மற்றும் 2017 ஆம் ஆண்டு என அடுத்தடுத்து இரு ஆண்டுகளில் பர்ப்பில் கேப்பை புவனேஸ்வர் குமார் வென்றுள்ளார் என்பது சிறப்பம்சமாகும்.

bravo

3) டிவைன் பிராவோ :

- Advertisement -

பிராவோ ஐபிஎல் தொடரில் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட தொடங்கினார். அதன்பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஆரம்பித்து இன்று வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 140 போட்டிகளில் விளையாடியுள்ள டுவைன் பிராவோ 153 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். பவுலிங்கை பொறுத்தவரையில் அவரது ஆவரேஜ் 24.82 மற்றும் அவரது அக்கணமே 8.40 ஆகும். 2013ம் ஆண்டு மட்டும் 2014 ஆம் ஆண்டுகளில் பர்ப்பில் கேப்பை டிவைன் பிராவோ வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bumrah

2) ஜஸ்பிரித் பும்ரா :

ஐபிஎல் தொடரில் 2010ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்ட பும்ரா அன்று முதல் இன்று வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நட்சத்திர வீரராக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் 92 மேட்சுகளில் விளையாடியுள்ள ஜஸ்பிரித் பும்ரா இதுவரை 109 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவரது பௌலிங் அவரேஜ் 23.12 மற்றும் அவரது அக்கணமே 7.41 ஆகும். மும்பை இந்தியன்ஸ் கைபற்றிய 5 தொடரிலும் ஜஸ்பிரித் பும்ராவின் பங்களிப்பு மிக அதிகமாகமிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

malinga

1) லசித் மலிங்கா :

ஐபிஎல் தொடரில் 2009ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட தொடங்கிய லசித் மலிங்கா 2019ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரை விளையாடி முடித்து உள்ளார்.

ஐபிஎல் தொடரை பொருத்தவரையில் 120 போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மலிங்கா 170 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். பவுலிங்கை பொருத்த வரையில் அவரது அவரேஜ் 19.80மற்றும் அவரது ஏற்கனவே 7.14 ஆகும். ஒரே மேட்சில் 4 விக்கெட்டுகளை இதுவரை 6 முறை லசித் மலிங்க கைப்பற்றியிருக்கிறார். மலிங்காவின் பங்களிப்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒவ்வொரு தொடரிலும் மிகப்பெரிய அளவில் இருக்கும். அதன் காரணமாகவே மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு மிக அபாயகரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement