டி20 உ.கோ வரலாற்றில் அதிகவேகமாக அரை சதமடித்த டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இதுபோன்ற டி20 உலக கோப்பை என்று வந்தாலே அதில் எந்த பேட்ஸ்மேன்கள் எவ்வளவு அதிரடியான வேகத்தில் ரன்களை சேர்கிறார்கள் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் பார்ப்பார்கள். பொதுவாக ஒவ்வொரு போட்டியிலும் சதமடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் வெறும் 20 ஓவர்களை கொண்ட டி20 கிரிக்கெட்டில் அந்த இலக்கை தொடுவது கடினம் என்பதால் குறைந்தது அரை சதத்தை விளாச வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடுவார்கள்.

இருப்பினும் அதற்கு சவாலாக வரும் பவுலர்களை திறம்பட எதிர்கொண்டு அரை சதமடிப்பது எளிது என்றாலும் அதை அதிரடி சரவெடியான பவுண்டரிகளை பறக்க விட்டு அதிவேகமாக எட்டுவது கடினமாகும். மேலும் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாகவும் அதிவேகமாகவும் ரன்களை குவிப்பதே வெற்றிக்கு முதல் படி என்ற நிலையில் டி20 உலக கோப்பை வரலாற்றில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் அரை சதங்கள் அடித்து தங்களது அணியை வெற்றி பெற வைத்து சாதனை படைத்த வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. சோயப் மாலிக் 18: பாகிஸ்தானின் நட்சத்திர வீரரான இவர் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலக கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிராக 16வது ஓவரில் களமிறங்கி 1 பவுண்டரி 6 சிக்சர்களை பறக்க விட்டு வெறும் 18 பந்துகளில் அரை சதமடித்தார்.

அதனால் டி20 உலக கோப்பையில் அதிவேகமாக அரை சதமடித்த பாகிஸ்தான் பேட்ஸ்மேனாக சாதனை படைத்து 54 (18) ரன்கள் குவித்த அவரது அதிரடியால் 189 ரன்கள் குவித்த பாகிஸ்தான் பின்னர் 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

4. கேஎல் ராகுல் 18: அதே உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு செல்ல வென்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியா ஸ்காட்லாந்தை வெறும் 85 ரன்களுக்குள் சுருட்டியது.

மேலும் அதை சீக்கிரம் சேசிங் செய்து புள்ளி பட்டியலில் ரன்ரேட்டை உயர்த்த வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியாவுக்கு 6 பவுண்டரி 3 சிக்சருடன் வெறும் 18 பந்துகளில் 50 ரன்கள் குவித்த இவர் எளிதாக வெற்றி பெற வைத்தார். மேலும் டி20 கிரிக்கெட்டில் 3வது அதிவேகமாக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

3. கிளென் மேக்ஸ்வெல் 18: கடந்த 2014இல் வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் நிர்ணயித்த 192 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு களமிறங்கிய இவர் 7 பவுண்டரி 6 சிக்சர்களுடன் அதிரடியான 74 (33) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இருப்பினும் ஆரோன் பின்ச் எடுத்த 65 (54) ரன்கள் தவிர்த்து இதர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால் 16 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா போராடி தோற்றது. ஆனாலும் அன்றைய நாளில் வெறும் 18 பந்துகளில் அரை சதம் விளாசிய மேக்ஸ்வெல் டி20 உலக கோப்பையில் அதிவேக அரை சதமடித்த ஆஸ்திரேலியராக இப்பட்டியலில் 3வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

2. ஸ்டீபன் மைபர்க் 17: அதே 2014 உலகக்கோப்பையில் அயர்லாந்து நிர்ணயித்த 190 ரன்கள் இலக்கை துரத்திய நெதர்லாந்து அணிக்கு சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய இவர் 7 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 63 (23) ரன்களை விளாசினார்.

அவருடன் கெவின் ஓ’பிரையன் 42* (16) ரன்கள் எடுத்ததால் வெற்றி பெற்ற நெதர்லாந்து சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறியது. அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதுடன் 17 பந்துகளில் அரை சதமடித்த இவர் உலக கோப்பையில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார்.

1. யுவராஜ் சிங் 12: 2007இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பையில் டர்பன் நகரில் நடைபெற்ற போட்டியில் ஸ்லெட்ஜிங் செய்த ஃபிளின்டாஃப்க்கு பலி காடாக சிக்கிய ஸ்டுவர்ட் ஃப்ராடை சரமாரியாக அடித்து துவைத்த இந்தியாவின் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 பிரம்மாண்ட சிக்ஸர்களை பறக்க விட்டுக் கொடுத்த பதிலடியை யாராலும் மறுக்க முடியாது.

அன்றைய நாளில் அந்த உலக சாதனையுடன் வெறும் 12 பந்துகளில் 50 ரன்களை தொட்ட அவர் டி20 உலகக்கோப்பை மற்றும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரை சதமடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையும் படைத்தார். மொத்தம் 58 (16) ரன்களை 362.50 என்ற எரிமலையான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்த அவரது அதிரடியால் 218 ரன்கள் குவித்த இந்தியா பின்னர் 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதியில் கோப்பையையும் வென்றது.

Advertisement