யாருன்னே தெரியாம காப்பாற்றிய பஸ் – கண்டக்டருக்கு நன்றி சொன்ன லக்ஷ்மன், மனிதநேயத்தை கௌரவித்த அரசு

- Advertisement -

இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டிசம்பர் 30ஆம் தேதியன்று கார் விபத்துக்குள்ளானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கடைசியாக கடந்த வாரம் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்த அவர் அடுத்ததாக நடைபெறும் இலங்கை ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் இடம் பெறாத நிலையில் ஏற்கனவே சந்தித்த காயத்திலிருந்து குணமடைவதற்காக ஜனவரி 3 – 15 வரை தேசிய கிரிக்கெட் அகடமிக்கு செல்வார் என்று செய்திகள் வெளியானது. அதற்கு முன்பாக டேராடூன்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் புத்தாண்டுக்காக வீடு திரும்ப தம்முடைய பிஎம்டபிள்யூ காரில் பயணித்தார்.

ஆனால் பொதுவாகவே களத்தில் அதிரடியை விரும்பும் அவர் அதிகாலை 5.30 மணிக்கு தன்னுடைய காரை அதிவேகமாக ஓட்டிய போது தூக்க கலக்கத்தை சந்தித்துள்ளார். அதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் வேகத்தை குறைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த டிவைடரில் மோதி விபத்திற்கு உள்ளானது. அப்போது அதிலிருந்து வெளிவர முயற்சித்த அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டெடுத்த அடுத்த சில நிமிடங்களில் அவருடைய கார் நெருப்பு பற்றி எரிந்தது. அந்த வகையில் அதிர்ஷ்டத்துடன் உயிர் தப்பிய அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

- Advertisement -

மனிதநேயத்துக்கு விருது:
அந்த செய்தியை கேட்டு அனைத்து ரசிகர்களும் உலக அளவில் இருக்கும் முன்னாள் இந்நாள் வீரர்களும் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அவர்களது பிரார்த்தனைக்கு இணங்க ஆபத்து கட்டத்தை ரிஷப் பண்ட் தாண்டி விட்டதாகவும் எலும்பு முறிவு போன்ற காயத்தை சந்திக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகின. அதனால் அனைவரும் ஓரளவு நிம்மதியடைந்தாலும் அதிகப்படியான மேற்புற காயத்தை சந்தித்த அவர் முழுமையாக குணமடைய மாதக்கணக்கில் ஆகும் என்று தெரிய வருகிறது.

முன்னதாக கார் விபத்துக்கு உள்ளானதும் அருகில் இருந்தவர்களில் சிலர் ரிஷப் பண்ட் பணத்தைப் படித்துக் கொண்டு ஓடியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அந்த சமயத்தில் அதே சாலையில் வந்த ஹரியானா ரோடு பஸ் நிர்வாக பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர் உடனடியாக தங்களது பேருந்தை நிறுத்தி விட்டு ரிஷப் பண்ட்டை காப்பாற்றியுள்ளனர். குறிப்பாக விபத்திற்கு உள்ளான பின் கடுமையான காயங்களை சந்தித்த ரிசப் பண்ட் அந்த சமயத்தில் கண்ணாடி ஜன்னல்களை உடைத்துக் கொண்டு வெளியே வர முயற்சித்துள்ளார்.

- Advertisement -

அப்போது கிரிக்கெட் பார்ப்பதில்லை என்பதால் அவர் யாரென்று தெரியாமலேயே மனிதநேய அடிப்படையில் வழக்கம் போல காப்பாற்றியதாகவும் இறுதியில் தங்களுடன் பேருந்தில் பயணித்த பயணிகள் தான் அவர் ரிசப் பண்ட் என்பதை தெரிவித்ததாகவும் அந்த பேருந்தின் டிரைவர் சுசில் குமார் மண் தெரிவித்திருந்தார். அந்த வகையில் பெயர், புகழ், நட்சத்திர அந்தஸ்தை தாண்டி இறுதியில் மனிதநேயம் வென்றதை நினைத்து நெகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் அந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு மனதார நன்றி தெரிவித்தார்கள்.

அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் ஜாம்பவான் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “எரியும் காரிலிருந்து ரிஷப் பண்டை காப்பாற்றி அழைத்துச் சென்று பெட் ஷீட்டால் போர்த்தி ஆம்புலன்ஸை அழைத்த ஹரியானா ரோட்வேஸ் டிரைவர் சுசில்குமார் அவர்களுக்கு நன்றி. உங்கள் தன்னலமற்ற சேவைக்கு நாங்கள் மிகவும் கடமடைபட்டுள்ளோம். நீங்கள் ரியல் ஹீரோ சுசில் ஜி. மேலும் பேருந்து நடத்துனர் பரம்ஜித் டிரைவர் சுஷீலுடன் இணைந்து ரிஷப்பிற்கு உதவியவர். சிறந்த மனதுடனும் பெரிய இதயத்துடனும் இருந்த இந்த தன்னலமற்ற தோழர்களுக்கு மிகவும் நன்றி. அவர்களுக்கும் உதவிய அனைவருக்கும் நன்றி” என்று பாராட்டியுள்ளார்.

- Advertisement -

அத்துடன் அவர்களது தன்னலமற்ற மனித நேயத்தை பாராட்டும் வகையில் கௌரவிக்கப்படுவார்கள் என்று உத்தரகாண்ட் மாநில காவல்துறை நேற்று அறிவித்தது. அந்த நிலையில் டிசம்பர் 31ஆம் தேதியன்று ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய ஓட்டுநர் சுசில்குமார் மற்றும் நடத்துனர் பரம்ஜித் சிங் ஆகியோரை உத்தரகாண்ட் அரசு மற்றும் காவல்துறை கௌரவித்து விருதையும் சான்றிதழையும் வழங்கியுள்ளது.

இதையும் படிங்கஒருத்தர் விபத்தில் சிக்கி அடிபட்டு இருக்கும்போது இப்படியா பண்ணுவீங்க – ரோஹித்தின் மனைவி கோபம்

இது ரிஷப் பண்ட்டை காப்பாற்றியதற்காக அல்ல, யாரென்றே தெரியாமல் மனிதநேயத்தின் அடிப்படையில் காப்பாற்றிய மனதுக்கு கிடைத்த விருதாகும். அத்துடன் இதைப் பார்த்து வருங்காலங்களில் நிறைய பேர் மனிதநேயத்துடன் ஆபத்தில் தவிப்பவர்களுக்கு உதவி புரிய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement