இந்திய அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள டாப் 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Match

இந்திய அணிக்காக நீண்டகாலம் விளையாடி அவர்களில் 5 வீரர்கள் மட்டும் தான் இந்திய அணி சார்பாக சர்வதேச அளவில் 420 போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ளனர். அப்படி இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலை பார்ப்போம். வாய்ப்புக்காக பல இளம்வீரர்கள் காத்திருக்கும் வேளையில் அசாத்தியமான திறமையால் பல ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய வீரர்களின் பட்டியல் இதோ

Sachin 1

சச்சின் டெண்டுல்கர் :

- Advertisement -

இந்திய அணிக்காக 1989 ஆம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை 24 ஆண்டு காலம் விளையாடினார். மொத்தம் 200 டெஸ்ட் போட்டிகளிலும், 463 ஒருநாள் போட்டியிலும், ஒரு டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவரைப் பற்றி பெரிதாக சொல்லத் தேவையில்லை. அந்த அளவிற்கு கிரிக்கெட் என்றாலே சச்சின் எனும் அளவிற்கு புகழ் பெற்றவர் கிட்டத்தட்ட 35,000 ரன்களும் 100 சதங்களும் குவித்துள்ளார்.

Dhoni

மகேந்திர சிங் தோனி :

- Advertisement -

சச்சினுக்கு அடுத்த இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தவர் மகேந்திர சிங் தோனி, இவர் 2004 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார், 16 வருடங்களில் 538 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். மொத்தம் 16,266 ரன்கள் குவித்துள்ளார். 90 டெஸ்ட் போட்டிகளிலும் 350 ஒருநாள் போட்டியிலும் 98 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

Dravid

ராகுல் டிராவிட் :

1996ஆம் ஆண்டிலிருந்து 2012 வரை இந்திய அணிக்காக விளையாடியவர் ராகுல் டிராவிட். இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்பட்டவர். இவர் மொத்தம் 509 போட்டிகளில் விளையாடி 24,200 ரன்கள் குவித்துள்ளார் 164 டெஸ்ட் போட்டிகளிலும் 344 ஒருநாள் போட்டியிலும் ஒரு டி20 போட்டிகளில் இந்திய அணியின் உடையை அணிந்து விளையாடியிருக்கிறார். இதன்மூலம் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார் டிராவிட்.

Azharuddin

முகமது அசாருதீன் :

இந்திய அணியின் கேப்டனாக இருந்த இவர். 433 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 15,593 ரன்கள் குவித்துள்ளார். மொத்தம் 99 டெஸ்ட் போட்டிகளிலும் 334 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 1984 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார்.

Ganguly

சவுரவ் கங்குலி :

இந்திய அணி உருவாக்கிய மிகச் சிறந்த கேப்டன்களில் இவரும் ஒருவர் .கொல்கத்தாவை சேர்ந்த இவர் 424 போட்டிகளில் இந்திய அணியின் உடையை அணிந்து விளையாடி 18175 ரன்கள் குவித்துள்ளார். இவர் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடியது இல்லை. 113 டெஸ்ட் போட்டிகளிலும் 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

Advertisement