தோனியின் கீழ் விளையாடியதை விட விராட் கோலியின் கீழ் சிறப்பாக விளையாடி வரும் 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Dhoni
- Advertisement -

இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டனாக இருந்தவர் மஹேந்திர சிங் தோனி. அவரின் பதவிக்காலத்திற்கு பிறகு தற்போது இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இந்நிலையில் தோனியின் கேப்டன்சியில் சரியாக விளையாடாத ஒரு சிலர் விராட் கோலியின் தலைமையில் பட்டையைக் கிளப்பி வருகின்றனர். அப்படிப்பட்ட 5 வீரர்களை பற்றி தற்போது இந்த பதிவில் பார்ப்போம் ….

Pandya

- Advertisement -

ஹர்திக் பாண்டியா :

இந்தியாவின் நீண்ட நாள் ஆல்ரவுண்டர் தேடலுக்கான விடையாக கிடைத்தவர் ஹர்திக் பாண்டியா. ஒரு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் என ஆல்-ரவுண்டராக திகழும் ஹர்திக் பாண்டியா 2016 ஆம் ஆண்டு தோனியின் தலைமையில் அறிமுகமானார். ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளில் மட்டுமே ஆடிக்கொண்டிருந்தார். ஆனால்., தோனியின் தலைமையில் பெரிதாக அவரால் ஆட முடியவில்லை. அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டிலிருந்து விராட் கோலியின் தலைமையில் ஆடி தனது திறமையை நிரூபித்தார். அதன்பிறகு சாம்பியன்ஸ் கோப்பை உலக கோப்பை தொடர் என அனைத்திலும் பட்டையை கிளப்பினார் . தற்போது வரை இந்தியாவின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் ஆகவும் இருக்கிறார்.

Rayudu

அம்பத்தி ராயுடு :

- Advertisement -

அம்பத்தி ராயுடு மிகவும் பழமையான பேட்ஸ்மேன் ஆவார். ஷிகர் தவான் காலத்திலிருந்து ஆடிவருகிறார். 2002 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடிய அவர் 2014 மற்றும் 15 ஆண்டுகளில் தான் தனது முதல் ஒருநாள் போட்டியில் ஆடினார்.. அந்த அளவிற்கு நிராகரிக்கப்பட்டவர். அந்தக் கட்டத்தில் தோனியின் தலைமையில் ஒரு அளவிற்கு நன்றாக ஆடினார். அதன் பின்னர் மீண்டும் 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடி கோலியின் தலைமையில் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்தார். 4வது இடத்திற்கு இவர்தான் என்று கிட்டத்தட்ட நிரந்தரம் செய்யப்பட்ட அவர் அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் கழற்றிவிடப்பட்டார். தோனி தோனியின் தலைமையில் 35.66 சராசரியில் 535 ரன்களும் விராட் கோலியின் தலைமையில் 47.64 சராசரியில் 810 ரன்கள் எடுத்துள்ளார்.

Bhuvi

புவனேஸ்வர் குமார் :

- Advertisement -

இவர் தோனியின் தலைமையில் கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகமானார். அறிமுகமான முதல் பந்திலேயே பாகிஸ்தான் அணியின் முகமது ஹபீஸ் ஸ்டம்புகளை சிதர விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் தோனியின் தலைமையில் விளையாடிய போது மெதுவாக பந்து வீசிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் 2016ம் ஆண்டிலிருந்து விராட் கோலியின் தலைமையில் தனது வேகத்தை அதிகரித்து இந்தியாவில் மிக முக்கிய பந்துவீச்சாளராக மாறியுள்ளார். தற்போது வரை இந்தியாவின் பந்துவீச்சாளர்களில் மிக முக்கியமான வீரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jadeja-1

ரவீந்திர ஜடேஜா :

- Advertisement -

இந்திய அணியில் மிக அதிகமாக தோனியால் வாய்ப்பு கொடுக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். 2009 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரை தோனியின் தலைமையில் ஆடி வந்தார். தோனியின் தலைமையில் நன்றாக ஆட தொடங்கினார். ஆனால் விராட் கோலியின் தலைமையில் பேட்டிங்கில் 47.2 சராசரியின், தோனியின் தலைமையில் 24.5 சராசரியும்தான் வைத்துள்ளார். அதே நேரத்தில் பந்துவீச்சிலும் பட்டையை கிளப்பியுள்ளார். ஒவ்வொரு விக்கெட்டிற்கும் கோலியின் தலைமையில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து விக்கெட் வீழ்த்தியுள்ளார் ரவீந்திர ஜடேஜா . ஆனால் தோனியின் தலைமையில் ஒரு விக்கெட்டை எடுக்க 33.33 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

Ishanth-1

இஷாந்த் ஷர்மா :

இந்த பட்டியலில் இவர் தான் மிகச்சிறந்த வீரராக இருப்பார் என்று தெரிகிறது. 2007 ஆம் ஆண்டு தோனியின் தலைமையில் இந்திய அணிக்காக ஆடத் துவங்கினார் இஷாந்த் ஷர்மா. காலப்போக்கில் அவரது பந்துவீச்சு வேகமும், துள்ளிய தன்மையும் குறைந்து. அதன் பின்னர் கோலி தலைமையேற்றார். அப்போதுதான் கோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறை இவருக்கும் கைகொடுத்தது. இவரும் தோனியின் தலைமையை விட விராட் கோலியின் தலைமையை அதிகம் விரும்பியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement