ஐபிஎல் வரலாறு : பெரிய கேரியர் ஆனால் ஒருமுறை கூட சதம் அடிக்காத டாப் 5 நட்சத்திரங்களின் – பட்டியல் இதோ

century
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி மே 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த வருடம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் விளையாடும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. இதில் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

IPL 2022

- Advertisement -

பெரிய கேரியர் ஆனால் சதமில்லை:
கடந்த 2008-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஐபிஎல் தொடர் தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு படிப்படியாக வளர்ந்து இன்று உலகின் நம்பர் ஒன் டி-20 தொடராக மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த தொடர் வளர்ந்தது போலவே இதில் நிறைய வருடங்கள் விளையாடி வரும் விராட் கோலி போன்ற ஒருசில நட்சத்திர வீரர்களும் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளனர். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் நீண்ட நாட்கள் விளையாடி அதிக அரை சதங்கள் உள்ளிட்ட பல சதனைகளை படைத்த போதிலும் சதம் அடிக்காத டாப் 5 நட்சத்திர வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

1. கெளதம் கம்பீர் : இந்தியாவின் முன்னாள் நட்சத்திர தொடக்க வீரர் கௌதம் கம்பீர் ஐபிஎல் தொடரிலும் டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்காக விளையாடி பல சாதனைகளை படைத்தார். குறிப்பாக கொல்கத்தா அணிக்கு கேப்டன்ஷிப் செய்த அவர் 2 சாம்பியன் பட்டத்தையும் வாங்கி கொடுத்தார். மொத்தமாக 154 போட்டிகளில் 4218 ரன்களை 123.91 என்ற சூப்பரான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்துள்ள அவர் 36 அரை சதங்களும் அடித்துள்ளார். பொதுவாக ஓபனிங் பேட்ஸ்மேன்கள் தான் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடிப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் இவ்வளவு பெரிய கேரியரில் அவர் ஒரு சதம் கூட அடித்ததில்லை என்பது ஆச்சர்யமாகும். அவரின் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் 93 ஆகும்.

Gautam Gambhir Robin Uthappa

2. ராபின் உத்தப்பா : கடந்த 2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய இடம் வகித்த ராபின் உத்தப்பா ஆரம்ப காலங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். அதன்பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நீண்ட நாட்களாக விளையாடி வந்த அவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

இருப்பினும் கொல்கத்தா அணிக்காக பெரும்பாலான போட்டிகளில் விளையாடிய அவர் அந்த அணி 2 முறை சாம்பியன் பட்டம் வெல்வதற்கு மிக மிக முக்கிய பங்காற்றினார் என்று கூறலாம். மொத்தம் 193 ஐபிஎல் போட்டிகளில் 4722 ரன்களை 130 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்த அவர் 25 வரை சதங்களை அடித்துள்ளார். ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான இவரும் சுமார் 200 போட்டிகளில் விளையாடிய போதிலும் ஒரு சதம் கூட அடித்ததில்லை. இவரின் அதிகபட்ச ஸ்கோர் 87 ஆகும்.

Faf

3. எம்எஸ் தோனி : இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இதயமாக கருதப்படும் எம்எஸ் தோனி இந்த பட்டியலில் இடம் பெறுவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என்றே கூறலாம். ஏனெனில் பொதுவாகவே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கும் அவர் பெரும்பாலும் கடைசி கட்ட ஓவர்களில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்து பினிஷிங் செய்வதில் வல்லவர். இவரும் 193 இன்னிங்ஸ்களில் 4746 ரன்களை 135.83 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்துள்ளார். 200 போட்டிகளுக்கு மேல் விளையாடிய போதிலும் 23 அரை சதங்கள் அடித்துள்ள அவர் இதுவரை ஒரு ஐபிஎல் சதம் கூட அடித்ததில்லை. அவரின் அதிகபட்ச ஸ்கோர் 84 ஆகும்.

4. பப் டு பிளேஸிஸ்: இந்த பட்டியலில் இடம் பிடிக்கும் வெளிநாட்டு வீரராக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரர் பப் டு பிளேஸிஸ் உள்ளார். கடந்த 10 வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதுகெலும்பு வீரராக விளையாடி வந்த அவர் அந்த அணியின் எத்தனையோ சரித்திர வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். இருப்பினும் இம்முறை பெங்களூர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த அணிக்கு முதல் முறையாக கோப்பையை வென்று கொடுக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளார். இதுவரை 93 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள அவர் 2935 ரன்ங்களை 131.09 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் எடுத்துள்ளார். இதுவரை 22 அரை சதங்கள் அடித்துள்ள இவரும் இதுவரை ஒரு சதம் கூட அடித்ததில்லை.

Dinesh

5. தினேஷ் கார்த்திக்: தமிழகத்தை சேர்ந்த நட்சத்திரம் தினேஷ் கார்த்திக் ஆரம்பம் முதலே ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர பெரும்பாலான அணிகளில் விளையாடி தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். இந்த வருடம் பெங்களூர் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ள அவர் 192 இன்னிங்ஸ்களில் 4046 ரன்களை 129.72 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்துள்ளார். இதுநாள் வரை இவர் 19 அரை சதங்கள் அடித்த போதிலும் ஒரு அரைசதம் கூட அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement