டி20 கிரிக்கெட் வரலாற்றில் டாப் 5 ஸ்கோரை பதிவு செய்த அணிகளின் பரிதாப பட்டியல்

- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் ரசிகர்களின் அபிமான வடிவமாக உருவெடுத்துள்ள டி20 போட்டிகளில் எந்த துறையாக இருந்தாலும் அதிரடியான அணுகுமுறையுடன் செயல்படுவது மட்டுமே வெற்றியை பரிசாக கொடுக்கும். அதற்கு பேட்டிங் துறையில் எதிரணி பவுலர்களுக்கு கருணை காட்டாமல் உருண்டு பிரண்டாவது அதிரடி சரவெடியாக விளையாடி பெரிய ரன்களை குவித்து தங்களது அணியை வெற்றி பெற வைப்பது பேட்ஸ்மேன்களின் கடமையாகும். இருப்பினும் சில சமயங்களில் வல்லவனுக்கு வல்லவனாக பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நிறைந்த கிரிக்கெட்டில் ஆடுகளத்தின் உதவியுடன் பவுலர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி முரட்டுத்தனமான பேட்ஸ்மேன்களையும் கூட சொற்ப ரன்களில் காலி செய்வார்கள்.

அதிலும் குறிப்பாக இடைவெளியே விடாமல் அடுத்தடுத்த ஓவர்களில் தங்களது அதிரடியான பந்து வீச்சால் சீட்டுக்கட்டு சரிவது போல எதிரணி பேட்ஸ்மேன்களை சாய்த்து தங்களது அணிக்கு பவுலர்கள் பிரம்மாண்ட வெற்றியை பரிசளிப்பார்கள். இருப்பினும் அது போன்ற நிகழ்வு அரிதாகவே நடைபெறும் நிலையில் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள டாப் 5 ஸ்கோர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. மாலி, திரிபுரா, மாலி, தாய்லாந்து 30: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி கிரிக்கெட்டில் கத்துக்குட்டியாக பார்க்கப்படும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஒரு ஐசிசி தகுதி சுற்றில் முதலில் கென்யாவுக்கு எதிராக 10.4 ஓவரில் சீட்டுக்கட்டு போல 30 ரன்களுக்கு சுருண்டு மோசமான சாதனை படைத்த அந்த அணி அடுத்த 4 நாட்களில் மீண்டும் அதே தொடரில் ரவான்டா அணிக்கு எதிராக 12.3 ஓவரில் 30 ரன்களில் சுருண்டு இந்த பட்டியலில் 2 முறை இடம் பிடித்துள்ளது.

அந்த தொடரில் மற்றொரு கத்துக்குட்டியான தாய்லாந்து அணி மலேசியாவிடம் 13.1 ஓவரில் 30 ரன்களுக்கு சுருண்டு தங்களது பெயரையும் இந்த பரிதாப பட்டியலில் சேர்த்துக் கொண்டது. அதற்கு முன்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக திரிபுரா அணி 11.1 ஓவரில் 30 ரன்களுக்கு சுருண்டு இந்திய அளவில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணியாக இந்த பட்டியலிலும் 5வது இடம் பிடித்துள்ளது.

- Advertisement -

4. துருக்கி 28: கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி கான்டினென்சியல் கோப்பையில் லக்சம்போர்க் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 11.3 ஓவரில் 28 ரன்களுக்கு சுருண்ட துருக்கி அணி இந்த பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளது.

3. லெசோதோ 26: ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மற்றொரு சிறிய நாடான லெசோதோ அணி கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை மண்டல துணைத் தகுதி சுற்று போட்டியில் உகாண்டாவுக்கு எதிராக 12.4 ஓவரில் 26 ரன்களுக்கு சுருண்டு இந்த பட்டியலில் 3வது இடம் பிடித்தது. அந்த அணியின் கேப்டன் சமீர் பட்டேல் மட்டும் இரட்டை இலக்க ரன்களைத் தொட்டு 10 ரன்கள் எடுத்த நிலையில் உகண்டா சார்பில் தினேஷ் நக்ரணி 6 விக்கெட்டுகளை சாய்தது எளிதான வெற்றிக்கு உதவினார்.

- Advertisement -

2. துருக்கி: மீண்டும் நானே வருவேன் என்பது போல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கான்டினென்சியல் கோப்பையில் முதலில் பேட்டிங் செய்த சீசக் குடியரசு அணி 278 ரன்களை குவித்து மிரட்டியது. அந்த அளவுக்கு பந்து வீச்சிலேயே அடி வாங்கிய துருக்கி அணி பேட்டிங்கில் அதைவிட மோசமாக செயல்பட்டு 8.3 ஓவரில் வெறும் 21 ரன்களுக்கு சுருண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக இப்போதும் மோசமான உலக சாதனை படைத்துள்ளது.

1. சிட்னி தண்டர்ஸ்: ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற பிக்பேஷ் லீக் தொடரின் 2022 சீசனில் டிசம்பர் 16ஆம் தேதியன்று நடைபெற்ற 5வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் போராடி 139/9 ரன்கள் சேர்த்தது. அதை துரத்திய சிட்னி தண்டர்ஸ் எதிரணி பவுலர்களிடம் பதில் சொல்ல முடியாமல் சீட்டு கட்டு போல வெறும் 5.5 ஓவரில் சரிந்து 15 ரன்களுக்கு சுருண்டது.

இதையும் படிங்க: