இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி காணாமல் போன 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

இந்திய அணி கிரிக்கெட்டின் ஆரம்பத்தில் இருந்து ஒரு முக்கிய அணியாக டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. கிட்டத்தட்ட 500 வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள். ஒரு சில வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி அணியின் பெரிய வீரர்களாக வருவார் என்று பெயர் வைக்கப்பட்டு அதன் பின்னர் காணாமல் போயுள்ளனர். அப்படிப்பட்ட டெஸ்ட் வீரர்களை தற்போது பார்ப்போம், இதில் பல வீரர்கள் சிறப்பாக விளையாடியும் மீண்டும் வாய்ப்பினை பெறாமல் வெளியேறியும் உள்ளனர். அப்படிப்பட்ட 5 வீரர்களை பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

Binny 1

ஸ்டூவர்ட் பின்னி :

ஹர்திக் பாண்டியவிற்கு முன்னர் இவரைத்தான் இந்திய அணி வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக தேர்ந்தெடுத்து வைத்திருந்தது. அந்த அளவிற்கு திறமையையும் வெளிப்படுத்தியிருந்தார். வங்கதேச அணிக்கு எதிராக வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் இங்கிலாந்து மண்ணில் 87 ரன்கள் விளாசி இருந்தார். அதன் பின்னர் 7 டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. தொடர்ந்து அப்படியே டெஸ்ட் போட்டியின் போது காணாமல் போய்விட்டார்.

dhawan

ஷிகர் தவான் :

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே துவம்சம் செய்தவர் ஷிகர் தவான். 2013ஆம் ஆண்டு 187 ரன் விளாசினார். இதனை தொடர்ந்து ‘இடது கை விரேந்தர் சேவாக்’ என்றெல்லாம் பாராட்டப்பட்டவர். கடந்த இரண்டு வருடமாக இவருக்கு டெஸ்ட் அணியில் இடமில்லை. பல இளம் வீரர்கள் இவரது இடத்தை கனகச்சிதமாக பிடித்துக் கொண்டனர்.

pankaj

பங்கஜ் சிங் :

இவர் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ராஜஸ்தானைச் சேர்ந்தவர். இங்கிலாந்து அணிக்கு எதிராக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். உயரமான வீரர் என்பதால் ஒரு பந்து வீச்சாளராக பணிக்கு உதவியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சரியாக இவரால் விக்கெட்டை எடுக்க முடியவில்லை.

Karn

கரண் ஷர்மா :

2014 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது மகேந்திர சிங் தோனியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் விட்டுவிட்டார். உடனடியாக விராட் கோலி கரன் சர்மாவிற்கு விளையாட வாய்ப்பு கொடுத்தார். ஆனால் வெளிநாட்டு மண் என்பதால் அவரால் சரியாக பந்து வீச முடியவில்லை. அதன் பின்னர் அப்படியே காணாமல் போய்விட்டார்.

,murali vijay

முரளி விஜய் :

விராட் கோலிக்கு இணையாக வெளிநாட்டு மண்ணில் சதம் அடித்தவர் முரளி விஜய். அஜின்கியா ரஹானே, விராட் கோலி போன்ற வீரர்களின் வரிசையில் முரளி விஜய் வைத்து பார்க்கப்பட்டவர். 61 டெஸ்ட் போட்டிகளில் 3982 ரன்கள் குவித்திருக்கிறார். 2014ஆம் ஆண்டு மட்டும் 10 டெஸ்ட் போட்டிகளில் 852 ரன்கள் அடிதிருந்தார். முரளி விஜய் மற்றும் தவான் ஆகிய இருவரும் சில வருடங்கள் இந்திய அணியின் துவக்க இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தனர். கடைசியாக நடந்த இங்கிலாந்து தொடருக்கு பின்னர் முரளி விஜயும் காணாமல் போய்விட்டார்.