2022ஆம் ஆண்டில் அசத்தலாக செயல்பட்டு இந்தியாவுக்கு கிடைத்த 5 வருங்கால நம்பிக்கை நட்சத்திர வீரர்கள்

INDia Hardik pandya
- Advertisement -

2023 புத்தாண்டை வரவேற்க ஒட்டுமொத்த உலகமும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் 2022 சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்விகளை சந்தித்து பெரிய பின்னடைவுகளையும் ஏமாற்றத்தையுமே கண்டது. இருப்பினும் தோல்விகள் தான் வெற்றிக்கு முதல் படி என்றும் வெற்றி பாதையில் நடப்பதற்கு தோல்வியால் கிடைக்கும் அனுபவமே மிகச்சிறந்த ஆசனாக அமையும் என்பதும் நிதர்சனமாகும். அந்த வகையில் இந்த வருடம் பின்னடைவை சந்தித்த இந்திய அணிக்கு சிறப்பாக செயல்பட்டு வருங்காலங்களில் நாங்கள் வெற்றிகளை பெற்றுக் கொடுப்போம் என்று ரசிகர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்திய சில வீரர்களை பற்றி பார்ப்போம்:

5. இஷான் கிசான்: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர் சமீப காலங்களில் ஐபிஎல் தொடரில் அதிரடியாக செயல்பட்டதால் இந்த வருடம் 15 கோடி என்ற பெரிய தொகைக்கு மும்பை அணியில் தக்கவைக்கப்பட்டார். அதனால் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும் என்ற தேவையற்ற அழுத்தத்தை சந்தித்து தடுமாறிய அவர் அதிலிருந்து வெளியே வந்ததும் இந்தியாவுக்காக கிடைத்த வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்டார்.

- Advertisement -

குறிப்பாக கடந்த ஜூன் மாதம் மற்றும் அக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரில் அசத்திய அவர் சமீபத்திய வங்கதேச ஒருநாள் தொடரில் இளம் வயதில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரராக உலக சாதனை படைத்தார். மேலும் கடைசி வரை நின்றிருந்தால் 300 ரன்கள் அடித்திருப்பேன் என்று தன்னம்பிக்கையுடன் பேசிய அவர் நிச்சயமாக 2023 உட்பட வருங்காலங்களில் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக செயல்படுவார் என்று நம்பலாம்.

4. அர்ஷிதீப் சிங்: 2018 அண்டர்-19 உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்திருந்து 2019 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் அறிமுகமாகி ஒவ்வொரு வருடமும் தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு இந்த வருடம் உச்சகட்ட செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். நல்ல லைன், லென்த் போன்றவற்றை பின்பற்றி விவேகமாக பந்து வீசும் அவர் பெரும்பாலான போட்டிகளில் குறைவான ரன்களை கொடுத்து நல்ல டெத் பவுலராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக 2022 டி20 உலக கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்த அவரை ஜஹீர் கான், வாசிம் அக்ரம் போல வருவார் என்று ஜான்டி ரோட்ஸ் உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் பாராட்டினர். அந்த வகையில் இந்தியாவின் நீண்ட காலத் தேடலான இடது கை வேகப்பந்து வீச்சாளர் பிரச்சனைக்கு தீர்வாகவும் வந்துள்ள அவர் வருங்காலங்களில் இந்திய பவுலிங் துறையில் முதன்மையானவராக ஜொலிப்பார் என்று நம்பலாம்.

3. சுப்மன் கில்: 2018 அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஆரம்பத்தில் தடுமாறினாலும் 2021இல் மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

அதன் பின் 2022 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து குஜராத் முதல் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருதுகளை வென்று இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும் வங்கதேச டெஸ்ட் தொடரிலும் சதமடித்த அவர் வருங்காலத்தில் 3 வகையான இந்திய அணியிலும் அசத்தப்போகும் பேட்ஸ்மேனாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

2. சூரியகுமார் யாதவ்: 2022 நிச்சயமாக இவரை சேரும் என்றே சொல்லலாம். தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் பெரும்பாலான போட்டியில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடியாக எதிரணி எப்படி பந்து வீசினாலும் வெளுத்து வாங்கும் இவர் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் மேட்ச் வின்னராக அவதரித்து குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ளார்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட்டில் லேசான தடுமாற்றம் தெரிந்தாலும் இந்த வருடம் உலகிலேயே அதிகபட்சமாக 1164 ரன்களை 187.43 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்த அவர் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நாயகனாக இப்போதே ஜொலித்து வருகிறார்.

1. ஸ்ரேயாஸ் ஐயர்: டி20 கிரிக்கெட்டில் தடுமாறும் இவர் சுழல் பந்து வீச்சாளர்களை பந்தாடுவதும் வேகபந்து வீச்சாளர்கள் விரிக்கும் ஷார்ட் பிட்ச் பந்துகளில் வலையில் வீழ்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதனால் நிறைய விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்த அவர் அதையும் தாண்டி 2022ஆம் ஆண்டில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்கIND vs SL : அவர் மாஸ்டர் கேப்டன் எனக்கு சான்ஸ் கொடுப்பாரு – இந்தியாவுக்கு விளையாட பாண்டியாவை பாராட்டும் இளம் வீரர்

உலகில் மனிதனாக பிறந்த யாரும் பலவீனம் இல்லாமல் இருக்க முடியாது என்ற வகையில் தன்னுடைய பலவீனத்தையும் தாண்டி சாதித்துள்ள இவர் வருங்காலத்தில் குறிப்பாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய பேட்டிங் துறையின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

Advertisement