அடுத்த வருட ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி கழட்டிவிடும் 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Kkr
- Advertisement -

நடைபெற்று முடிந்த 13வது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி விட்டது. மற்ற அணிகள் எல்லாம் எப்படியாவது அடுத்த வருடத்திற்கு தற்போது இருந்தே தயாராக வேண்டும் என்று திட்டம் தீட்டி கொண்டிருக்கின்றன.
இதில் கொல்கத்தா அணியும் ஒன்று. இந்த வருடம் 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தை பிடித்திருந்தது. தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் இருந்து விலகியதையடுத்து அந்த அணிக்கு இயான் மார்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அடுத்த வருடம் மிகப் பெரிய ஏலம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இதற்காக கொல்கத்தா அணி வெளியேற வாய்ப்புள்ள 5 வீரர்களை பார்ப்போம்.

banton

- Advertisement -

டாம் பான்டன் :

இவர் உண்மையில் இங்கிலாந்து அணியின் வீரர். உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியவர். தற்போது இவருக்கு 21 வயது தான் ஆகிறது. இந்த வருடம் இரண்டு போட்டிகளில் ஆடி பெரிதாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. மொத்தம் 18 ரன்கள் எடுத்திருந்தார். வெளிநாட்டு வீரர் என்பதால் அடுத்த வருடம் இவருக்கு கொல்கத்தா அணியில் வாய்ப்பு இருக்காது என்று தெரிகிறது.

கிறிஸ் கிரீன் :

- Advertisement -

இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர். கொல்கத்தா அணியில் ஏற்கனவே பல சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். அப்படி பார்க்கையில் அப்படி ஒரு அணியில் இவரால் நிலைக்க முடியாது என்பதே நிதர்சனம்.

naik

நிகில் நாயக் :

- Advertisement -

இவர் உள்ளூர் பேட்ஸ்மேன் ஆவார். தற்போது இவருக்கு 25 வயதாகிறது. விக்கெட் கீப்பராக இவரால் செயல்பட முடியும். அடுத்த வருடம் பெங்களூரு அணியில் இவரை மாற்றிவிட்டு வேறு ஒரு வீரரை அங்கிருந்து வாங்க கொல்கத்தா அணி திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

Lot

சித்தேஷ் லாட் :

- Advertisement -

இவர் மும்பையை சேர்ந்த பேட்ஸ்மேன் ஆவார். கடந்த வருடம் மும்பை அணியில் இருந்து கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டவர். நான்கு வருடமாக மும்பை அணியில் விளையாடி வாய்ப்பு கிடைக்காததால் கொல்கத்தா அணிக்கு மாறியவர். இந்த அணியிலும் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த வருடம் இவரும் வெளியேற்றப் பட வாய்ப்பு இருக்கிறது

சந்தீப் வாரியர் :

கேரளாவைச் சேர்ந்த இவர் உள்ளூர் போட்டிகளில் மிகப் பெரிய பந்து வீச்சாளராக பார்க்கப்படுபவர். தற்போது இவருக்கு 29 வயது ஆகிவிட்டது கொல்கத்தா அணிக்காக இவர் ஆடிய முதல் போட்டியில் மூன்று ஓவர்கள் வீசிய 34 ரன்கள் கொடுத்தார். அதன் பின்னர் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வில்லை. அடுத்த வருடம் இவர் அணியிலிருந்து வெளியேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது.

Advertisement