2021 ஐ.பி.எல் தொடர் : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதிக விலைக்கு ஏலம் போன 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

ipl

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் இதுவரை 13 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் ஆரவராத்துடனும், கோலாகலத்துடனும் நடத்தப்படும் இந்த தொடர், கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக கடந்த வருடம் மட்டும் சத்தமில்லாமல் துபாயில் நடத்தி முடிக்கப்பட்டது. 14வது சீசனுக்கான இந்த வருட தொடர் ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் சென்னையில் தற்பொழுது நடைபெற்று முடிந்துள்ளது.

அதில் மிக உயர்ந்த விலைக்கு ஏலம் போன டாப் ஐந்து வீரர்கள் வரிசையில் பார்ப்போம் :

Morris

கிரிஸ் மோரிஸ் (16.25 கோடி) :

சவுத் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிரிஸ் மோரிஸ் அதிகபட்சமாக 16 கோடியே 25 லட்சத்திற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விலை போனார், இதற்கு முன் யுவராஜ் சிங் 16 கோடிக்கு அதிகபட்சமாக விலைபோனது குறிப்பிடத்தக்கது. 33 வயதாகும் கிறிஸ் மோரிஸ் 218 டி20 போட்டிகளில் பங்கேற்று 1764 ரன்களை அடித்துள்ளார். மேலும் 270 விக்கெட்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

kyle-jamieson

- Advertisement -

கைல் ஜேமிசன் (15 கோடி) :

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கைல் ஜேமிசன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், கடுமையான ஏலத்திற்கு பிறகு பெங்களூரு அணி இவரை தட்டி தூக்கியது.இவரை பல அணிகளும் தங்களது அணிக்கு சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் பெங்களூர் அணி தனது அணியில் சேர்த்தது புத்திசாலித்தனமாது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

கிளன் மேக்ஸ்வெல் (14.25 கோடி) :

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான கிளன் மேக்ஸ்வெல் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை, அதனால் பஞ்சாப் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இவரை இந்த ஆண்டு விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 கோடியே 25 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்தது,இவர் இந்த ஆண்டு எந்த அணிக்கும் ஏலத்திற்குப் போக மாட்டார் என்று எதிர்பார்த்த நிலையில் அதிகபட்சமான ஏலத்திற்கு போனது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

richardson

ஜய் ரிச்சர்ட்சன்(14கோடி) :

1.5 கோடி ரூபாயை அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்த ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் ஜெய் ரிச்சர்ட்சன் ஏலத்திற்கு வந்ததும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.ஜய் ரிச்சட்சனை எடுத்தே தீர வேண்டும் என இரு அணிகளும் கையை உயர்த்தி கொண்டே இருந்ததால், வெறும்1.5 கோடியுடன் களம்கண்ட ஜெய் ரிச்சர்ட்சனின் மதிப்பு கட கடவென ஜெட் வேகத்தில் உயர்ந்தது. என்னதான் பெங்களூர் அணி கடுமையாக போராடினாலும், மற்ற அணிகளை விட அதிகமான பணம் வைத்திருக்கும் பஞ்சாப் அணி விட்டு கொடுக்க தயாராகாததால், ஜெய் ரிச்சர்ட்சன் 14 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணிக்கு ஏலம் போயுள்ளார்.ஜெய் ரிச்சர்ட்சன் சிறந்த பந்துவீச்சாளர் தான் என்றாலும், 14 கோடி ரூபாய் என்பது மிக அதிகமான தொகையாகவே பலரால் பார்க்கப்படுகிறது.

Gowtham

கிருஷணப்ப கௌதம்(9.25 கோடி) :

சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி போட்டி மிக சிறப்பாக செயல்பட்ட ஆல்-ரவுண்டர் கிருஷ்ணப்ப கவுதம் சென்னை அணிக்கு யாரும் எதிர்பாராத விதமாக 9 கோடியே 25 லட்சத்திற்கு ஏலத்தில் போனார். ஏன் சென்னை அணி இவரை இவ்வளவு அதிக தொகை கொடுத்து எடுத்தது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் தங்களது கேள்வியை எழுப்பியுள்ளனர்.