ஐபிஎல் தொடர் இந்தியாவை 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது வீரர்கள் ஒருபுறம் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாலும் ரசிகர்களுடன் சேர்ந்து ஆன்லைன் தளத்தில் dream11 என்னும் வீரர்களை சரியாக தேர்வு செய்து பணம் சம்பாதிக்கும் விளையாட்டையும் விளையாடி வருகிறார்கள். குறிப்பாக கடந்த சில வருடங்களாக இந்த முறை ரசிகர்களிடையே மிகப் பெரும் பிரபலம் அடைந்து விட்டது
இப்படி பெருமளவில் வளர்ந்த ட்ரீம் லெவல் நிறுவனம் இந்த முறை ஐபிஎல் தொடருக்கு டைட்டில் ஸ்பான்சர்ஷிப் 222 கோடி ரூபாய் கொடுத்து செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. தற்போது இந்த ட்ரீம் லெவன் அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இந்த வருடம் அதிக புள்ளிகள் கிடைக்கும் என்பது குறித்து பார்ப்போம்.
சுனில் நரைன் :
வழக்கமாக இந்த பட்டியலில் ஆல்ரவுண்டர்கள் இடம் பெறுவார்கள். ஆனால், இவர் சுழற்பந்து வீச்சாளர். விஷயம் என்னவென்றால் கொல்கத்தா அணி அதிரடி வீரரான இவரை துவக்க இடத்தில் பயன்படுத்தி வருகிறது. ஒரு சில போட்டிகளில் அரைசதம் அடித்து 4 விக்கெட்டுகளையும் எடுத்துவிடுகிறார் இதன் காரணமாக மதிப்பு மிக்க வீரராக பார்க்கப்பட்டு வருகிறார்.
விராட் கோலி :
பெங்களூரு அணியின் கேப்டன் அனைத்து ஐபிஎல் தொடரிலும் ரன்கள் குவிப்பதற்கு பெயர் போனவர். 2016 ஆம் ஆண்டு எல்லாம் இவர் அடித்த ரன்கள் மிகப்பெரும் சாதனை படைத்திருக்கிறது. அந்த வருடம் மட்டும் 973 ரன்கள் அடித்திருந்தார். அந்த தொடரில் மட்டும் 4 சதம் அடித்திருந்தார் இவர் கேப்டன் என்பதால் கூடுதல் பலன் கிடைக்கும்.
டேவிட் வார்னர் :
விராட் கோலிக்கு அடுத்தபடியாக ஒவ்வொரு தொடரிலும் குறைந்தது 500 ரன்களையாவது அடித்துவிடும் வீரர் இவர்தான். கடந்த வருடம் 12 போட்டிகளில் மட்டுமே ஆடி 8 அரை சதங்கள் அடித்து 692 ரன்கள் குவித்து இருந்தார். இப்படி அதிரடியாக ஆடி ஐபிஎல் தொடரில் மட்டும் 4706 ரன்கள் அடித்து இருக்கிறார். இவ்ரை லெவனில் சேர்த்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய காய் நகர்த்தல் ஆக அமையும்.
ஹர்திக் பாண்டியா :
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர். ஆனால் தற்போது வரை எந்தப் போட்டியிலும் பந்து வீசவில்லை. இவர் ஒரு வேளை பந்து வீச துவங்கி விட்டால் கண்டிப்பாக நன்றாக செயல்பட்டு விக்கெட்டுகள் வீழ்த்துவார். அதே நேரத்தில் மிகச் சிறந்த பீல்டர்ரும் கூட பேட்டிங்கில் இவரைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
ரஷித் கான் :
இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் மற்றொருவர் பந்து வீச்சாளர். சுனில் நரைன் போன்று அதிரடியாக ஆடக்கூடியவர் திடீரென்று வந்து ஒரு 40 ரன்கள் அடிப்பதில் வல்லவர். மேலும் ஒரு சில போட்டிகளில் 5 விக்கெட் வீழ்த்துவதற்கும் வாய்ப்பிருக்கிறது.