IND vs SL : அவர் மாஸ்டர் கேப்டன் எனக்கு சான்ஸ் கொடுப்பாரு – இந்தியாவுக்கு விளையாட பாண்டியாவை பாராட்டும் இளம் வீரர்

Hardik Pandya Shivam Mavi
- Advertisement -

2023 புத்தாண்டில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிராக தன்னுடைய சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சொதப்பலாக செயல்பட்ட ரோகித் சர்மா, கேஎல் ராகுல் உள்ளிட்ட சீனியர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ள இத்தொடரில் நிறைய இளம் வீரர்கள் வாய்ப்பு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 2018 அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் விளையாடிய உத்திரபிரதேசத்தை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் சிவம் மாவி இத்தொடரில் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்

கடந்த 2018 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் 9 போட்டிகளில் 5 விக்கெட்களை எடுத்த அவர் 2020 சீசனில் 8 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை 8.15 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்தார். அதை விட 2021 சீசனில் 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை 7.24 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் இந்த வருடம் மீண்டும் கொல்கத்தா அணியில் 7.25 கோடிக்கு வாங்கப்பட்டிருந்த அவர் 6 போட்டிகளில் 5 விக்கெட்களை 10.32 என்ற எக்கனாமியில் எடுத்து சுமாராக செயல்பட்டார்.

- Advertisement -

மாஸ்டர் கேப்டன்:
அதன் காரணமாக கொல்கத்தா அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட அவரை சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. அந்த நிலையில் முதல் முறையாக இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் 11 பேர் அணியில் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் முதல் வருடத்திலேயே அனைத்து வீரர்களுக்கும் மதிப்பளித்து வாய்ப்பளித்து குஜராத்துக்கு கோப்பையை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷிப் செய்வதில் மாஸ்டர் என்று பாராட்டியுள்ள அவர் தமக்கும் வாய்ப்பு கொடுப்பார் என நம்புவதாக கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்டிக் பாண்டியா தன்னுடைய அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் ஆதரவளிப்பவர். அவர் மிகச்சிறந்த தலைவர். குறிப்பாக ஐபிஎல் தொடரில் முதல் வருடத்திலேயே கோப்பை வெல்வது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் அவர் அதை செய்து காட்டியுள்ளார். அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தி சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். மிகவும் அமைதியான அவர் சில தைரியமான முடிவுகளை எடுப்பவர்”

- Advertisement -

“ஒரு கேப்டனாக ஹர்திக் பாய் மிகவும் புத்திசாலி மற்றும் தந்திரவாதி. குறிப்பாக பேட்டிங் வரிசையில் யாரை மேலே அனுப்ப வேண்டும் எந்த சமயத்தில் எந்த பவுலரை பயன்படுத்த வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். இருப்பினும் எனக்கு வாய்ப்பு கிடைப்பது எளிதானதல்ல. ஆனால் எனக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். அதில் சிறப்பாக செயல்பட்டு அவரை இம்ப்ரஸ் செய்து நான் இந்தியாவுக்கு தொடர்ந்து விளையாட முயற்சிக்க உள்ளேன்”

“ஏனெனில் இந்தியாவுக்காக விளையாடுவது உங்களது வாழ்நாளில் மிகவும் பெருமையான தருணமாகும். எனக்கு முன்பே பிரிதிவி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இந்தியாவுக்காக அறிமுகமாகி விட்டார்கள். ஆனால் எனக்கான நேரம் வரவில்லை என்று நான் அறிவேன். ஒவ்வொரு வீரருக்கும் தனித்துவமான அதிர்ஷ்டங்கள் உள்ளது. மேலும் ஐபிஎல் ஏலத்தில் 5 – 6 கோடிகளுக்கு நான் விலை போவேன் என்று எதிர்பார்த்தேன். ஏனெனில் நான் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். அதே சமயம் நான் குஜராத் அணியில் விளையாட விரும்பினேன். ஏனெனில் அவர்களது நிர்வாகம் சிறப்பாக இருப்பதாக கேள்விப்பட்டேன்”

இதையும் படிங்கயாருன்னே தெரியாம காப்பாற்றிய பஸ் – கண்டக்டருக்கு நன்றி சொன்ன லக்ஷ்மன், மனிதநேயத்தை கௌரவித்த அரசு

“குறிப்பாக ஹர்திக் மற்றும் நெஹ்ரா பாய் ஆகியோர் போட்டியை மிகவும் சிந்தித்து செயல்பட கூடியவர்கள். ஆரம்பத்தில் எனது கேரியரை பேட்ஸ்மேனாக துவங்கிய நான் நாளடைவில் என்னிடம் பேட்டிங் திறமைகள் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். அதன் பின் வந்து வீச்சை துவங்கியுள்ள என்னால் பவுலிங் ஆல் ரவுண்டராக வர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.

Advertisement